ரஜினியின் உளரல்

   பிரம்மனையே குழப்பும்
             ரஜினிகாந்த்
            ××××××××××××
       J . Yaseen iMthadhi
                19-09-19
         ★ *************★

தேசியத்துக்கு என்று ஒரு மொழி தேவை அவ்வகையில் இந்தி மொழியே  தேசிய மொழியாக இந்திய மக்கள் ஏற்க வேண்டும் என்று பீஜேபி  அமித்ஷா கூறுவதை அவரது சொந்த கருத்தாக ஏற்பதில் பிரச்சனை இல்லை காரணம் அது நடைமுறைக்கு வரப்போவது இல்லை

ஆனால் அமித்ஷா கூறிய கருத்தை மக்கள் எதிர்ப்பது துரதிர்ஷ்டம் என்றும்

அமித்ஷா கூறும்  இந்தி மொழியை தேசிய மொழியாக ஏற்கும் மனநிலையில் மக்கள் இல்லை என்றும் வழக்கம் போல் உளரலையும் பீஜேபி கட்சிக்கு மறைமுகமான ஆதரவையும்  ரஜினிகாந்த் பேட்டியாக கொடுத்துள்ளார்

இக்கருத்தை ரஜினியின் தமிழ்  ரசிகர்கள் கூட ஏற்க மாட்டார்கள்

காரணம் அரசியலில் களம் இறங்குவேன் என்று முடிவு செய்வதற்கு  பல வருடங்கள்  யோசித்தவர் இனி அவர் அரசியல் கட்சியை ஆரம்பிப்பதற்குள் அவருடைய ரசிகர்களில் பலர்கள் எமலோகம் சென்று விடும் நிலைமையை  தான் சந்திப்பார்கள்

ஒரு வேளை எமலோகத்தில் கட்சியை தொடங்கும் நிலை ஏற்பட்டால் கூட

அங்கேயும்  ஆண்டவன் கட்டளை அது என்றால் அதை யாராலும் தடுக்க முடியாது என்றும்

நான் வர வேண்டிய நேரத்தில் கரெக்டா வருவேன் என்றும் சினிமா டயலாக்கை  கூறியே  பிரம்மாவுக்கும் பைத்தியம் பிடிக்க  வைப்பார்

அந்தளவுக்கு திறமையான ரஜினி வாயில் இருந்து அமித்ஷாவுக்கு ஆதரவாக தமிழர்களுக்கு எதிராகவும்  பேட்டிகள் வருவது ஆச்சிரியம் இல்லை

      நட்புடன் J . இம்தாதி

Comments

  1. Very interesting blog love to spend time here and each time I found something fresh and new.
    Thanks,
    Khatrimaza

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்