பலி வாங்கும் கட்டவுட் கலாச்சாரம்

      பலி வாங்கும் கட்டவுட்
            கலாச்சாரம்

     ************************   
                15-09-19
        கட்டுரை எண் 1267
      !!J . Yaseen iMthadhi !!
             ************* 

                     ﷽
                !!!!!!!!!!!!!!!!!

கல்யாண வீடு முதல் கருமாறி வீடு வரை அரசியல்வாதி முதல் அடி தட்டு மக்கள் வரை
கூத்தாடிகள் முதல் ஆன்மீகவாதிகள் நடத்தும்  திருவிழாக்கள் வரை

ஃபிளக்ஸ் மற்றும் விளம்பர போர்ட் கலாச்சாரமும் சிலை வைப்பு  கலாச்சாரமும் கட்டவுட் இந்தியாவில் தலை விரித்து ஆடுகிறது

விளம்பர போர்ட்டுகளை வைப்பதற்காக பூமியின் பசுமையாக விளங்கும் மரம் மற்றும் செடிகளை வெட்டி இயற்கை வளங்களை நாசமாக்கும் மடமைத்தனம் நாளுக்கு நாள்  பெருகி விருகிறது

5000 ரூபாய் மதிப்புள்ள பேனர்களை வைப்பதற்காக நூறு  ஆண்டு காலம் நிழல் தரும் மரங்களை வெட்டி குப்பையில் வீசப்படுகிறது

சினிமா நடிகர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் கட்அவுட்டுகளுக்கு பால் அபிஷேகம் செய்யும் அளவு மனிதர்களின் மூளை மூடத்தனத்தால் நிறைந்து பகுத்தறிவு  மழுங்கி விட்டது

குடும்பங்களுக்கு 200 ரூபாய் இலவசங்களை கொடுத்து ஏமாற்றும் நிகழ்சிகளை நடத்துவதற்கு பல லட்சம் செலவு செய்து தெருக்களில் பிரமுகர்களின் விளம்பர போர்டுகளையும் பேனர்களையும்  வைக்கும் புகழ் போதை எனும் உலவியல் நோய் மனிதனை வாட்டி வதைக்கிறது

சாதாரணமாக சிந்தித்தாலே மடமைத்தனம் என்று புரியும் இவ்விசயத்தில்

கட்டவுட்டுகள் சரிந்து பல மனிதர்களின் உயிர் பலியாகும் போது மாத்திரம் தான் இவ்வாறு வைப்பது சரியா தவறா ?  என்ற விவாதங்கள் சடங்குக்காக தொலைகாட்சிகளில்  நடத்தப்படுகின்றது

விளைவுகள் ஏற்படும் போது மாத்திரம் அப்போதைய நிலைகளை பற்றி பேசுவதும் விவாதிப்பதும்  மக்களை முட்டாளாக்கும் காரியமாகும்

இனி பேனர்கள் வைக்கும் நிகழ்சிகளில் நான் கலந்து கொள்ள மாட்டேன் என்று அறிக்கை தருவது சந்தர்ப்பத்திற்கு ஏற்று நடிக்கும் நாடகமாகும்

காரணம் இது போன்ற வீணாண கலாச்சாரங்களை உருவாக்கி அதற்கு  முன்னுதாரணமாக  திகழ்வதே நம் நாட்டு  அரசியல்வாதிகள் தான்

மனிதன் வணங்கும் தெய்வங்களுக்கு சிலை வைப்பதை கூட ஏளனமாக பேசும் பகுத்தறிவுவாதிகள் அதே ஏளனத்தை தங்கள் விசயத்தில் நடைமுறை படுத்துவது அறிவை அடகு வைக்கும் செயலாகும்

இது போன்று மக்களுக்கு தீங்கு தரும் எந்த ஒரு செயலுக்கும் இஸ்லாத்தில் கடுகளவும்  அனுமதி இல்லை

முஸ்லிம்கள் தங்கள் உயிரை விட அதிகமாக மதிக்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு 1500 வருடங்களாக முஸ்லிம்கள்  சிலை வைக்காமல் இருப்பதும்  பேனர்கள் வைக்காமல் இருப்பதும் மக்களுக்கு தீங்கு ஏற்பட்டு விட கூடாது என்ற நல்ல எண்ணத்தில் தான்

عَنْ اَبِيْ هُرَيْرَةَ ؓ اَنَّ رَسُوْلَ اللهِ ﷺ وَقَفَ عَلَي اُنَاسٍ جُلُوْسٍ فَقَالَ: اَلاَ اُخْبِرُكُمْ بِخَيْرِكُمْ مِنْ شَرِّكُمْ؟ قَالَ: فَسَكَتُوْا، فَقَالَ ذَلِكَ ثَلاَثَ مَرَّاتٍ، فَقَالَ رَجُلٌ: بَلَي يَا رَسُوْلَ اللهِﷺ اَخْبِرْنَا بِخَيْرِنَا مِنْ شَرِّنَا، قَالَ: خَيْرُكُمْ مَنْ يُرْجَي خَيْرُهُ وَيُؤْمَنُ شَرُّهُ، وَشَرُّكُمْ مَنْ لاَ يُرْجَي خَيْرُهُ وَلاَ يُؤْمَنُ شَرُّهُ

ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்

ஸஹாபாக்கள் (ரலி) சிலர் அமர்ந்திருந்த சமயம் நபி (ஸல்) அவர்கள் அவர்களுக்கு அருகில் வந்து நின்றவாறு
உங்களில் நல்லவர் யார்? தீயவர் யார்? என்று உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? என்று வினவினார்கள்

ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்
ஸஹாபாக்கள் (ரலி) மௌனமாக இருந்தனர்

நபி (ஸல்) அவர்கள் இவ்வாறே மூன்று முறை கேட்டார்கள் யாரஸூலல்லாஹ், எங்களில் நல்லவர் யார்? தீயவர் யார்? என்று அறிவித்துத் தாருங்கள் என்று ஒருவர் கேட்டார்

எவரிடம் நற்செயலை ஆதரவு வைக்கப்படுமோ மேலும் தீயது ஏற்படும் என்ற பயமும் இல்லையோ அவரே உங்களில் நல்லவர் எவரைக் கொண்டு நற்செயலை ஆதரவு வைக்க முடியாதோ தீங்கு ஏற்படும் என்ற பயம் எந்நேரமும் இருக்குமோ அவரே உங்களில் தீயவர்

என நபி (ஸல்) அவர்கள் பதில் சொன்னார்கள்

           நூல்  திர்மிதி

    நட்புடன் J . இம்தாதி

Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்