Posts

Showing posts from September, 2019

ரஜினியின் உளரல்

   பிரம்மனையே குழப்பும்              ரஜினிகாந்த்             ××××××××××××        J . Yaseen iMthadhi                 19-09-19          ★ *************★ தேசியத்துக்கு என்று ஒரு மொழி தேவை அவ்வகையில் இந்தி மொழியே  தேசிய மொழியாக இந்திய மக்கள் ஏற்க வேண்டும் என்று பீஜேபி  அமித்ஷா கூறுவதை அவரது சொந்த கருத்தாக ஏற்பதில் பிரச்சனை இல்லை காரணம் அது நடைமுறைக்கு வரப்போவது இல்லை ஆனால் அமித்ஷா கூறிய கருத்தை மக்கள் எதிர்ப்பது துரதிர்ஷ்டம் என்றும் அமித்ஷா கூறும்  இந்தி மொழியை தேசிய மொழியாக ஏற்கும் மனநிலையில் மக்கள் இல்லை என்றும் வழக்கம் போல் உளரலையும் பீஜேபி கட்சிக்கு மறைமுகமான ஆதரவையும்  ரஜினிகாந்த் பேட்டியாக கொடுத்துள்ளார் இக்கருத்தை ரஜினியின் தமிழ்  ரசிகர்கள் கூட ஏற்க மாட்டார்கள் காரணம் அரசியலில் களம் இறங்குவேன் என்று முடிவு செய்வதற்கு  பல வருடங்கள்  யோசித்தவர் இனி அவர் அரசியல் கட்சியை ஆரம்பிப்பதற்குள் அவருடைய ரசிகர்களில் பலர்கள் எமலோகம் சென்று விடும் நிலைமையை  தான் சந்திப்பார்கள் ஒரு வேளை எமலோகத்தில் கட்சியை தொடங்கும் நிலை ஏற்பட்டால் கூட அங்கேயும்  ஆண்டவன் கட்டளை அது என்றால் அதை யாராலும்

ஹிந்தி மொழியை எதிர்ப்பது ஏன்

       ஹிந்தி மொழியை    ஏன் எதிர்க்க வேண்டும்          •••••••••••••••••••••••                 17-09-19    J . Yaseen ( iMthadhi )            <><><><><><><> இஸ்லாமிய பார்வையில் ஹிந்தி என்பதும் சாதாரணமாக மனிதர்கள் வழக்கில்  பேசும் ஒரு மொழி தான் அந்த மொழியை பிறர்களிடம்  திணிப்பதும் எதிர்ப்பதும் ஒரே தரத்தில் உள்ள நிலை தான் ஆனாலும் தமிழர்கள் குறிப்பாக முஸ்லிம்களில் சிலர்கள் ஹிந்தி மொழியை தமிழகத்தில்  எதிர்ப்பது ஏன்  ? ஹிந்தியை எதிர்ப்பதால் நமக்கு கிடைக்கும் பலன் என்ன ? ஹிந்தியை வரவேற்பதால் நாம் பேசும் தமிழ் மொழி அழிந்து விடுமா  அல்லது வேறு விதமான இழப்புகள் ஏற்படுமா  ? அவ்வாறு இருந்தால்  ஆங்கில மொழியில் பிள்ளைகள் படிப்பதையும் அந்த மொழியில்  பேசுவதையும் தமிழர்கள்  ரசிப்பது ஏன்  ? அரசியல் பார்வைக்கு அப்பாற்பட்டு இதற்கு நியாயமான விளக்கம் கூறுவோர் கருத்துக்களை பதிவிடலாம் இஸ்லாமிய பார்வையில் மொழிகளை பற்றிய சிறு உரை லின்ங்  https://youtu.be/dePRdOwv6_Y                   ******** https://youtu.be/9HTM95Rv6x4                  *********

பலி வாங்கும் கட்டவுட் கலாச்சாரம்

      பலி வாங்கும் கட்டவுட்             கலாச்சாரம்      ************************                    15-09-19         கட்டுரை எண் 1267       !!J . Yaseen iMthadhi !!              *************                       ﷽                 !!!!!!!!!!!!!!!!! கல்யாண வீடு முதல் கருமாறி வீடு வரை அரசியல்வாதி முதல் அடி தட்டு மக்கள் வரை கூத்தாடிகள் முதல் ஆன்மீகவாதிகள் நடத்தும்  திருவிழாக்கள் வரை ஃபிளக்ஸ் மற்றும் விளம்பர போர்ட் கலாச்சாரமும் சிலை வைப்பு  கலாச்சாரமும் கட்டவுட் இந்தியாவில் தலை விரித்து ஆடுகிறது விளம்பர போர்ட்டுகளை வைப்பதற்காக பூமியின் பசுமையாக விளங்கும் மரம் மற்றும் செடிகளை வெட்டி இயற்கை வளங்களை நாசமாக்கும் மடமைத்தனம் நாளுக்கு நாள்  பெருகி விருகிறது 5000 ரூபாய் மதிப்புள்ள பேனர்களை வைப்பதற்காக நூறு  ஆண்டு காலம் நிழல் தரும் மரங்களை வெட்டி குப்பையில் வீசப்படுகிறது சினிமா நடிகர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் கட்அவுட்டுகளுக்கு பால் அபிஷேகம் செய்யும் அளவு மனிதர்களின் மூளை மூடத்தனத்தால் நிறைந்து பகுத்தறிவு  மழுங்கி விட்டது குடும்பங்களுக்கு 200 ரூபாய் இலவசங்களை கொடுத்து ஏமாற்றும் நி

அழகிய அணுகுமுறை

   அழகிய அணுகுமுறையே              தீர்வை தரும்       *************************                    11-09-19         கட்டுரை எண் 1266       !!J . Yaseen iMthadhi !!              *************                       ﷽                 !!!!!!!!!!!!!!!!! பாதிக்கப்பட்டதாக கருதும் மனிதன் தனக்கு சட்ட ரீதியாகவும் வேறு நியாயமான  வழிகளில் நீதி கிடைக்காத சூழலில் தனது சக்திக்கு இயன்ற குறுக்கு வழிகளையும் பிறரது தவறான சட்டத்திற்கு எதிரான கொடூரமான  ஆலோசனைகளையும் கேட்க முற்படுவான் தற்கொலை தீவிரவாதம் போன்ற மடமைத்தனமான வழிமுறைகளை மனிதன் தேர்வு செய்வதற்கும்  சட்டங்களை  மீறி நடப்பதற்கும்  இது தான் மூல காரணம் நியாயமான வழிகளை தான் பின்பற்ற வேண்டும் என்ற நிலையில் இருக்கும் மனிதர்களை கூட நாளடைவில் ஏளனம் செய்ய  துவங்குவான் இத்தகைய சூழலில் நமது நண்பர்களோ உறவுகளோ சிக்கி தவிப்பதை  காணும் போது அவர்களது  விரக்தியை போக்கும் விதமாக சிறந்த ஆலோசனைகளை சொல்லி தர வேண்டுமே தவிர சட்ட ரீதியான நியாயமான வழிமுறைகளை  கற்று தர வேண்டுமே தவிர இன்னல்களும் சோதனைகளும் மனித வாழ்வில் இயல்பானது என்பதை நடைமுறை ரீதியாக  புரிய வை

இஸ்ரோ லேன்டர் வாகனம்

        இஸ்ரோ லேன்டர்      இறைவனை சிந்திக்க           வழி வகுத்தது     *************************                    08-09-19         கட்டுரை எண் 1265       !!J . Yaseen iMthadhi !!              *************                       ﷽                 !!!!!!!!!!!!!!!!! பூமியில் இருந்து வான்வெளியில் 3.85000 கிலோ மீட்டர் வரை பயணம் செய்த இந்திய திருநாட்டின் இஸ்ரோ சந்திராயன் 2 விண்கலம்  நிலவின் தரையை எட்டும் இரண்டு கிலோ மீட்டர் அருகில் சென்ற போது திடீரென தொடர்பு துண்டிக்கப்பட்டு ஒட்டு மொத்த இந்திய திருநாட்டின் மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது பல மாதம் திட்டமிட்டு மகிழ்சியோடு பல்லாயிரம் ரூபாய்களை செலவு செய்து மணமகள் திருமண மேடையில் இருக்கும் நேரம் வருகை தர வேண்டிய மணமகன் திடீரென  மாயமானார் என்ற தகவல் போல் பெரும் சோகத்தை இஸ்ரோ மற்றும் இந்திய மக்கள் அடைந்து  விட்டனர் நிலவின் தரையில் சந்திராயன் 2  லேன்டர்  வாகனம் தரை இறங்கியதா ? அல்லது வெடித்து சிதறியதா ? என்கின்ற இறுதி கட்டம் இப்போது நிலவை படைத்த இறைவனுக்கு மட்டுமே அறிந்த ஞானமாக மாறி விட்டது விஞ்ஞான அறிவை வைத்து இறைவனை மறந்தும் மற

விண்ணை விட மண்ணே மனிதனுக்கு ஏற்றது

  விண்ணை விட மண்ணே       மனிதனுக்கு ஏற்றது             *************     *************************                    07-09-19         கட்டுரை எண் 1264       !!J . Yaseen iMthadhi !!              *************                       ﷽                 !!!!!!!!!!!!!!!!! விண்ணை ஆய்வு செய்யும் அறிவியல் துறை அதற்காக பல விண்கலங்களை உருவாக்குவதற்கும் அவைகளை விண்ணில்  அனுப்புவதற்கும் பல லட்சம்  கோடிகளை செலவழித்து வருவது சாதனையாக பேசப்பட்டு வருகிறது இதன் மூலம் மனிதனின் அறிவாற்றலின் எல்லையை இதுவரை  புரிந்து கொள்ள முடிந்ததே தவிர அதன் மூலம் மனித சமுதாயத்திற்கு எதிர் பார்த்த பலன் இதுவரை கிடைக்கவில்லை என்பது மட்டும்  தான் உண்மை இன்னும் இதற்காக பல்லாயிரம் கோடிகளை செலவழித்து முயற்சி செய்தாலும் அதன் மூலம் மனித சமுதாயத்திற்கு பெருமளவு உபயோகம் இல்லை என்பது தான் திருகுர்ஆன் கூறும் உண்மையாகும் காரணம் மனிதன் வாழ்வதற்கு ஏற்ற நிலையில் நாம் வாழ்கின்ற பூமியை மாத்திரம் தான் இறைவன் மிகவும் நுட்பமாக படைத்துள்ளான்   மனிதன் வாழ்கின்ற பூமியின் இயற்கை வளங்களை நாசமாக்கும் காரியங்களை தொடர்ந்து செய்து கொண்ட

பிர்அவ்ன் சாகவில்லை

   பிர்அவ்ன் சாகவில்லை       *********************                 06-09-19         கட்டுரை எண் 1264       !!J . Yaseen iMthadhi !!              *************                       ﷽                 !!!!!!!!!!!!!!!!! புனிதம் வாய்ந்த முஹர்ரம் மாதத்தில் இறைவன் பிர்அவ்ன் என்ற அரக்கனிடம் இருந்து பனூ இஸ்ராயீல் சமூகத்தை நபி மூஸா ( அலை)அவர்கள்  மூலம்  காப்பாற்றினான் என்பது தான் முஸ்லிம்கள்  அறிந்து வைத்துள்ள வரலாறு பிர்அவ்ன் என்ற பெயர் மூஸா (அலை ) அவர்கள் காலத்தில் வாழ்ந்த தனிப்பட்ட நபருக்கு குறிப்பிடும் பெயர் அல்ல மாறாக எகிப்தை ஆளும் சர்வாதிகார ஆட்சியாளர்கள் அனைவருக்கும் அக்காலத்தில் குறிப்பிட்டு வந்த  பொதுவான பெயரே  பிர்அவ்ன் என்பதாகும் நாம் தற்காலத்தில் குறிப்பிடும் பிரதமர் மன்னர் என்பதை போல் உள்ள ஒரு வார்தையே பிர்அவ்ன் ஆகும் உலக அரங்கில் இப்போதும் பிர்அவ்ன் ஆட்சியை அரங்கேற்றி வரும் அடக்கு முறை ஆட்சியாளர்கள் அநேகர் உள்ளனர் அது போன்றோர் தங்களது ஆதிக்க ஆட்சி முறையை மாற்றி கொள்ளாவிட்டால் அவர்களும் பிர்அவ்ன் போன்ற இழிநிலையை நிச்சயம் மறுமையில் சந்திப்பார்கள் என்பதே குர்ஆன் கூறும் ப

பொய்யை மெய்யாக்கும் பிறவிகள்

  பொய்யை மெய்யாக்கும்                பிறவிகள்     *************************                    04-09-19         கட்டுரை எண் 1263       !!J . Yaseen iMthadhi !!              *************                       ﷽                 !!!!!!!!!!!!!!!!! ஒரு பொய்யை திருப்பி திருப்பி சொல்லுகின்ற போது அது மெய்யாக மக்கள் மனதில் தோற்றம் தரும்  என்பது எதார்தமான உண்மை மனித சமுதாயத்தில் இது போன்ற இழிகுணம் கொண்டவர்கள் அநேகம் உள்ளனர் இவ்வாறு பொய்களை பரப்பி ஒரு மனிதனை பற்றி தவறான  தோற்றத்தை  உருவாக்குவதற்க்கு தனி திறமை தேவை இல்லை யாரும் யாரை பற்றியும் இது போல் போலி சித்திரத்தை உருவாக்க இயலும் இறையச்சத்தை ஒதுக்கி வைத்து விட்டு இதே வேலையாக சிந்திக்கும் மனிதனுக்கு இது மிகவும் சுலபமான விசயமாகும் சத்தியத்தில் நிலையாக  நிற்பவர்களுக்கு இந்த அவதூறு பிரச்சாரம் சில உளவியல் சங்கடங்களை  ஏற்படுத்தினாலும் இதனால் எந்த விதமான பாதிப்பும் அவர்களின் வாழ்கையில்  ஏற்படாது காலங்கள் கடக்கும் போது   மக்கள் மனதில் நல்ல எண்ணத்தை தான் இது போன்றோரின்  அவதூறு பிரச்சாரம் நிச்சயம் ஏற்படுத்தும் நாளடைவில் பொய் பிரச்சாரத்த