பாபர் மஸ்ஜித் கமிட்டி
பாபர் மஸ்ஜித் கமிட்டியும்
அதிருப்தியும்
*****************
20 :12:2020
J . Yaseen iMthadhi
•••••••••••••••••
அநீதமான தீர்ப்பு என்று தெரிந்த பின்பும் சட்டத்திற்கு அரசியல் சாசனத்திற்கு எதிராக வழங்கப்பட்ட இடத்தில் பாபர் பெயரில் புதிய மஸ்ஜித் கட்ட வேண்டிய அவசியம் என்ன ?
பாபர் மஸ்ஜித் மீட்புக்காக ஒட்டு மொத்த முஸ்லிம்களும் பல தியாகங்களை செய்தது இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்து நீதியை நிலைநாட்டவா ?
அல்லது பாபர் பெயரில் புதிய இடத்தை அரசிடம் இலவசமாக வாங்கி பாபர் பெயரில் பள்ளிவாசல் கட்ட வேண்டும் என்பதற்காகவா ?
வழங்கப்பட்ட நீதி முறையற்றது எனவே எங்களுக்கு புதிய இடம் தேவையில்லை என்று தீர்ப்பு வந்த மறுநிமிடமே நீதிமன்றத்தில் அதிருப்தியுடன் திருப்பி கொடுத்திருந்தால்
பாபர் மஸ்ஜிதுக்காக இத்தனை வருடம் போராடிய மக்களின் சுயமரியாதையை பாபர் மஸ்ஜித் கமிட்டி காப்பாற்றியது என்று பெருமை அடைந்திருக்கலாம்
ஆனால் அதற்கு மாற்றமாக நடந்து விட்டு இப்போது பாபர் பெயரில் புதிய பள்ளிவாசல் கட்டப்போவதாக அறிக்கை எதற்கு ?
யாரை திருப்தி படுத்துவதற்கு ?
இதில் வேடிக்கையான விசயம் என்னவெனில் அந்த புதிய இடத்தில் மியூசியமும் கட்ட போகிறார்களாம்
மியூசியம் என்றாலே வரலாற்று சுவடுகளை உள்ளடக்கியது
பாபர் பெயரில் கட்டப்படும் மியூசியத்தில் எந்த வரலாறை பாபர் மஸ்ஜித் கமிட்டி குறிப்பிட போகிறார்கள்
காவிகள் கூறியது போல்
ஏற்கனவே கட்டப்பட்டு இருந்த ராமர் கோயிலை இடித்து விட்டு தான் பாபர் என்பவர் பள்ளிவாசலை கட்டினார் என்று எழுதப்போகிறார்களா ?
அந்த தவறை செய்ததற்காக காவிகள் 450 வருட பழமை பள்ளிவாசலை இடித்தது சரியே என்று எழுத போகிறார்களா ?
அதற்கு ஆறுதலாக நீதிமன்றம் போட்ட பிச்சை இடத்தில் தான் பாபர் பெயரில் இந்த பள்ளிவாசலை கட்டினோம் என்று மியூசியத்தில் பதிய வைக்க போகிறார்களா ?
தற்போதைய பாபர் மஸ்ஜித் நிர்வாகிகளை போல் இந்தியாவில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களின் நிர்வாகிகளும் இருந்தால்
கூடிய விரைவில் இந்தியாவில் இருக்கும் அனைத்து பழையான பள்ளிகளையும் காவிகளுக்கு தாரை வார்த்து விடுவர் என்றே கருத தோணுகிறது
பாபர் பெயரில் புதிய பள்ளிவாசல் அடிக்கல் நாட்டு விழாவுக்கும் திறப்பு விழாவுக்கும் அமித்ஷாவையும் பிரதமர் மோதியையும் சிறப்பு விருந்தினர்களாக அழைத்தாலும் நமக்கு ஆச்சரியம் இல்லை
காரணம் அந்தளவுக்கு பாபர் மஸ்ஜித் கமிட்டியின் மீது ஆழமான வெறுப்பு ஏற்பட்டுள்ளது
اِنَّمَا يَعْمُرُ مَسٰجِدَ اللّٰهِ مَنْ اٰمَنَ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِ وَاَ قَامَ الصَّلٰوةَ وَاٰتَى الزَّكٰوةَ وَلَمْ يَخْشَ اِلَّا اللّٰهَ فَعَسٰٓى اُولٰۤٮِٕكَ اَنْ يَّكُوْنُوْا مِنَ الْمُهْتَدِيْنَ
அல்லாஹ்வின் மஸ்ஜிதுகளைப் பரிபாலனம் செய்யக்கூடியவர்கள் அல்லாஹ்வின் மீதும் இறுதிநாள் மீதும் ஈமான் கொண்டு தொழுகையைக் கடைப்பிடித்து ஜகாத்தை (முறையாக) கொடுத்து அல்லாஹ்வைத் தவிர வேறு எதற்கும் அஞ்சாதவர்கள்தாம் இத்தகையவர்களே நிச்சயமாக நேர் வழி பெற்றவர்களில் ஆவார்கள்
(அல்குர்ஆன் : 9:18)
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment