கண்தானம் கூடுமா
ஆய்வுக்கட்டுரை
கண்தானம் கூடுமா ?
**************
வாழ்நாளில் நேரடியாக கண்ட மனிதனை
அவனது இறப்புக்கு பின்பும் அவனை சுற்றியிருப்போர் காணக்கூடிய பாக்கியத்தை
பெற்று தரும் ஒரே தானம்
!! கண் தானம் !!
கண் தானம் என்பது கண்களை தோண்டி எடுப்பது அல்ல
மாறாக விழித்திரையில் இருக்கும் மெல்லிசான
ஒரு பகுதியை உருவி எடுப்பதாகும்
ஒரு மனிதன் தரும் கண்தானத்தின் மூலம் பார்வையற்ற இரு மனிதனுக்கு பார்வைப்புலனை உருவாக்க இயலும்
வாழும் போது எந்த மனிதனும் கண்களை
தானம் செய்ய முடியாது
கண்களை தானம் செய்வதாக பத்திரத்தில் கையொப்பம் போட்டவரின் இறப்பிற்கு பிறகே குறிப்பிட்ட நேரத்தில் குடும்பத்தார்களின் தகவலின் அடிப்படையில் மருத்துவர்களின் கண்காணிப்பில் கண்களை தானமாக பெறப்படும்
மண்ணோடு மக்கிப்போகும்
ஒரு மனிதனின் உடல்பாகங்களில் ஒன்றாக இருக்கும் கண்களை உயிரோடு வாழும் மனிதனுக்கு பயன்படும் விதமாக கொடுப்பதின் மூலம் எவ்வித நஷ்டங்களும் கஷ்டங்களும் ஏற்படப்போவது இல்லை
يُبْعَثُ كُلُّ عَبْدٍ علَى ما ماتَ عليه.
الراوي : جابر بن عبدالله | المحدث : مسلم | المصدر : صحيح مسلم
الصفحة أو الرقم: 2878 | خلاصة حكم المحدث : [صحيح]
ஒரு மனிதன் எந்த நிலையில் மரணிக்கிறானோ
அந்த நிலையில் மீண்டும் எழுப்பப்படுவான் என்ற நபிமொழியின் கருத்தை சரியாக விளங்காதவர்களும் கூட தங்களின் மறுப்பு வாதத்திற்கு இந்த நபிமொழியை ஆதாரமாக காட்ட இயலாது
காரணம் ஒரு மனிதன் மரணிக்கும் போது கண்களுடன் தான் மரணிக்கிறான் அதன் பிறகே கண்தானம் செய்யும் நபரின் கண்களின் விழித்திரை
குறுகிய நேரத்தில் கருவிகள் மூலம் உருவப்படுகிறது
நவீன பிரச்சனைகளுக்கு இஸ்லாத்தில் நேரடியாக ஆதாரங்களை சமர்பிக்க இயலாத சூழலில் குர்ஆனிலும் நபிமொழிகளிலும் நேரடியாக
அல்லது மறைமுகமாக தடையேதும் உள்ளதா என்றே ஆய்வு செய்ய வேண்டும்
அவ்வகையில் கண்தானம் செய்வதற்கு இஸ்லாத்தில் தடையும் இல்லை தடை ஏற்படுத்தும் அளவு
புற காரணங்களும் ஆதாரங்களும் இல்லை
கண்தானம் செய்வதால்
அல்லது பார்வையற்றவர்
கண்தானம் பெறுவதால்
மனித சமூகத்திற்கு எவ்விதமான தீங்கும்
ஏற்பட்டது இல்லை
தவறான பத்வாக்களாலும்
குடும்பத்தார்களுக்கு கண்தானத்தின் வழிமுறைகள் விதிமுறைகளை பற்றிய விழிப்புணர்வு இல்லாததாலுமே இரத்ததானத்தில் முன்னனியில் இருக்கும் முஸ்லிம் சமுதாயம் கண்தானத்தில் அங்கம் வகிக்காது உள்ளனர்
கண்தானம் செய்வதை மார்க்கப்பார்வையில் வலியுருத்தி சொல்ல இயலாவிடினும் கண்தானத்திற்கு எதிரான கருத்துக்களை பரப்புவதில் இருந்து தவிர்ந்திருக்க வேண்டும்
மார்க்கத்தின் புறக்காரணங்களை வைத்து கண்தானத்திற்கு எதிரான கருத்தை சொல்ல முடியாதது போல் மார்க்கத்தின் புறக்காரணங்களை வைத்து கண்தானத்திற்கு ஆதரவாக கருத்தை எடுக்க முடியும் என்பதே எதார்த்தமான உண்மை
அவ்வகையில் இடம் பெற்றுள்ள திருமறை வசனம்
وَمَنْ اَحْيَاهَا فَكَاَنَّمَاۤ اَحْيَا النَّاسَ جَمِيْعًا
எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாரோ
அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்
(அல்குர்ஆன் : 5:32)
கிட்னிதானம்
இதர உடல்உறுப்பு தானம் போன்றவை இக்கட்டுரையில் விளக்கப்பட்டவில்லை
இன்ஷா அல்லாஹ் தொடரும்
மறுப்பு மற்றும் ஆலோசனைகளுக்கு
தொடர்பு எண் 9994533265
கண்தானம் தொடர்பான சந்தேகங்கள் விளக்கங்கள் சட்டரீதியான பதிவு போன்றவைகளை அறிய
தமிழக அரசின் 104 எண் மூலம்
தொடர்பு கொள்ள முடியும்
நட்புடன் J . யாஸீன் இம்தாதி
Comments
Post a Comment