Posts

Showing posts from December, 2020

வாழ்த்தும் மறுப்பும்

                 வாழ்த்தும் மறுப்பும்                வீண் விவாதம்                       ***********             கட்டுரை எண் 1394              J . Yaseen imthadhi      Bismillahir Rahmanir Raheem                            ***** மற்றவர்கள்  அவர்களின் பண்டிகைகளை  கொண்டாடும் பொழுதெல்லாம் இஸ்லாத்தில் இது கூடாது என்று  சட்டம் பேசுவதும் மற்றவர்களின் சடங்கு சம்பிரதாயங்களுக்கு அவர்களே இவர்களின்  வாழ்த்துக்களை கண்டு கொள்ளாத நிலையிலும் தவறாது வாழ்த்து பதிவுகளை போட்டு தங்களை மதநல்லிணக்க புனிதர்களாக காட்டி கொள்வதும் முகநூலில் சில முஸ்லிம்களிடம் வாடிக்கையாக காண முடிகிறது அழைப்பு பணியை யாருக்கு செய்ய வேண்டும்  ? எந்த சூழலில் செய்ய வேண்டும்  ? எந்த தோரணையில் செய்ய வேண்டும்  ? என்ற அடிப்படை ஞானம் இல்லாததே இதற்கு காரணம் சுருக்கமாக சொன்னால் தங்களது பண்டிகை நாட்களில் முஸ்லிம்களுக்கு விமர்சனம் செய்வதே வேலை என்று  மாற்றார்கள் முகம் சுளிக்கும் விதத்தில் தான் இவர்களின் அறியாமை பதிவுகள் உள்ளது இதனால் ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்தையும் மாற்றார்கள் விமர்சிக்கும் சூழல் தான் எற்பட்டு வருகிறது ஒரு ச

நோயாளியின் மனோநிலை

    நோயாளியின் மனோநிலை                 ..............................            J . YASEEN IMDHATHI                        26 :12:2020                       *********** மனதின் வலிமையை பொருத்தே நோயின் தாக்கமும்  உளைச்சலும் மனித வாழ்வில் நிம்மதியை கூட்டியும் குறைத்தும் காட்டுகிறது நோய்களின் வகைகள் சிறிதாக அல்லது  பெரிதாக இருந்தாலும் அதை அனுபவிக்கும் மனிதனின் மனவலிமையை பொருத்தே அது சாதாரணமாக அபாயமானதாக கருதப்படுகிறது சாதாரண வயிற்று வலியை பெரிதாக எடுத்து கொண்டு அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்கு பரப்போரும் உண்டு பெரிதாக கருதப்படும் இதய நோயை சந்தித்தும் அதை எளிமையாக கடப்போரும் உண்டு நோய் தழுவுகிற போது உடல்  பரிசோதனை செய்து பார்க்க முன்னெச்சரிக்கையாக  செல்லும் நபர்களும் உண்டு எவ்வித பாதிப்பும் இல்லாது மாத மாதம் இரத்தப்பரிசோதனை செய்து பார்க்கும் மனநோயாளிகளும் உண்டு மனித வாழ்வில் நோய் என்பதும் ஒரு அங்கமே அந்த நோய்களை சந்திக்கும் மனிதன் அவைகளை நினைத்தே  நேரத்தை கடத்துவது வாழ்வின் ரசனையை வெறுக்க செய்யும் விதியின் ஏட்டில் எழுதப்படாத எதுவும் மனிதனை அணுகவும் செய்யாது விதியின் ஏட்ட

பாபர் மஸ்ஜித் கமிட்டி

         பாபர் மஸ்ஜித் கமிட்டியும்                      அதிருப்தியும்                    *****************                       20 :12:2020              J . Yaseen iMthadhi                     ••••••••••••••••• அநீதமான தீர்ப்பு என்று தெரிந்த பின்பும் சட்டத்திற்கு அரசியல் சாசனத்திற்கு  எதிராக வழங்கப்பட்ட இடத்தில் பாபர் பெயரில் புதிய  மஸ்ஜித் கட்ட வேண்டிய அவசியம் என்ன ? பாபர் மஸ்ஜித் மீட்புக்காக  ஒட்டு மொத்த முஸ்லிம்களும் பல தியாகங்களை செய்தது  இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்து நீதியை  நிலைநாட்டவா  ? அல்லது பாபர் பெயரில் புதிய இடத்தை அரசிடம் இலவசமாக வாங்கி பாபர் பெயரில் பள்ளிவாசல் கட்ட வேண்டும் என்பதற்காகவா  ? வழங்கப்பட்ட நீதி முறையற்றது எனவே எங்களுக்கு புதிய இடம் தேவையில்லை என்று தீர்ப்பு வந்த மறுநிமிடமே  நீதிமன்றத்தில் அதிருப்தியுடன்  திருப்பி கொடுத்திருந்தால் பாபர் மஸ்ஜிதுக்காக இத்தனை வருடம் போராடிய மக்களின் சுயமரியாதையை பாபர் மஸ்ஜித் கமிட்டி காப்பாற்றியது என்று பெருமை அடைந்திருக்கலாம் ஆனால் அதற்கு மாற்றமாக நடந்து விட்டு இப்போது பாபர் பெயரில் புதிய பள்ளிவாசல் கட்டப்போவதாக அறி

இலவசங்களை கொச்சைபடுத்தாதீர்

அரசின் இலவசங்களை கொச்சை                      படுத்தாதீர்                  *****************                       19:12:2020              J . Yaseen iMthadhi                     ••••••••••••••••• அரசு தரும் இலவசங்களை இழிவாக கருதுவதும் அரசு மக்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை சரியாக செய்யவில்லை என்பதற்காகவும் நாட்டு மக்களுக்கு அரசு தரும்  இலவசங்களை குறை கூறுவது தேவையற்ற விமர்சனமாகும் காரணம் அரசின் சார்பாக  இலவசமாக தரப்படும் எந்த ஒன்றும் அரசியல்வாதிகளின் சொந்த பணத்திலோ  தனிப்பட்ட  கட்சியின் பணத்திலோ  அல்ல மாறாக குடிமக்களின் மூலமாக வசூலிக்கப்படும் வரிப்பணமே அவைகள் குடிமக்களை பொருத்தவரை வறுமையில் வாடும் மக்களும்  நடுத்தர மக்களும் தான் நம் நாட்டில் சதவிகிதத்தில் அதிகம் ரேசன் அரிசியை வைத்து குடும்பம் நடத்தும் ஏழ்மை மக்கள் கோடிக்கணக்கில் உள்ளனர் திருவிழாக்கள் பண்டிகையின் பொழுது அரசு தரும் இலவசங்களை பெற்று அந்நாளை மகிழ்வுடன் கொண்டாடும் மக்களும் நாட்டில்  ஏராளம் உள்ளனர் இவைகளை கருத்தில் கொள்ளாது அரசின் இலவசங்களை கொச்சை படுத்தும்  எவரும் தேவையுடைய மக்களை தேடி சென்று உதவி  செய்ய முன் வர

மறுமை வெற்றிக்கு மூலதனம்

         மறுமை வெற்றிக்கான                        மூலதனம்                        ***********             கட்டுரை எண் 1393              J . Yaseen imthadhi      Bismillahir Rahmanir Raheem                            ***** ஈமான் எனும் நம்பிக்கை கொண்டிருப்பதால் மார்க்க ஞானம் கூடுதலாக இருப்பதால் பரம்பரை முஸ்லிமுக்கு பிறந்தவராக இருப்பதால் எவரும் மறுமையில் வெற்றியை பெற இயலாது மக்கா நகர் இறை நிராகரிப்பபாளர்களும் இறைவனை நம்பியவர்கள் தான் சாத்தானும் கூட மனிதனை விட ஞானத்தில் சிறந்தவன் தான் அதனால் இவர்கள் மறுமை வெற்றியை பெற முடியுமா   ? மறுமை வெற்றியை தீர்மானிக்கும் மூலத்தில் அமல்கள் தான் முதலிடம் வகிக்கிறது ஈமானை பற்றி பேசும் அனைத்து குர்ஆன் வசனங்களும் அமல்களை இணைத்தே அறிவுரை கூறுகிறது அந்த அமல்களில் நம்மை நாம் சுயபரிசோதனை செய்தால் நிச்சயம் நம் மனசாட்சியே நம்மை காரி உமிழும் وَعَدَ اللّٰهُ الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ‌ ۙ لَهُمْ مَّغْفِرَةٌ وَّاَجْرٌ عَظِيْمٌ‏ ஈமான் கொண்டு. நல்ல அமல்கள் செய்வோருக்கு, மன்னிப்பையும், மகத்தான (நற்)கூலியையும் அல்லாஹ் வாக்களித்துள்ளான்

டிசம்பர் 6

              டிசம்பர் 6 பாதுகாப்பு                         நாடகம்                   *****************                        6:12:2020             J . Yaseen imthadhi      Bismillahir Rahmanir Raheem                            ***** டிசம்பர் 6 என்றால் பலத்த பாதுகாப்பு என்ற வாய்பாடை எல்லா ஊடகங்களும் 1992 முதல் (2020) இன்றுவரை ஒரே கோட்டில் நின்று பைத்தியகாரர்களை போல் அறிக்கை போட்டு கொண்டுள்ளனர் சுதந்திர தினவிழா வந்து விட்டாலே உச்சகட்ட பாதுகாப்பு என்று அறிக்கை போடுவதும் குடியரசு என்று சொன்னாலே பலத்த பாதுகாப்பு என்று அறிக்கை போடுவதும் எப்படி சடங்காக ஊடகம் மாற்றி வைத்துள்ளதோ அது போலவே டிசம்பர் 6 என்றவுடன் பலத்த பாதுகாப்பு என்று அறிக்கை போட்டு நாட்டு மக்களை அச்சத்தில் ஆழ்த்துவது ஊடகங்களின் கைவந்த கலை டிசம்பர் 6 அன்று பலத்த பாதுகாப்பு அறிக்கை எதற்கு ? யாருக்கு எதிராக அந்த அறிக்கை ? யாரை அச்சுறுத்த அந்த அறிக்கை? மதவெறி எனும் நஞ்சூட்டப்பட்ட பெரும் கூட்டத்தை திரட்டி கொண்டு இறையில்லம் பாபர் மஸ்ஜிதை இடிப்பதற்கு வன்முறையோடு சென்ற காவி கூட்டத்தின் அக்கிரமத்தை தடுப்பதற்கு பலத்த பாதுகாப்

பஜ்ரும் சஹாபாக்களும்

             பஜ்ரு தொழுகை    சஹாபாக்களும் நம்மவர்களும்                  *****************             J . Yaseen imthadhi      Bismillahir Rahmanir Raheem                            ***** சஹாபாக்கள் காலத்தில் தட்டி எழுப்பும் அலாரங்களை கொண்ட கடிகாரங்கள் இல்லை SNOOGE  அலாரம் வைக்கும் ஆந்த்ராய்ட் மொபைல்களும் இல்லை கால் செய்து தட்டி எழுப்பும் தொலைபேசிகளும் இல்லை பாங்கோசை தொலைததூர காதுகளை பிளக்க வைக்கும் ஆம்பிளிபயர் ஸ்பீக்கர் செட்களும் இல்லை ஆனாலும் பஜ்ரு தொழுகையை நிறைவேற்ற சலிப்படைந்த சஹாபாக்களின் பட்டியலே இல்லை சூரியன் உதிக்கும் வரை இறைவனை மறந்து உறங்கி கொண்டிருந்தார்கள் என்ற ஒரு தகவலும்  இல்லை சஹாபாக்களின் புகழை பாடும் இன்றைய முஸ்லிம் சமூகத்தில் பத்து நபர்களில் மூன்று நபர்கள் கூட பஜ்ரு தொழுகைக்காக எழும்புவோர் இல்லை பஜ்ரு தொழுகை தவறி விட்டதே என்று வருந்துவோரும் இல்லை இஸ்லாம் குடிகொண்ட சஹாபாக்கள் இதயத்தில் ஈமான் நிறைந்திருந்தது அதே இஸ்லாம் குடிகொண்ட நம் சமூக மக்களின் இதயத்தில் ஈமான் மட்டுமே தளர்ந்துள்ளது இதுவே பஜ்ரு தொழுகையை முஸ்லிம் சமூகம் புறக்கணித்து வாழ்வதற்கு மூல காரண

பாபர் மஸ்ஜித் விதண்டாவாதம்

      பாபர் மஸ்ஜித் விமர்சனமும்              விதண்டாவாதமும்                       ***********             கட்டுரை எண் 1392              J . Yaseen imthadhi      Bismillahir Rahmanir Raheem                            ***** கணவன் இறந்த பிறகு மனைவியே நான்கு மாதம் பத்து நாட்கள் மட்டும் துக்கம் கடைபிடிக்க இஸ்லாம் அனுமதி வழங்கி இருக்கும் போது  பாபர் பள்ளிவாசல்  இடிப்புக்காக இத்தனை வருட போராட்டம் அவசியமற்றது மார்க்கத்திற்கு எதிரானது என்ற ரீதியில் ஒரு பதிவு சிலர்களால் பரப்பப்படுகிறது இயக்கங்கள் மீது சிலருக்கு  ஏற்பட்ட அதிருப்தி எந்தளவுக்கு அவர்களை மார்க்க விசயத்தில்  அறிவீனமாக சிந்திக்க வைக்கிறது என்பதற்கு இதுவும் சான்று பாபர் மஸ்ஜித் இடிப்பு தினத்தில் முஸ்லிம் சமூகத்தின்  கண்டனத்தை அரசுக்கு  வெளிப்படுத்துவதற்கும் ( கணவன் இறப்பு)  இத்தாவுக்கும் என்ன சம்மந்தம்  ? பாபர் மஸ்ஜிதை அநியாயமாக இடித்த கயவர்களும் அதற்கு உறுதுணையாக இருந்த அரசும் முஸ்லிம் சமுதாயத்தின் வெறுப்பை இந்த விசயத்தில் எப்போதும் மறந்து விட கூடாது என்பதற்கும் மீண்டும் அது போல் ஒரு நிகழ்வு  நடப்பதை முஸ்லிம்கள் ஜீரணிக்க