பாவங்களின் திறவுகோல்

         பாவங்களின் திறவுகோல்
                 ******************
                கட்டுரை எண் 1507
                       ***********
வாழ்வில் சிலர் மீது வெறுப்பை 
தொடர்ந்து கக்கி கொண்டிருப்பவர்களை  காணலாம் 

காலை எழுவது முதல் உறங்க செல்லும் நேரம் வரை அவர்களை பற்றிய ஆய்வுகளையே அதிகம் செய்வர்

தனது குடும்ப உறுப்பினரை கொலை 
செய்த பாவியை  போல் 
அவர்களை  சித்தரித்து கொண்டிருப்பார்கள் 

தனது முன்னேற்றத்தை யோசிப்பதை விட 
அவர்களின் முன்னேற்றத்தை தனது இழப்பாகவே கருதி அன்றாடம் குமுறி கொண்டிருப்பார்கள்

அவர்களின் சிறு துக்கமும் கூட
இவர்களுக்கு மகிழ்வை தரும்


நன்றாக தனிமையில் சிந்தித்து பார்த்தால் 
யாரை எதிரிகளை போல் கருதுகின்றனரோ அவர்களுக்கும் இவர்களுக்கும் வாழ்வில் 
 எந்த தொடர்பும் இருக்காது 

அவர்கள் இவர்களைப்பற்றி 
வாரம் ஒரு முறை கூட யோசித்திருக்க மாட்டார்கள் 
துரோகம் செய்திருக்க மாட்டார்கள்
சூழ்ச்சி செய்திருக்க மாட்டார்கள் 
ஏன் எதிர்கிறார்கள் ?
ஏன் வெறுக்கிறார்கள் ? என்ற காரணத்தையும் புரிந்திருக்க மாட்டார்கள் 

இதன் பின்னனியில் மறைமுகமாக  இருப்பது 
பொறாமையின் பிம்பமாகவே இருக்கும்

கேடுகெட்ட தீய பண்புகளில் 
இதுவும் ஒன்றாகும் 
உலக வாழ்விலும் சரி
மறுமை வாழ்விலும் சரி
ஒரு மனிதனின் நல்லறங்கள் அனைத்தையும் நாசமாக்கும் தீய  செயல்களில் இதுவே 
முதன்மை செயலாகும்

உள்ளத்தில் மனிதக்கழிவுகளை சுமப்பதை விட அருவருக்கத்தக்க கழிவுகளே பொறாமை எனும் விஷக்கழிவுகளாகும்

அனைத்து பாவங்களுக்கும் திறவுகோலாக இருப்பதும் பொறாமை எனும் விஷக்கழிவுகளே

சுயபரிசோதனை செய்யுங்கள் 
விடுபட முடியும் இன்ஷா அல்லாஹ் 

பொறாமை 
எந்த வகையில் உள்ளத்தில் நுழைந்தாலும் 
அதனால் கடுகளவு நன்மையும் ஏற்படாது 

நட்புகள் நாசமடைவது
குடும்பங்கள் சிதைவது
சமூக பிளவுகள் விரிவடைவது
சத்தியங்கள் செவி நுழைய மறுப்பது
சிந்தனை முடங்குவது 
பொறாமையின் விளைவுகளில் சில மட்டுமே 

இவர்களின் மரணமே பலருக்கு மகிழ்வை தரும்


بِئْسَمَا اشْتَرَوْا بِهٖۤ اَنْفُسَهُمْ اَنْ یَّكْفُرُوْا بِمَآ اَنْزَلَ اللّٰهُ بَغْيًا اَنْ يُّنَزِّلَ اللّٰهُ مِنْ فَضْلِهٖ عَلٰى مَنْ يَّشَآءُ مِنْ عِبَادِهٖ‌ فَبَآءُوْ بِغَضَبٍ عَلٰى غَضَبٍ‌ وَلِلْكٰفِرِيْنَ عَذَابٌ مُّهِيْنٌ‏

தன் அடியார்களில் 
தான் நாடியவர் மீது 
தன் அருட்கொடையை அல்லாஹ் அருளியதற்காக பொறாமைப்பட்டு அல்லாஹ் அருளியதையே நிராகரித்து தங்கள் ஆத்மாக்களை விற்று அவர்கள் பெற்றுக் கொண்டது மிகவும் கெட்டதாகும்

இதனால் அவர்கள் (இறைவனுடைய) கோபத்திற்கு மேல் கோபத்திற்கு ஆளாகி விட்டார்கள் (இத்தகைய) மறுப்பாளர்களுக்கு இழிவான வேதனை உண்டு

(அல்குர்ஆன் : 2:90)



      நட்புடன்  J . யாஸீன் இம்தாதி
                          30-12-2023



Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்