விண்ணை விட மண்ணே மனிதனுக்கு ஏற்றது

  விண்ணை விட மண்ணே
      மனிதனுக்கு ஏற்றது
            *************
    *************************   
                07-09-19
        கட்டுரை எண் 1264
      !!J . Yaseen iMthadhi !!
             ************* 
                     ﷽
                !!!!!!!!!!!!!!!!!
விண்ணை ஆய்வு செய்யும் அறிவியல் துறை அதற்காக பல விண்கலங்களை உருவாக்குவதற்கும் அவைகளை விண்ணில்  அனுப்புவதற்கும் பல லட்சம்  கோடிகளை செலவழித்து வருவது சாதனையாக பேசப்பட்டு வருகிறது

இதன் மூலம் மனிதனின் அறிவாற்றலின் எல்லையை இதுவரை  புரிந்து கொள்ள முடிந்ததே தவிர

அதன் மூலம் மனித சமுதாயத்திற்கு எதிர் பார்த்த பலன் இதுவரை கிடைக்கவில்லை என்பது மட்டும்  தான் உண்மை

இன்னும் இதற்காக பல்லாயிரம் கோடிகளை செலவழித்து முயற்சி செய்தாலும் அதன் மூலம் மனித சமுதாயத்திற்கு பெருமளவு உபயோகம் இல்லை என்பது தான் திருகுர்ஆன் கூறும் உண்மையாகும்

காரணம் மனிதன் வாழ்வதற்கு ஏற்ற நிலையில் நாம் வாழ்கின்ற பூமியை மாத்திரம் தான் இறைவன் மிகவும் நுட்பமாக படைத்துள்ளான்  

மனிதன் வாழ்கின்ற பூமியின் இயற்கை வளங்களை நாசமாக்கும் காரியங்களை தொடர்ந்து செய்து கொண்டு மனிதன் வேறு கோள்களில் வாழ முடியுமா என்று ஆய்வு செய்வதற்கு பல மில்லியன் டாலர்களை தொடர்ந்து செலவு செய்வது வீணாண காரியம் என்றும் பல  சிந்தனைவாதிகள் கருத்தை முன் வைத்துள்ளனர்

இது விஞ்ஞானத்தை குறை கூறுவதற்கு எழுதப்பட்ட கட்டுரை அல்ல

மாறாக நாம் வாழும் பூமியின் வளங்களை பாதுகாக்க  சேமித்த மக்கள் வரிப்பணங்களை செலவு செய்வதற்கு முயற்சிக்க வேண்டும் என்பதே பதிவின் நோக்கம்

       الَّذِىْ جَعَلَ لَـكُمُ الْاَرْضَ فِرَاشًا وَّالسَّمَآءَ بِنَآءً وَّاَنْزَلَ مِنَ السَّمَآءِ مَآءً فَاَخْرَجَ بِهٖ مِنَ الثَّمَرٰتِ رِزْقًا لَّـكُمْ‌ فَلَا تَجْعَلُوْا لِلّٰهِ اَنْدَادًا وَّاَنْـتُمْ تَعْلَمُوْنَ ‏

அ(ந்த இறை)வனே உங்களுக்காக பூமியை விரிப்பாகவும் வானத்தை விதானமாகவும் அமைத்து வானத்தினின்றும் மழை பொழியச்செய்து அதனின்று உங்கள் உணவிற்காகக் கனி வர்க்கங்களை வெளிவரச் செய்கிறான்

(இந்தஉண்மைகளை எல்லாம்) நீங்கள் அறிந்து கொண்டே இருக்கும் நிலையில் அல்லாஹ்வுக்கு இணைகளை ஏற்படுத்தாதீர்கள்

     (அல்குர்ஆன் : 2:22)

هُوَ الَّذِىْ خَلَقَ لَـكُمْ مَّا فِى الْاَرْضِ جَمِيْعًا ثُمَّ اسْتَوٰۤى اِلَى السَّمَآءِ فَسَوّٰٮهُنَّ سَبْعَ سَمٰوٰتٍ‌ وَهُوَ بِكُلِّ شَىْءٍ عَلِيْمٌ‏ 

அ(வ்விறை)வன் எத்தகையவன் என்றால் அவனே உலகத்திலுள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான்
பின் அவன் வானத்தின் பக்கம் முற்பட்டான் அவற்றை ஏழு வானங்களாக ஒழுங்காக்கினான் அன்றியும் அவனே ஒவ்வொரு பொருளையும் நன்கறிபவனாக இருக்கிறான்

    (அல்குர்ஆன் : 2:29)

  وَلَـكُمْ فِى الْاَرْضِ مُسْتَقَرٌّ وَّمَتَاعٌ اِلٰى حِيْنٍ‏ 
பூமியில் ஒரு குறிப்பிட்ட காலம் வரை உங்களுக்குத் தங்குமிடமும் அனுபவிக்கும் பொருள்களும் உண்டு” என்று கூறினோம்

      (அல்குர்ஆன் : 2:36)

    நட்புடன் J . இம்தாதி

Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்