பாவங்களின் திறவுகோல்
பாவங்களின் திறவுகோல் ****************** கட்டுரை எண் 1507 *********** வாழ்வில் சிலர் மீது வெறுப்பை தொடர்ந்து கக்கி கொண்டிருப்பவர்களை காணலாம் காலை எழுவது முதல் உறங்க செல்லும் நேரம் வரை அவர்களை பற்றிய ஆய்வுகளையே அதிகம் செய்வர் தனது குடும்ப உறுப்பினரை கொலை செய்த பாவியை போல் அவர்களை சித்தரித்து கொண்டிருப்பார்கள் தனது முன்னேற்றத்தை யோசிப்பதை விட அவர்களின் முன்னேற்றத்தை தனது இழப்பாகவே கருதி அன்றாடம் குமுறி கொண்டிருப்பார்கள் அவர்களின் சிறு துக்கமும் கூட இவர்களுக்கு மகிழ்வை தரும் நன்றாக தனிமையில் சிந்தித்து பார்த்தால் யாரை எதிரிகளை போல் கருதுகின்றனரோ அவர்களுக்கும் இவர்களுக்கும் வாழ்வில் எந்த தொடர்பும் இருக்காது அவர்கள் இவர்களைப்பற்றி வாரம் ஒரு முறை கூட யோசித்திருக்க மாட்டார்கள் துரோகம் செய்திருக்க மாட்டார்கள் சூழ்ச்சி செய்திருக்க மாட்டார்கள் ஏன் எதிர்கிறார்கள் ? ஏன் வெறுக்கிறார்கள் ? என்ற காரணத்தையும் புரிந்திருக்க மாட்டார்கள் இதன் பின்னனியில் மறைமுகமாக இருப்பது பொறாமையின் பிம்பமாகவே இருக்கும் கேடுகெட்ட தீய பண்ப