பஜ்ரும் சஹாபாக்களும்

             பஜ்ரு தொழுகை
   சஹாபாக்களும் நம்மவர்களும்
                 *****************
            J . Yaseen imthadhi
     Bismillahir Rahmanir Raheem
                           *****
சஹாபாக்கள் காலத்தில் தட்டி எழுப்பும் அலாரங்களை கொண்ட கடிகாரங்கள் இல்லை

SNOOGE  அலாரம் வைக்கும் ஆந்த்ராய்ட் மொபைல்களும் இல்லை

கால் செய்து தட்டி எழுப்பும் தொலைபேசிகளும் இல்லை

பாங்கோசை தொலைததூர காதுகளை பிளக்க வைக்கும் ஆம்பிளிபயர் ஸ்பீக்கர் செட்களும் இல்லை

ஆனாலும் பஜ்ரு தொழுகையை நிறைவேற்ற சலிப்படைந்த சஹாபாக்களின் பட்டியலே இல்லை

சூரியன் உதிக்கும் வரை இறைவனை மறந்து உறங்கி கொண்டிருந்தார்கள் என்ற ஒரு தகவலும்  இல்லை

சஹாபாக்களின் புகழை பாடும் இன்றைய முஸ்லிம் சமூகத்தில் பத்து நபர்களில் மூன்று நபர்கள் கூட பஜ்ரு தொழுகைக்காக எழும்புவோர் இல்லை

பஜ்ரு தொழுகை தவறி விட்டதே என்று வருந்துவோரும் இல்லை

இஸ்லாம் குடிகொண்ட சஹாபாக்கள் இதயத்தில் ஈமான் நிறைந்திருந்தது

அதே இஸ்லாம் குடிகொண்ட
நம் சமூக மக்களின் இதயத்தில் ஈமான் மட்டுமே தளர்ந்துள்ளது

இதுவே பஜ்ரு தொழுகையை முஸ்லிம் சமூகம் புறக்கணித்து வாழ்வதற்கு மூல காரணம்

عَنْ صَخْرِ نِ الْغَامِدِيِّؓ عَنِ النَّبِيِّ ﷺ: اَللّهُمَّ بَارِكْ لِأُمَّتِي فِي بُكُورِهَا وَكَانَ إِذَا بَعَثَ سَرِيَّةً أَوْ جَيْشاً بَعَثَهَا مِنْ أَوَّلِ النَّهَارِ، وَكَانَ صَخْرٌ رَجُلاً تَاجِرًا، وَكَانَ يَبْعَثُ تِجَارَتَهُ مِنْ أَوَّلِ النَّهَارِ، فَأَثْرَي وَكَثُرَ مَالُهُ.

رواه ابو داؤد، باب في الابتكار في السفر، رقم:٢٦٠٦

ஹஜ்ரத் ஸக்ர் ஙாமிதிய்யி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்
(اَللّهُمَّ بَارِكْ لِأُمَّتِي فِي بُكُورِهَا)
யாஅல்லாஹ்  என்னுடைய சமுதாயத்தினருக்கு அதிகாலையில் பரக்கத் செய்வாயாக என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் துஆச் செய்துள்ளார்கள்

மேலும், அன்னார் சிறிய படை அல்லது பெரும்படையை அனுப்பிவைக்கும் போது அவர்களைக் காலை நேரத்தில் அனுப்பிவைப்பார்கள்

        நட்புடன்  J . இம்தாதி

Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்