Posts

Showing posts from January, 2025

மயிறும் உயிரும்

                     மயிறும் உயிரும்                            ********** பூமி தன் மீது சுமக்கும் மனிதர்களை விட  தன் அடி வயிற்றில் குழி தோண்டி புதைத்ததே பன்மடங்கு அதிகம்  எவரை சுமப்பதற்கும் பூமி பெருமைப்படுவதும் இல்லை எவரை இழந்ததற்கும் பூமி கவலை கொள்வதும் இல்லை வயிற்றுக்கு தீனி போட்டு உடலை வளர்க்க தெரிந்த மனிதனுக்கு உயிருக்கு உரம் போட்டு நீடிக்க செய்யும் ஆற்றலும் இல்லை  கருவில் உன்னை சுமந்த தாய்கும் கூட  உன் உடலில் உயிர் எவ்வாறு நுழைந்தது  எவ்வழியாக நுழைந்தது என்ற அடிப்படை ஞானமும் கூட கிடையாது தலையில் முளைத்திட்ட மயிரைக்கூட சுயமாக படைக்க இயலாத  உனக்கு  உன் உடலில் உயிரை கொடுத்த இறைவனை மறந்தும் புறக்கணித்தும் நடப்பதே அறிவீனத்தின் உச்சம் وَذَرِ الَّذِيْنَ اتَّخَذُوْا دِيْنَهُمْ لَعِبًا وَّلَهْوًا وَّغَرَّتْهُمُ الْحَيٰوةُ الدُّنْيَا‌ وَ ذَكِّرْ بِهٖۤ اَنْ تُبْسَلَ نَفْسٌ  بِمَا كَسَبَتْ‌ لَـيْسَ لَهَا مِنْ دُوْنِ اللّٰهِ وَلِى...

சிறந்த மனைவி யார்

       எப்பெண் சிறந்த மனைவி                 ******************               கட்டுரை எண் 1509                     ************* படித்த பெண்ணாக அமைந்தால்  வாழ்வு நிம்மதியாக இருக்கும் அழகான பெண்ணாக இருந்தால் வாழ்வு நிம்மதியாக இருக்கும் கணவனுக்கு கட்டுப்படும்  பெண்ணாக இருந்தால்  வாழ்வு நிம்மதியாக இருக்கும் குடும்பத்தை கவனிக்கும்  பெண்ணாக இருந்தால்  வாழ்வு நிம்மதியாக இருக்கும் வசதியான பெண்ணாக இருந்தால்  வாழ்வு நிம்மதியாக இருக்கும் சோசலிசம் கற்ற பெண்ணாக இருந்தால்  வாழ்வு நிம்மதியாக இருக்கும் வேலைக்கு செல்லும் பெண்ணாக இருந்தால்  வாழ்வு நிம்மதியாக இருக்கும் ஆலிமா பெண்ணாக இருந்தால்  வாழ்வு நிம்மதியாக இருக்கும் தொழுகையாளி பெண்ணாக இருந்தால்  வாழ்வு நிம்மதியாக இருக்கும் இப்படி பல எதிர்பார்ப்புகளும் தேடல்களும்  திருமணத்தை எதிர்நோக்கும் இளைய சமூகத்தின் இதயங்களில் ஆழமாக குடியிருக்கும்   மே...

மாற்று கருத்துடையோரை மாற்றார் போல் கருதாதீர்

          மாற்று கருத்துடையோரை     மாற்றார் போல் கருதும் மனநிலை                     *****************                கட்டுரை எண்  1508                      ************** எதை வாயால் மொழிந்து மனதளவில் ஏற்றுக்கொண்டால் ஒரு மனிதன் முஸ்லிம் என்ற வட்டத்திற்குள் நுழைவானோ  அந்த குர்ஆன் சுன்னா என்ற  அடிப்படையை பின்பற்றினால் மட்டுமே அவனால் மறுமையில் நிச்சயமாக வெற்றியடைய முடியும் அந்த அடிப்படையை தெளிவாக அறிவதற்கு முயற்சி செய்பவர்கள்  இஸ்லாமிய  கல்வி ஞானம் வழங்கப்பட்ட சஹாபாக்கள் முஹத்திசீன்கள்  மற்றும் ஆய்வில் சிறந்த மார்க்க அறிஞர்களை நாடுவதும் தேடுவதும் மார்க்கத்தில் தடுக்கப்படவில்லை  காரணம் கல்விஞானம் கொடுக்கப்பட்டவர்களிடம்  அறியாததை கேட்டுத்தெரிந்து கொள்ளுமாறு  குர்ஆன் தெளிவாக கட்டளையிடுகிறது وَمَاۤ اَرْسَلْنَا مِنْ قَبْلِكَ اِلَّا رِجَالًا نُّوْحِىْۤ اِلَيْهِمْ‌ ف...

லாஸ் ஏஞ்சல்ஸ் பேரழிவு

           லாஸ்ஏஞ்சல்ஸ் பேரழிவு     இறைவன் வழங்கிய தண்டனையா               ***********************                   கட்டுரை எண் 1507                        ************ உலகில் எந்த அசம்பாவிதம் நடந்தாலும்  இயற்கை சீற்றம் நிகழ்ந்தாலும் அவைகளை இஸ்லாத்துடன் தொடர்புபடுத்தி அல்லது முஸ்லிம் சமூகத்திற்கு பிறரால்  ஏற்பட்ட விபரீதங்களை தொடர்பு படுத்தி தங்களது ஆதங்கத்தையும் எதிர்பார்ப்பையும் வெறுப்பையும் பல கோணங்களில் அறிக்கையாக  போடுவதை பரவலாக காண முடிகிறது  சமீபத்தில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஏற்பட்ட காட்டுத்தீயின் கொடூரத்தை விமர்சிக்கும் சில முஸ்லிம்கள் அமெரிக்காவின் ஆணவத்தாலும் பாலஸ்தீனத்தில் ஏற்படுத்தி வரும் பாதிப்புகளுக்காகவும் இறைவன் வழங்கிய தண்டனையை தற்போது அனுபவிக்கின்றனர்  என்று ஞானமின்றி முடிச்சு போட்டு  அறிக்கையிடுவதை பரவலாக  காண முடிகின்றது  சமூகவலைத்தளத்...

வழிகேடுகளின் வடிவங்கள்

        வழிகேடுகளின் வடிவங்கள்                  ******************* வழிகேடுகள் இரு வகை உலக வழிகேடுகள் மார்க்க பெயரால் வழிகேடுகள் உலக வழிகேடுகளை  பகுத்தறிவை கொண்டும் அனுபவத்தில் சந்திக்கும்  விளைவுகளை கொண்டும் பிறர் படும் இன்னல்களை கண்டும் தவறு என்று மனிதனால்  தீர்மானிக்க இயலும்  ஆனால் மார்க்கத்தின் பெயரால் ஏற்படும் வழிகேடுகளை பகுத்தறிவை மட்டும் அளவுகோல்  கொண்டு தவறு என்று தீர்மானிக்க இயலாது  காரணம் மனிதனின் அறிவு சரி காணும் சிலதையும் இஸ்லாமிய மார்க்கம் வழிகேடு என்று குறிப்பிடுகிறது  மார்க்கத்தின் பெயரால் நுழைவிக்கப்படும்  அனைத்து வழிகேடுகளும் நன்மை எனும் பெயராலும் தன்னடக்கம் எனும் பெயரில் மார்க்க அறிஞர்கள் நல்லோர்கள் முன்னோர்கள் பெயராலுமே பல கோணத்தில்  நுழைவிக்கப்படும் இதற்கு ஒவ்வொரு வழிகேடர்களும் ஒவ்வொரு விதமான சுயவிளக்கத்தை கற்பித்தும் தங்களின் தவறான வாதங்களை முன்வைத்தும் மார்க்கத்தின் பெயரால் அறிமுகம் செய்யும் தவறான செயல்களை நம்பிக்கைகளை  நியாயப்படுத்திக் கொள்வார்கள்...

கருத்துவேறுபாடுகளும் சிந்தனைக்கு உரம்

           கருத்து வேறுபாடுகளும்               சிந்தனைக்கு உரமே                      ***************                 கட்டுரை எண் 1506                      *************** மனிதனின் சிந்தனையும் இறைவன் வழங்கியுள்ள திறனும் நபருக்கு நபர் மாறுபட்டு இருக்கும் வரை  எந்த விசயத்திலும் மாற்றுக்கருத்துக்கள் நிகழும் என்பதில் சந்தேகம் இல்லை மாற்றுக்கருத்துக்களே நிகழக்கூடாது என்று கருதுவோரும் எதிர்ப்பார்போரும் கற்பனை உலகில் வாழ்ந்து வருகின்றனர் என்பதே நிதர்சனமான உண்மை எந்த மாற்றுக்கருத்துக்கும் ஒரு தீர்வு நிச்சயம்  அமைந்திருக்கும்  அந்த தீர்வை நோக்கி நகருதலும் மக்களுக்கு நாகரீகமாக அந்த தீர்வை  புரிய வைப்பதும் தவறில்லை  ஆனால் மாற்றுக்கருத்துடையவர் என்பதால் எவரையும் வெறுப்பு கண்ணாடி அணிந்து முஸ்லிம்கள் பார்க்க கூடாது  இது போன்ற சூழல்களில் தான் ஷைத்தான் பல ரூபங்கள...

உயிரே உனக்காக

                  உயிரே உனக்காக                           ************                   கட்டுரை எண் 1505                         *********** மரணத்ததிற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் மரணமே மனிதனின் இறுதியான சொத்தாகும் மரணத்திற்கு மட்டுமே மனிதன் கடுகளவும் முயற்சி  செய்ய வேண்டிய  அவசியம் இல்லை  பிரபஞ்சம் தோன்றியது முதல் எவருடைய மரணத்திற்காகவும் இயற்கையாக நடைபெறும் லட்சக்கணக்கான  செயல்களில்  ஒன்றும் கூட  ஒரு விநாடியும்  ஸ்தம்பித்தது இல்லை  தனது செயலை சிறு நேரமும்  ஒத்தி வைத்ததும்  இல்லை  வாழும் உயிரினங்களுக்கே பிரபஞ்சம் சொந்தம் இறந்துவிட்ட எதற்கும் பிரபஞ்சம் சொந்தம் இல்லை என்பதே இதன் சாரம்  எந்த உடலை வளர்க்கவும்  எந்த உடலின் இச்சைகளை போக்கவும் தவறான வழிகளை தேர்வு செய்து மனிதன்  வாழ்கிறானோ  மரணத்திற...

உனக்கு நீ செய்யும் நல்லறம்

      உனக்கு நீ செய்யும் நல்லறம்                 *******************                   கட்டுரை எண் 1504                          ************ கடந்த காலத்தை சில பொழுது தனிமையில்  எண்ணிப்பாருங்கள்  ஏதோ ஒன்றை அடைவதற்கும் பெறுவதற்கும் அதிகமாக அப்போது  நீங்கள் கடுமையாக  முயற்சி செய்திருப்பீர்கள்  அந்நேரம் அதைத்தவிர வேறெதுவும் உங்கள் வாழ்வில் இனிமையாகவும் பாக்கியமாகவும் ஆழ்மனதில்  நிச்சயம் இடம்பெற்றிருக்காது அதை அடைவதற்கு எதையும் இழக்கலாம் என்றும் அதற்காக எந்த சிரமத்தையும் எதிர் கொள்ளலாம் என்றும் முடிவு செய்து அதன் மூலம் ஏற்பட்ட  சில உளைச்சல்களையும்  தொடர்ந்து  சந்தித்திருப்பீர்கள்  தனிமையில் கண்ணீர் வடித்திருப்பீர்கள் சோகப்பாடல்களை உங்கள் வாழ்க்கை பாடல்களை போல் கருதி  கற்பனையில் கேட்டு  வலம்  வந்திருப்பீர்கள் ஆனால் தற்போது கடந்த காலத்தின் தேடல்கள் உங்களிடம் நிச...