பொய்யை மெய்யாக்கும் பிறவிகள்

  பொய்யை மெய்யாக்கும்
               பிறவிகள்
    *************************   
                04-09-19
        கட்டுரை எண் 1263
      !!J . Yaseen iMthadhi !!
             ************* 
                     ﷽
                !!!!!!!!!!!!!!!!!

ஒரு பொய்யை திருப்பி திருப்பி சொல்லுகின்ற போது அது மெய்யாக மக்கள் மனதில் தோற்றம் தரும்  என்பது எதார்தமான உண்மை

மனித சமுதாயத்தில் இது போன்ற இழிகுணம் கொண்டவர்கள் அநேகம் உள்ளனர்

இவ்வாறு பொய்களை பரப்பி ஒரு மனிதனை பற்றி தவறான  தோற்றத்தை  உருவாக்குவதற்க்கு தனி திறமை தேவை இல்லை யாரும் யாரை பற்றியும் இது போல் போலி சித்திரத்தை உருவாக்க இயலும்

இறையச்சத்தை ஒதுக்கி வைத்து விட்டு இதே வேலையாக சிந்திக்கும் மனிதனுக்கு இது மிகவும் சுலபமான விசயமாகும்

சத்தியத்தில் நிலையாக  நிற்பவர்களுக்கு இந்த அவதூறு பிரச்சாரம் சில உளவியல் சங்கடங்களை  ஏற்படுத்தினாலும் இதனால் எந்த விதமான பாதிப்பும் அவர்களின் வாழ்கையில்  ஏற்படாது

காலங்கள் கடக்கும் போது   மக்கள் மனதில் நல்ல எண்ணத்தை தான் இது போன்றோரின்  அவதூறு பிரச்சாரம் நிச்சயம் ஏற்படுத்தும்

நாளடைவில் பொய் பிரச்சாரத்தில் ஈடுபடும் மனிதனே  மக்கள் மனதை விட்டு விலகி சென்று கொண்டே  இருப்பான்

சுயநலனுக்காக எதையும் செய்யும் இழிநிலையை செய்யும் இந்த மனிதன்  நாளை நம் விசயத்திலும் இது போன்ற அவதூறை  அரங்கேற்ற தயங்க மாட்டான் என்ற  எச்சரிக்கை முடிவை அவனை சார்ந்த மக்களே எடுத்து விடுவர்

அவ்வாறு முடிவு எடுப்பதற்கு நாட்கள் பல கடந்தாலும் இதன் இறுதி முடிவு இது தான்

காரணம் சூழ்சியாளனுக்கு தவறான எண்ணம் உடைய மனிதனுக்கு  இறைவன் ஒரு போதும் உதவி செய்வது இல்லை

சூழ்சியாளனே திருந்த முன் வராத வரை பிறர்களின் நல்ல ஆலோசனையை கேட்காத வரை அல்லது அனுபவத்தில் அவனது வாழ்வில்  சோதனைகளை சந்திக்காத வரை ஒரு போதும் எவருடைய படிப்பினையும் அவனை திருத்த போவது இல்லை

اِنْ تَمْسَسْكُمْ حَسَنَةٌ تَسُؤْهُمْ وَاِنْ تُصِبْكُمْ سَيِّئَةٌ يَّفْرَحُوْا بِهَا ‌ وَاِنْ تَصْبِرُوْا وَتَتَّقُوْا لَا يَضُرُّكُمْ كَيْدُهُمْ شَيْئًا  اِنَّ اللّٰهَ بِمَا يَعْمَلُوْنَ مُحِيْطٌ‏ 

ஏதாவது ஒரு நன்மை உங்களுக்கு ஏற்பட்டால் அது அவர்களுக்கு வருத்தத்தை கொடுக்கிறது

உங்களுக்கு ஏதாவது தீமை ஏற்பட்டால் அதற்காக அவர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள்
நீங்கள் பொறுமையுடனும் பயபக்தியுடனுமிருந்தால் அவர்களுடைய சூழ்ச்சி உங்களுக்கு எந்தத் தீமையும் செய்யாது
நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்வதை (எல்லாம்) சூழ்ந்து அறிகிறவன்

    (அல்குர்ஆன் : 3:120)

اَفَاَمِنُوْا مَكْرَ اللّٰهِ‌  فَلَا يَاْمَنُ مَكْرَ اللّٰهِ اِلَّا الْقَوْمُ الْخٰسِرُوْنَ‏ 
அல்லாஹ்வின் சூழ்ச்சியிலிருந்து அவர்கள் அச்சம் தீர்ந்து விட்டார்களா? நஷ்டவாளிகளான மக்களை தவிர வேறு எவரும் அல்லாஹ்வின் சூழ்ச்சியிலிருந்து அச்சம் தீர்ந்து இருக்க மாட்டார்கள்

   
      (அல்குர்ஆன் : 7:99)

    நட்புடன்  J . இம்தாதி

Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்