அழகிய அணுகுமுறை

   அழகிய அணுகுமுறையே
             தீர்வை தரும்
      *************************   
                11-09-19
        கட்டுரை எண் 1266
      !!J . Yaseen iMthadhi !!
             ************* 
                     ﷽
                !!!!!!!!!!!!!!!!!

பாதிக்கப்பட்டதாக கருதும் மனிதன் தனக்கு சட்ட ரீதியாகவும் வேறு நியாயமான  வழிகளில் நீதி கிடைக்காத சூழலில் தனது சக்திக்கு இயன்ற குறுக்கு வழிகளையும் பிறரது தவறான சட்டத்திற்கு எதிரான கொடூரமான  ஆலோசனைகளையும் கேட்க முற்படுவான்

தற்கொலை தீவிரவாதம் போன்ற மடமைத்தனமான வழிமுறைகளை மனிதன் தேர்வு செய்வதற்கும்  சட்டங்களை  மீறி நடப்பதற்கும்  இது தான் மூல காரணம்

நியாயமான வழிகளை தான் பின்பற்ற வேண்டும் என்ற நிலையில் இருக்கும் மனிதர்களை கூட நாளடைவில் ஏளனம் செய்ய  துவங்குவான்

இத்தகைய சூழலில் நமது நண்பர்களோ உறவுகளோ சிக்கி தவிப்பதை  காணும் போது அவர்களது  விரக்தியை போக்கும் விதமாக சிறந்த ஆலோசனைகளை சொல்லி தர வேண்டுமே தவிர

சட்ட ரீதியான நியாயமான வழிமுறைகளை  கற்று தர வேண்டுமே தவிர

இன்னல்களும் சோதனைகளும் மனித வாழ்வில் இயல்பானது என்பதை நடைமுறை ரீதியாக  புரிய வைக்க முற்பட வேண்டுமே தவிர

அவர்களது விரக்தி மற்றும் ஆவேசத்துக்கு ஏற்ற மடத்தனமான  கருத்துக்களை எடுத்து சொல்லி அந்த மனிதர்களின் வாழ்வை நாசமாக்க நாமே காரணமாக மாறி  விட கூடாது

இஸ்லாத்தை பொருத்தவரை எந்த ஒரு விவகாரத்திற்கும் தீவிரவாதமும் தீர்வை தராது

மடத்தனமான முடிவுகளும் சரியான முடிவை தராது என்பதை ஆணித்தரமாக மனித சமுதாயத்திற்கு  சொல்லி தருகிறது

பொறுமையும் சகிப்பு தன்மையும் அறிவுப்பூர்வமான வழிமுறைகளும் ஆழமான இறைநம்பிக்கையும் தான் கடந்த காலங்களில்  இறைதூதர்கள் நல்லோர்களுக்கு  வெற்றியை தந்துள்ளது என்பதே இஸ்லாம் கூறும் வரலாற்று உண்மையாகும்

சுருக்கமாக சொன்னால் அழகிய அணுகுமுறையே தீர்வை தரும்

عَنْ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ ؓ اَنَّ رَسُوْلَ اللهِ ﷺ قَالَ: لَيْسَ مِنَّا مَنْ دَعَا اِلَي عَصَبِيَّةٍ، وَلَيْسَ مِنَّا مَنْ قَاتَلَ عَلَي عَصَبِيَّةٍ، وَلَيْسَ مِنَّا مَنْ مَاتَ عَلَي عَصَبِيَّةٍ

தன் இனத்தாருக்கு அநியாயமான முறையில் உதவி செய்ய எவன் அழைக்கிறானோ அவன் நம்மைச் சார்ந்தவனல்ல

தன் இனத்தாருடன் சேர்ந்து கொண்டு அநியாயமான முறையில்
(உணர்ச்சி வசப்பட்டு) சண்டையிடுபவன் நம்மைச் சார்ந்தவனல்ல
தன் இனத்தாரைக் காக்க அநியாயமான முறையில் சண்டையிட்டு மரணிப்பவனும் நம்மைச் சார்ந்தவனல்ல என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஜுபைரிப்னு முத்இம் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்

         நூல் அபூதாவுத்

      நட்புடன்  J . இம்தாதி

Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்