இன்னாலில்லாஹ்

                இன்னா லில்லாஹி
      இன்னா இலைஹி ராஜிஊன்
                  *****************
                 கட்டுரை எண் 1506
                     **************
இன்னாலில்லாஹ்
வஇன்னா இலைஹி ராஜிஊன் 
என்ற வார்த்தைகளை அறிக்கைகளில் படித்தால் அல்லது செவிவழியாக  கேள்விபட்டால் மறுநொடியே 
யாரோ ஒருவர் மரணம் அடைந்து விட்டார் என்றே  புரிந்து கொள்கிறோம் 

காரணம் இன்னாலில்லாஹ் என்ற  வார்த்தைகள்  மரண செய்தியை கேள்விப்படும் போது சொல்லப்பட வேண்டிய வார்த்தைகளாக மாத்திரமே புரிந்துள்ளோம்

இன்னாலில்லாஹ் என்ற சொற்கள் பொதுவானவையாகும் 


ஒரு மனிதன் உலக விழ்வில் எதை இழப்பாக கருதுகிறானோ அவைகளை அவன் எதிர்  கொள்ளும் சூழலில்  கூறப்பட வேண்டிய வார்த்தைகளே இன்னாலில்லாஹ் என்பதாகும் 

அதன் பொருள் 
நாமே இறைவனால் படைக்கப்பட்டவர்கள் 
இறைவன் கைப்பற்றிக்கொள்ளும் எதுவும் இறைவனால் படைக்கப்பட்டவையே ஆகும் 


இறைவனால் கைப்பற்றிக்கொள்ளும் எதையும் மனிதனால் மீட்டவும் முடியாது உரிமை கொண்டாடவும் முடியாது என்ற ஆழமான கருத்தையும்
 இழப்பவை எதுவும் உரிமையற்றவனிடம் சென்றடைவது இல்லை மாறாக படைத்தவனிடமே செல்கிறது என்ற ஆத்ம திருப்தியையும் உள்ளடக்கிய  கருத்துக்களை  கொண்ட வாசகங்களே இன்னாலில்லாஹ் என்ற வார்த்தை பதங்களாகும் 

பொறுமையை கடைபிடித்து கூறப்படும் இன்னாலில்லாஹ் என்ற பதத்திற்கு மட்டுமே இறைவனிடம் நற்கூலி உண்டு 

இழப்புகளை சந்தித்த மறுநிமிடம் இறைவனை திட்டி தீர்த்து அழுது புலம்புவது அதன் பின் இன்னாலில்லாஹ் என்ற பதத்தை கூறுவது பயனற்றது 


இறைநம்பிக்கையாளர்களின் மரணத்தகவலுக்கு மட்டுமே இன்னாலில்லாஹ் கூற வேண்டும் என்றில்லை மாறாக எவருடைய இழப்புக்கும் இன்னாலில்லாஹ் என்ற பதத்தை பயன்படுத்தலாம் 


சுருங்க சொன்னால் சோகங்களால் ஏற்படும் விரக்திகளை தூக்கி எறிந்து விட்டு அடுத்த முயற்சிக்கான செயல்களில் இறங்குவதற்கு தூணாக செயல்படும் சாய்மானமே இன்னாலில்லாஹ் என்ற வார்த்தைகள் 


وَلَـنَبْلُوَنَّكُمْ بِشَىْءٍ مِّنَ الْخَـوْفِ وَالْجُـوْعِ وَنَقْصٍ مِّنَ الْاَمْوَالِ وَالْاَنْفُسِ وَالثَّمَرٰتِ وَبَشِّرِ الصّٰبِرِيْنَۙ‏

நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்; ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக

الَّذِيْنَ اِذَآ اَصَابَتْهُمْ مُّصِيْبَةٌ  ۙ قَالُوْٓا اِنَّا لِلّٰهِ وَاِنَّـآ اِلَيْهِ رٰجِعُوْنَ‏

(பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, “நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்” என்று கூறுவார்கள்


اُولٰٓٮِٕكَ عَلَيْهِمْ صَلَوٰتٌ مِّنْ رَّبِّهِمْ وَرَحْمَةٌ‌ وَاُولٰٓٮِٕكَ هُمُ الْمُهْتَدُوْنَ‏

இத்தகையோர் மீது தான் அவர்களுடைய இறைவனின் நல்லாசியும், நற்கிருபையும் உண்டாகின்றன, இன்னும் இவர்கள் தாம் நேர் வழியை அடைந்தவர்கள்

(அல்குர்ஆன் : 2:155,156,157)  

    நட்புடன்  J . யாஸீன் இம்தாதி

                        28-12-2023






Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்