வாழ்கைத்தத்துவம்
வாழ்கைத்தத்துவம்
•••••••••••••••••
கட்டுரை எண் 1504
***********
ஊதியத்திற்கும் செல்வத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து எதார்த்த வாழ்வுக்கும் ஆரோக்யத்திற்கும் முட்டுக்கட்டை போட்டு கொள்ளாதீர்கள்
இரவு பகலாக கண்விழித்து
வியர்வை சிந்தி உழைத்து சேமிக்கும் பணம்
எதிர்கால வாழ்வில்
உங்கள் நோய்களுக்கு மருந்து வாங்கவும்
நிகழ்காலத்தில் பணக்காரன் என்று பெயர் எடுப்பதற்கு மட்டுமே உதவும் என்ற நிலையில் உங்கள் நடைமுறை இருந்தால் நிச்சயமாக அந்த செல்வத்தை விட தீங்கானதை உங்கள் வாழ்வில் சேகரிக்கவில்லை என்பதே எதார்த்தமான உண்மை
பணத்தை மட்டும் கட்டு கட்டாக சேகரித்து
பீரோக்களில் பதுக்கி வைக்க கணவன் என்பவன்
பணம் அச்சடிக்கும் இயந்திரம் அல்ல என்பதை மனைவியும் உணருவது இல்லை
நீங்கள் உழைக்கும் பணத்தை மட்டும் பெற்றுக்கொண்டு நீங்கள் எதிர்பார்க்கும்
வீட்டு வேலைகளை செய்து முடிக்க
மனைவி என்பவள் வேலைக்காரியும் அல்ல
பிறக்கும் குழந்தையை கட்டித்தழுவ இயலாது
உறவுகளின் மரணத்திற்கும் வருகை தர இயலாது
இன்ப துன்பங்களில் பங்கெடுக்கவும் இயலாது வீடியோகால்களில் மட்டுமே வாழ்க்கை நடத்திக்கொண்டு அயல்நாடுகளில் பணியாற்ற வேண்டும் என்ற நிர்பந்தத்தை இறைவனே உங்கள் மீது திணிக்கவில்லை
மாறாக நீங்கள் தீர்மானித்த முடிவுக்கே இறைவனை பலிகடாவாக பயன்படுத்துகிறீர் என்பதே எதார்த்தமான உண்மை
நிகழ்காலமே சாத்தான்களின் கையில் சிக்கி சீரழிகிறது என்பதை அனுபவத்தில் உணர்ந்து கொண்டே எதிர்காலத்தை எளிதாக கணித்து
விட வேண்டாம்
சூழ்நிலைகளும் நிர்பந்தங்களும் செல்வங்களுமே ஒரு மனிதனை வழிகெடுக்க போதுமானது
பொருள் தாண்டிய பல கடமைகளையும் இறைவன் மனிதன் மீது சுமத்தியுள்ளான் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்
சில கடமைகளை எங்கிருந்தும்
செய்ய இயலும்
சில கடமைகளை அருகில் இருந்தால் மட்டுமே
செய்ய முடியும்
சில கடமைகளை விரும்பினால் செய்ய முடியும்
சில கடமைகளை விரும்பாவிடினும்
செய்தே ஆக வேண்டும்
இதற்கான பொருளை உணராது இருப்பவர்கள் வாழ்வில் பல சிக்கல்களை சந்தித்தே பின்பே
சிந்திக்க துவங்குவார்கள்
ஆனால் அச்சிந்தனை அவர்களது வாழ்வில் வருத்தத்தை தவிர
வேறு எதையும் ஏற்படுத்தாது
இதுவே வாழ்கைத்தத்துவம்
ஆடம்ர வாழ்வின் துவக்க கட்டமே வெளிநாட்டு மோகம்
அதற்கு பல காரணங்களை
நீங்கள் கற்பித்துக்கொண்டாலும் சரி
நியாயம் கூறிக்கொண்டாலும் சரி
பின்னனி இதுவே
இதே போதனை உள்நாட்டில் இருப்போருக்கும் பொதுவானதே
وَلِكُلٍّ دَرَجٰتٌ مِّمَّا عَمِلُوْا وَمَا رَبُّكَ بِغَافِلٍ عَمَّا يَعْمَلُوْنَ
ஒவ்வொருவருக்கும் அவர்கள் நடந்து கொண்டதற்குத் தக்கவாறு உயர்நிலைகள் உண்டு
உன் இறைவன் அவர்கள் செய்வதைப் பற்றி பாராமுகமாக இல்லை
(அல்குர்ஆன் : 6:132)
நட்புடன் J . யாஸீன் இம்தாதி
Comments
Post a Comment