படிப்பறிவு பொதுஅறிவு

    காலை சிந்தனை பாகம் ஏழு
      படிப்பறிவு பொது அறிவு
         <><><><><><><><><><>
          J . Yaseen iMthadhi
                     •••••••••••

படிப்பறிவு வேறு
பொது அறிவு வேறு

ஒரு மனிதன் உலகில்  வாழ்வதற்கு பொது அறிவு போதுமானது

படிப்பறிவு பொருளியல் பலத்தை கூட்டுவதற்கு தானே தவிர அது படித்தால்  தான் மனிதன் நல்லவனாக ஏழ்மைக்கு அப்பாற்பட்டவனாக நிம்மதியாக  வாழ முடியும் என்பது அல்ல
அது கல்வியாளர்களால் செயற்கையாக  ஊட்டப்பட்டுள்ள ஒரு மாயை

அதன் விளைவே இந்தியாவில் தற்கொலை புள்ளி விபரத்தில் படித்தவர்கள் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது

உயிரை மாய்கும் அளவு தேர்வு செய்யும்  துறை ஒருவனின் பகுத்தறிவை முடக்கினால் அதற்கு பெயர் கல்வி அல்ல மாறாக அதுவே  போதை

போதை எந்த வடிவில் இருந்தாலும் அது மனிதனுக்கு விளைவுகளை தான் எற்படுத்தும்

கல்வி கண்ணை போன்றது என்பது மெருகூட்டும் சொல் உயிரே பொன்னை விட மேலானது என்பது தான் நடைமுறை  உண்மை

தற்கொலை தான் எதற்கும் தீர்வு என்று ஒருவன் முடிவு செய்தால்  அந்த மனிதன் தற்கொலை செய்து கொள்வது தான் அவனை பொறுத்தவரை மேலானது
காரணம் அவன் உயிருடன் இருந்தாலும்  தனது சந்ததிகளை நிச்சயமாக மூடனாக  கோழையாக மட்டுமே  வளர்த்துவான்

        நட்புடன்  J . இம்தாதி

Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்