பொருளாதாரம் வீண் சந்தேகம்
பொருளாதாரம்
வீண் சந்தேகங்கள்
••••••••••••••••••••••••••
கட்டுரை எண் 1503
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
பணம்
கறை படிந்த பல கரங்களை தழுவி
இப்போது உன் வசம் வந்துள்ளது
நீ கையில் வைத்திருக்கும் பணம்
உனக்கு முன் சில வேளை
திருடன் பயன்படுத்தி இருக்கக்கூடும்
தாசித்தொழில் செய்வோர்
பயன்படுத்தி இருக்கக்கூடும்
வட்டிக்காரன் பயன்படுத்தி
இருக்கக்கூடும்
கொலைகாரன் பயன்படுத்தி
இருக்கக்கூடும்
கொள்ளைக்காரன் பயன்படுத்தி
இருக்கக்கூடும்
பாவிகளுக்கும் பாவங்களுக்கும்
பயன்பட்ட பணத்தை
நான் எப்படி பெறுவது ?
அது ஹராமானது ஆச்சே
என்று நீ புலம்புவது தேவையற்றது
இவ்வாறு புலம்புவதற்கு
தக்வா என்ற சாயத்தை பூசிக்கொள்ளவும் தேவையில்லை
உன் கரத்தில் புழங்கும் பணத்தை
நீ எவ்வழியில் திரட்டினாய் ?
என்பதே இறைவன் மறுமையில் கேட்கும் கேள்வியாகும்
உன் வசம் எவ்வழியில்
அதை உரிமையாக்கினாய் ? என்பதே இறைவன் கேட்கும் கேள்வியாகும்
இதற்கு நீ நியாயமான பதிலை கூறினால்
இறைவன் உன்னை நிச்சயமாக தண்டிக்க மாட்டான்
சுயமுயற்சியால் நீ
திருடிய பணம்
நீ வாங்கிய வட்டிப்பணம்
நீ பிறரை ஏமாற்றி ஈட்டிய பணம்
அதுவே மறுமையில் குற்றப்பார்வைக்கு உட்படுத்தப்படும்
உன் கைவசம் இருக்கும் பணத்தை
நீ தர்மம் கொடுத்தால்
அது தர்மப்பணம்
நீ அன்பளிப்பு செய்தால்
அது அன்புப்பணம்
நீ ஜக்காத்தை வழங்கினால்
அது ஏழைகளின் உரிமைப்பணம்
அதாவது உன் கைவசம் இருக்கும் பணம் ஒன்றே
ஆனால் நீ கொடுக்கும் முறையில் தான்
பணத்தின் தரமும் மாறுகிறது
பிறர் வசம் இருக்கும் பணமும்
அவ்வாறே உன் வசம்
வந்தடைகிறது
மார்க்கத்தில் குழப்பம் இல்லை
உன் எண்ணத்தில் குழப்பம் உள்ளது
மார்க்கம் வாழ்வியலுக்கு ஏற்றது
உனது அர்த்தமற்ற வாதமே
வாழ்வியலுக்கு எதிரானது
வாழ்வியலுக்கு எதிரான வாதத்தை
வாழ்வியலுக்கு முரண்பட்ட வாதத்தை
வாழ்வியலுக்கு சாத்தியமற்ற வாதத்தை
நிச்சயம் வாழ்வை அளித்த
உனது இறைவன் சட்டமாக்க மாட்டான்
وَلَا تَقُوْلُوْا لِمَا تَصِفُ اَلْسِنَـتُكُمُ الْكَذِبَ هٰذَا حَلٰلٌ وَّهٰذَا حَرَامٌ لِّـتَفْتَرُوْا عَلَى اللّٰهِ الْكَذِبَ اِنَّ الَّذِيْنَ يَفْتَرُوْنَ عَلَى اللّٰهِ الْكَذِبَ لَا يُفْلِحُوْنَ
உங்கள் நாவுகள் (சில பிராணிகள் பற்றி) பொய்யாக வர்ணிப்பது போல் இது ஹலாலானது இது ஹராமானது என்று அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டாதீர்கள்
நிச்சயமாக எவர் அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டுகிறார்களோ அவர்கள் வெற்றியடைய மாட்டார்கள்
(அல்குர்ஆன் : 16:116)
நட்புடன் J . யாஸீன் இம்தாதி
Comments
Post a Comment