பிர்அவ்ன் சாகவில்லை

   பிர்அவ்ன் சாகவில்லை

      *********************
                06-09-19
        கட்டுரை எண் 1264
      !!J . Yaseen iMthadhi !!
             ************* 

                     ﷽
                !!!!!!!!!!!!!!!!!

புனிதம் வாய்ந்த முஹர்ரம் மாதத்தில் இறைவன் பிர்அவ்ன் என்ற அரக்கனிடம் இருந்து பனூ இஸ்ராயீல் சமூகத்தை நபி மூஸா ( அலை)அவர்கள்  மூலம்  காப்பாற்றினான் என்பது தான் முஸ்லிம்கள்  அறிந்து வைத்துள்ள வரலாறு

பிர்அவ்ன் என்ற பெயர் மூஸா (அலை ) அவர்கள் காலத்தில் வாழ்ந்த தனிப்பட்ட நபருக்கு குறிப்பிடும் பெயர் அல்ல மாறாக எகிப்தை ஆளும் சர்வாதிகார ஆட்சியாளர்கள் அனைவருக்கும் அக்காலத்தில் குறிப்பிட்டு வந்த  பொதுவான பெயரே  பிர்அவ்ன் என்பதாகும்

நாம் தற்காலத்தில் குறிப்பிடும் பிரதமர் மன்னர் என்பதை போல் உள்ள ஒரு வார்தையே பிர்அவ்ன் ஆகும்

உலக அரங்கில் இப்போதும் பிர்அவ்ன் ஆட்சியை அரங்கேற்றி வரும் அடக்கு முறை ஆட்சியாளர்கள் அநேகர் உள்ளனர்

அது போன்றோர் தங்களது ஆதிக்க ஆட்சி முறையை மாற்றி கொள்ளாவிட்டால் அவர்களும் பிர்அவ்ன் போன்ற இழிநிலையை நிச்சயம் மறுமையில் சந்திப்பார்கள் என்பதே குர்ஆன் கூறும் பிர்அவ்ன் வரலாறு தரும் பாடமாகும்

சத்தியத்தை உணர்த்தும் மனசாட்சியை முடக்கி வைத்து விட்டு அசத்தியத்தை நடைமுறை படுத்தும் ஒவ்வொருவரின் உள்ளமும்  பிர்அவ்னே

ஒழுக்க வாழ்வை முடக்கி வைத்து விட்டு ஒழுங்கீன வாழ்வை ரசித்து திரியும் ஒவ்வொருவரும் பிர்அவ்னே

மனைவியை அடக்குமுறை செய்யும் ஒவ்வொரு கணவனும் பிர்அவ்னே

கணவனை அவமதித்து விட்டு தான்தோன்றிகளாக திரியும் ஒவ்வொரு மனைவியும் பிர்அவ்னே

பிள்ளைகளின்  நலனில் அக்கரை கொள்ளாது அவர்களின் வழிகேடுகளை கண்டு கொள்ளாது அசட்டையாக  இருக்கும் ஒவ்வொரு  பெற்றோரும் பிர்அவ்னே

பெற்றோர் காதில் பூவை சுற்றி விட்டு பெற்றோர்களுக்கு அவமானத்தை தேடி தரும் ஒவ்வொரு  பிள்ளைகளும் பிர்அவ்னே

மூஸா நபி (அலை ) அவர்கள் வாழ்ந்த காலத்தில் ஆட்சியில் இருந்த பிர்அவ்ன் மாண்டு விட்டான்

ஆனால் நம் காலத்தில் ஆயிரமாயிரம் பிர்அவ்ன்கள் நம்மிலும் நம்மை சுற்றிலும்  இன்னும் வாழ்ந்து கொண்டு தான் உள்ளனர்

இஸ்லாமிய வரலாற்றில் பிர்அவ்ன் அழிந்தான் என்று மகிழ்சி அடைவதை விட நம்மில் இருக்கும் பல பிர்அவ்ன்களை இன்னும் நாம் அழிக்க முயற்சிக்கவில்லை என்று எச்சரிக்கை செய்வதே இந்த பதிவின் சாரம்

كَدَاْبِ اٰلِ فِرْعَوْنَۙ وَالَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ‌ كَذَّبُوْا بِاٰيٰتِنَا ‌ فَاَخَذَهُمُ اللّٰهُ بِذُنُوْبِهِمْ‌ وَاللّٰهُ شَدِيْدُ الْعِقَابِ‏ 

(இவர்களுடைய நிலை) ஃபிர்அவ்னின் கூட்டத்தாரையும்  இன்னும் அவர்களுக்கு முன்னால் இருந்தோரையும் போன்றே இருக்கிறது
அவர்கள் நம் அத்தாட்சிகளைப் பொய்யாக்கினர்
ஆகவே அவர்களை அவர்களுடைய பாவங்களின் காரணமாகக் (கடுந்தண்டனையில்) அல்லாஹ் பிடித்துக் கொண்டான்
அல்லாஹ் வேதனை கொடுப்பதில் மிகக் கடுமையானவன்

     (அல்குர்ஆன் : 3:11)

   நட்புடன்  J . இம்தாதி

Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்