எதார்த்தம் புரிவோம்
எதார்த்தம் புரிவோம்
காலை சிந்தனை பாகம் எட்டு
<><><><><><><><><><>
J . Yaseen iMthadhi
•••••••••••
ஒரு மனிதனின் விருப்பத்திற்கு ஏற்று நம்மை நாம் மாற்றி கொள்வதை விட
அவனது நலனுக்கு ஏற்று நம்மை நாமே மாற்றி கொள்வதும்
ஒரு மனிதனின் திருப்தியை பெற நாம் நடிப்பதை விட
நம் வாழ்கை திருப்திக்கு ஏற்று நாம் வாழ்ந்து காட்டுவதும்
வறுமையை அஞ்சி நாம் வாழ்வதை விட
இருப்பதை கொண்டு திருப்தியடையும் தன்மையை நம்மில் வளர்த்தி கொள்வதும் தான்
மனிதனின் நல் வாழ்வுக்கு ஏற்றது யாராலும் இயன்றது
இயலாலததை நோக்கி வீண் பயணம் செய்வதை விட இயன்றதை நோக்கி நம் நேரத்தை கழிப்பதும்
இல்லாததை நினைத்து வருந்துவதை விட
கைவசம் இருப்பதை கொண்டு மகிழ்சியடைவதும் நம் மனதுக்கு சாந்தம் தரும்
இதுவா அதுவா ?
என்ற பறக்கும் மனம் நம் வாழ்கை சிறகை முறிக்கும்
இதுவே சரியே என்ற மனக்கட்டுப்பாடு தான் நம் மனதையும் பக்குவமாய் நம்மில் இணைக்கும்
இது பழமொழி அல்ல எதார்த்த நடைமுறை
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment