இஸ்ரோ லேன்டர் வாகனம்
இஸ்ரோ லேன்டர்
இறைவனை சிந்திக்க
வழி வகுத்தது
*************************
08-09-19
கட்டுரை எண் 1265
!!J . Yaseen iMthadhi !!
*************
﷽
!!!!!!!!!!!!!!!!!
பூமியில் இருந்து வான்வெளியில் 3.85000 கிலோ மீட்டர் வரை பயணம் செய்த இந்திய திருநாட்டின் இஸ்ரோ சந்திராயன் 2 விண்கலம் நிலவின் தரையை எட்டும் இரண்டு கிலோ மீட்டர் அருகில் சென்ற போது திடீரென தொடர்பு துண்டிக்கப்பட்டு ஒட்டு மொத்த இந்திய திருநாட்டின் மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது
பல மாதம் திட்டமிட்டு மகிழ்சியோடு பல்லாயிரம் ரூபாய்களை செலவு செய்து மணமகள் திருமண மேடையில் இருக்கும் நேரம் வருகை தர வேண்டிய மணமகன் திடீரென மாயமானார் என்ற தகவல் போல் பெரும் சோகத்தை இஸ்ரோ மற்றும் இந்திய மக்கள் அடைந்து விட்டனர்
நிலவின் தரையில் சந்திராயன் 2 லேன்டர் வாகனம் தரை இறங்கியதா ? அல்லது வெடித்து சிதறியதா ? என்கின்ற இறுதி கட்டம் இப்போது நிலவை படைத்த இறைவனுக்கு மட்டுமே அறிந்த ஞானமாக மாறி விட்டது
விஞ்ஞான அறிவை வைத்து இறைவனை மறந்தும் மறுத்தும் திரியும் மனித சமூகத்திற்கு லேன்டர் வாகனத்தின் முடிவு இறைவன் ஒருவன் இருக்கின்றான் என்பதையும்
அவன் நாடாது எந்த ஒன்றும் நடக்காது என்பதையும் ஆணித்தரமாக உலக மக்களுக்கு தெரிவித்து விட்டது
நிலவின் தன்மையை ஆராய்வு செய்ய துடிக்கும் மனிதன் அந்த நிலவை படைத்த சர்வ நாயகனாகிய இறைவனை பற்றி இனியாவது சிந்திப்பார்களா ?
هُوَ الَّذِىْ جَعَلَ الشَّمْسَ ضِيَآءً وَّالْقَمَرَ نُوْرًا وَّقَدَّرَهٗ مَنَازِلَ لِتَعْلَمُوْا عَدَدَ السِّنِيْنَ وَالْحِسَابَ مَا خَلَقَ اللّٰهُ ذٰلِكَ اِلَّا بِالْحَـقِّ يُفَصِّلُ الْاٰيٰتِ لِقَوْمٍ يَّعْلَمُوْنَ
அவன்தான் சூரியனைச் (சுடர்விடும்) பிரகாசமாகவும், சந்திரனை ஒளிவுள்ளதாகவும் ஆக்கினான்
ஆண்டுகளின் எண்ணிக்கையையும் காலக்கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு(ச் சந்திரனாகிய) அதற்கு மாறி மாறி வரும் பல படித்தரங்களை உண்டாக்கினான் அல்லாஹ் உண்மை(யாக தக்க காரணம்) கொண்டேயல்லாது இவற்றைப் படைக்கவில்லை
அவன் (இவ்வாறு) அறிவுள்ள மக்களுக்குத் தன் அத்தாட்சிகளை விவரிக்கின்றான்
(அல்குர்ஆன் : 10:5)
اَللّٰهُ الَّذِىْ رَفَعَ السَّمٰوٰتِ بِغَيْرِ عَمَدٍ تَرَوْنَهَا ثُمَّ اسْتَوٰى عَلَى الْعَرْشِ وَسَخَّرَ الشَّمْسَ وَالْقَمَرَ كُلٌّ يَّجْرِىْ لِاَجَلٍ مُّسَمًّى يُدَبِّرُ الْاَمْرَ يُفَصِّلُ الْاٰيٰتِ لَعَلَّكُمْ بِلِقَآءِ رَبِّكُمْ تُوْقِنُوْنَ
(இவ்வேதத்தை அருளிய) அல்லாஹ் எத்தகையவனென்றால் அவன் வானங்களைத் தூணின்றியே உயர்த்தியுள்ளான்
நீங்கள் அவற்றைப் பார்க்கிறீர்கள்
பின்னர் அவன் அர்ஷின்மீது அமைந்தான் இன்னும் அவனே சூரியனையும் சந்திரனையும் (தன்) அதிகாரத்திற்குள் வைத்திருக்கின்றான் (இவை) அனைத்தும் குறிப்பிட்ட காலத்திட்டப்படியே நடந்து வருகின்றன
அவனே (எல்லாக்) காரியத்தையும் நிர்வகிக்கின்றான்
நீங்கள் உங்கள் இறைவனைச் சந்திப்பதை உறுதி கொள்ளும் பொருட்டு, அவன் (இவ்வாறு தன்) வசனங்களை விளக்குகின்றான்
(அல்குர்ஆன் : 13:2)
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment