முஸ்லிம்களின் அரசியல் பயணம்
முஸ்லிம்களின் அரசியல்
பயணம்
<><><><><><><><><><>
29:09:2020
J . Yaseen iMthadhi
•••••••••••
இயக்கங்களும் இஸ்லாமிய பெயரில் செயல்படும் கட்சிகளும் முஸ்லிம் சமுதாய முன்னேற்றத்திற்கு என்பதே அனைத்து தலைவர்களும் தொடர்ந்து நெடுங்காலமாக சொல்லி வரும் செய்தியாகும்
அரசாங்கத்தாலும் இஸ்லாமிய எதிரிகளாலும் முஸ்லிம் சமூகத்திற்கு பாதிப்பு ஏற்படும் போது அந்நேரத்தில் முஸ்லிம் சமூகத்திற்கு குரல் கொடுப்பதற்காக ஒரே மேடையில் கைகோர்த்து இணைந்து நிற்கும் அனைத்து தலைவர்களும் தேர்தல் நேரங்களில் மாத்திரம் வழமை போல் பிளவுபட்டு செயல்படுவதையும்
சீட்டுகளை பெறுவதற்கு அரசியல் தலைவர்களின் பதிலை எதிர் பார்த்து காத்திருப்பதையும் கண்டு வருகிறோம்
ஒரே தொகுதியில் இரு இஸ்லாமிய கட்சிகள் களத்தில் எதிர் எதிரே நின்று முஸ்லிம்களின் ஓட்டுக்களை சிதற செய்து கொண்டிருப்பதும் முஸ்லிம் சமுதாய ஓட்டுக்களை வலுவற்றதாக மாற்றுவதும் தான் நடைமுறையாக இருந்து வருகிறது
ஒரு முஸ்லிம் எந்த கட்சி சார்பாக ஒரு தொகுதியில் வேட்பாளராக போட்டியிட்டாலும் அல்லது தனித்து போட்டியிட்டாலும் அந்த தொகுதியில் உள்ள அனைத்து இஸ்லாமிய கட்சிகளும் அந்த முஸ்லிம் வேட்பாளருக்கு ஆதரவளித்து அனைத்து முஸ்லிம்களையும் அவருக்கே ஓட்டு போட சொல்லி வழி காட்ட வேண்டும்
அந்த வழிமுறை தான் இனி எதிர்காலத்தில் முஸ்லிம் சமுதாயத்திற்கு
பயன்படும்
ஒரு தொகுதியில் முஸ்லிமை வேட்பாளராக நிறுத்தினால் அந்த தொகுதியில் வசிக்கும் அனைத்து முஸ்லிம்களும் அவருக்கு தான் வாக்களிப்பார்கள் என்ற ஆழமான எண்ணத்தை அனைத்து அரசியல் கட்சி தலைவர்களையும் உணர வைக்க வேண்டும்
இது தான் இனி வருங்காலத்தில் முஸ்லிம் சமுதாயத்தை அரசியல் ரீதியாக முன்னேற்றி செல்லுமே தவிர இதுவரை நடைமுறையில் இருக்கும் எந்த ஒன்றும் அரசியலில் முஸ்லிம்களை முன்னேற்றிவிட பயன்படாது என்பதை எழுபது வருடமாக அனுபவத்தில் பார்த்து விட்டோம்
அதன் காரணமாக தான் முஸ்லிம் சமுதாயத்தின் ஓட்டு எங்களுக்கு தேவையே இல்லை என்று அதிமுக MP பாலாஜி கூட சமீபத்தில் பகிரங்கமாக பேட்டி கொடுத்தார்
முஸ்லிம் சமுதாயம் மாறி மாறி ADMK அல்லது DMK கட்சிகளுக்கு தான் ஓட்டு போட்டு ஆக வேண்டும் என்ற எண்ணமே இரு கட்சி தலைவர்களிடமும் அசைக்க முடியாத நம்பிக்கை வளர்ந்து விட்டது
நாட்டு மக்கள் பாதிக்கப்படும் நேரங்களில் முஸ்லிம் சமுதாயத்தின் சேவைகளும் தியாகங்களும் தான் முன்னனியில் அமைந்துள்ளது என்பதை உணர்ந்த எந்த கட்சிக்கும் அந்த முஸ்லிம் சமுதாயத்தையும் அரசியல் அதிகாரம் பெறும் இடத்தில் அமர வைக்க வேண்டும் என்ற எண்ணம் கடுகளவும் இல்லை
மறுமை வாழ்வை நம்பாத மக்களை போலவும் பாமரர்களை போலவும் நாமும் இந்திய அரசியல் கட்சிகளையும் அதன் தலைவர்களையும் தூற்றியும் போற்றியும் அர்ப் பதவிகளை நாடியுமே ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயத்தின் தனித்துவத்தை இழக்க வைத்து விட்டோம்
சுதந்திர பெற்ற நாளில் வலுவற்று இருந்த பீஜேபி கட்சி இப்போது நாட்டையே ஆளும் நிலைக்கு அரசியலில் பல சூழ்ச்சிகளை தந்திரங்களை செய்து பல அடிகளை தொட்டு விட்டனர்
சுதந்திரத்திற்கு மூலமாக செயல் பட்ட முஸ்லிம் சமுதாயமோ இந்திய நாட்டில் வாழ்வதற்கு கூட தகுதியற்றவர்கள் என்ற அளவில் CAA NPR NRC சட்டத்தை எதிர் கொள்ளும் சுதந்திர போராட்டத்தை செய்யும் அளவு முடமாக்கப்பட்டு விட்டோம்
மார்க்க ரீதியில் எந்த பாதை சரி என்று படுகிறதோ
எந்த அமைப்பு தேவை என்று படுகிறதோ அதில் வழமை போல் நிலையாக இருங்கள் அவ்விசயத்தில் ஒற்றுமை பேசி அனைவரையும் ஒன்றிணைக்க இயலாது
ஆனால் அரசியல் ரீதியாக ஒற்றுமை என்பது மிகவும் எளிமையானது
அரசியல் ரீதியாக இஸ்லாமிய கட்சிகளையும் அதன் தலைவர்களையும் மையமாக வைத்தே இனியும் செயல்பட்டு கொண்டிருந்தால் எக்காலமும் இந்திய அரசியலில் நாம் முன்னேற்றத்தை அடைய இயலும் என்று கற்பனை கூட செய்ய முடியாது
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment