இதயத்தில் இடம் பிடிக்காத திருக்குர்ஆன்
இதயத்தில் இடம் பெறாத
இறைவேதம்
*******
20-09-2020
J . Yaseen iMthadhi
Bismillahir Rahmanir Raheem
கட்டுரை 1375
====================
அரசியல் மீது முஸ்லிம்களுக்கு இருக்கும் ஆர்வம்
எதிரிகளுக்கு பதில் கூறுவதில் முஸ்லிம்களுக்கு இருக்கும் ஆர்வம்
பொழுதுபோக்குகளில் சினிமா சீரியல்களில் முஸ்லிம்களுக்கு இருக்கும் ஆர்வம்
இயக்கத்தை அல்லது தனி மனிதனை போற்றுவதில் அல்லது தூற்றுவதில் அவர்களுக்கு விளம்பரம் செய்வதில் முஸ்லிம்களுக்கு இருக்கும் ஆர்வம்
இறைவன் வழங்கிய தூய மார்க்கத்தை அறிவதில் குறைந்தபட்சம் இருந்திருந்தால் கூட இஸ்லாத்தின் தாக்கம் எப்போதோ முஸ்லிம்களின் வாழ்வில் பிரகாசமாய் இருந்திருக்கும்
திருக்குர்ஆனில் கூறப்பட்ட நபிமார்கள் பெயர்கள்
சூராக்களின் பெயர்களை கூட வரிசையாக காணாது சொல்ல தெரியாத அவலம் பரம்பரை முஸ்லிம் என்று தம்பட்டம் அடிக்கும் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டு இருக்காது
குர்ஆனை அதன் மூலமொழி அமைப்பில் கூட ஓத தெரியாதவர்கள் குர்ஆனை நேசிப்பதாக கூறுவது வாய் வார்த்தையாக தான் புரிய முடிகிறது
இன்று அதிகாலை எழுந்தது முதல் பல செய்திகளை படித்த கண்கள்
பல காட்சிகளை பார்த்த கண்கள்
திருமறை வசனங்களில் பத்து வசனங்களை கூட பார்ப்பதற்கு நேரம் ஒதுக்கி இருக்காது என்பதை அவரவர் யோசித்து பார்த்தாலே புரிய முடியும்
முஸ்லிம்களின் இதயத்தில் இருக்க வேண்டிய திருக்குர்ஆன் அவர்களின் இல்லங்களில் மட்டுமே தனி இடம் பிடித்துள்ளது
உள்ளத்தில் தங்க வேண்டிய குர்ஆன் வெறுமனே அரபு எழுத்துக்களால் மட்டும் முஸ்லிம்களின் இல்லங்களில் தொங்கி கொண்டுள்ளது
சுருக்கமாக சொன்னால் இதயத்தில் இடம் பெறாத இறைவேதமாக மாத்திரம் குர்ஆன் அநேக முஸ்லிம்களிடம் காணப்படுகிறது
وَاِذَا قَرَاْتَ الْقُرْاٰنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِيْنَ لَا يُؤْمِنُوْنَ بِالْاٰخِرَةِ حِجَابًا مَّسْتُوْرًا ۙ
(நபியே!) நீர் குர்ஆனை ஓதினால் உமக்கிடையிலும் மறுமையின் மீது ஈமான் கொள்ளாதவர்கள் இடையிலும் மறைக்கப்பட்டுள்ள ஒரு திரையை அமைத்து விடுகிறோம்
(அல்குர்ஆன் : 17:45)
நட்புடன் J. இம்தாதி
Comments
Post a Comment