பாபர் மஸ்ஜித் விதண்டாவாதம்
பாபர் மஸ்ஜித் விமர்சனமும்
விதண்டாவாதமும்
***********
கட்டுரை எண் 1392
J . Yaseen imthadhi
Bismillahir Rahmanir Raheem
*****
கணவன் இறந்த பிறகு மனைவியே நான்கு மாதம் பத்து நாட்கள் மட்டும் துக்கம் கடைபிடிக்க இஸ்லாம் அனுமதி வழங்கி இருக்கும் போது
பாபர் பள்ளிவாசல் இடிப்புக்காக இத்தனை வருட போராட்டம் அவசியமற்றது மார்க்கத்திற்கு எதிரானது என்ற ரீதியில் ஒரு பதிவு சிலர்களால் பரப்பப்படுகிறது
இயக்கங்கள் மீது சிலருக்கு ஏற்பட்ட அதிருப்தி எந்தளவுக்கு அவர்களை மார்க்க விசயத்தில் அறிவீனமாக சிந்திக்க வைக்கிறது என்பதற்கு இதுவும் சான்று
பாபர் மஸ்ஜித் இடிப்பு தினத்தில் முஸ்லிம் சமூகத்தின் கண்டனத்தை அரசுக்கு வெளிப்படுத்துவதற்கும் ( கணவன் இறப்பு) இத்தாவுக்கும் என்ன சம்மந்தம் ?
பாபர் மஸ்ஜிதை அநியாயமாக இடித்த கயவர்களும் அதற்கு உறுதுணையாக இருந்த அரசும் முஸ்லிம் சமுதாயத்தின் வெறுப்பை இந்த விசயத்தில் எப்போதும் மறந்து விட கூடாது என்பதற்கும்
மீண்டும் அது போல் ஒரு நிகழ்வு நடப்பதை முஸ்லிம்கள் ஜீரணிக்க மாட்டார்கள் என்பதற்கும் வெளிப்படுத்தும் கண்டனமே டிசம்பர் 6 போராட்டம்
இத்தோடு இத்தா நாட்களை தொடர்பு படுத்தி டிசம்பர் 6 போராட்டத்தை கண்டிப்பது மார்க்கத்தை முறையாக விளங்காததின் விளைவும் இயக்கங்களின் மீது அவர்களுக்கு ஏற்பட்டுள்ள வெறுப்பும் தான் காரணம்
தீமைகளை காணும் போது
அதை நான்கு மாதம் பத்து நாட்கள் மாத்திரம் எதிர்க்க வேண்டும் அதன் பிறகு அந்த தீமையை கண்டிக்க கூடாது என்று உளருவதை போல் தான் இவர்களின் நிலைபாடு உள்ளது
இத்தனை வருடம் பாபர் மஸ்ஜித் இடிப்பை எதிர்த்து போராடியும் என்ன பலன் ? என்பதும் கூட குருட்டுத்தனமான வாதம்
ஒரு தீமையை எதிர்ப்பதும் நன்மையை ஏவுவதும் மறுமை பலனை எதிர்பார்த்து தானே தவிர உலக நன்மையை எதிர் பார்த்து அல்ல
உலகில் போராட்டங்களால் பயனும் ஏற்படலாம் ஏற்படாதும் போகலாம்
சமூகவலைதளங்களில் இது போல் வெற்று அறிக்கைகளை போட்டு கொண்டு இயக்கங்களை தலைவர்களை குறை கூறுவதையே தஃவா என்று கருதும் இவர்கள்
இயக்கங்கள் சமூகத்திற்கு செய்துள்ள நற்பணிகளில் கால் பகுதியை கூட தங்கள் வாழ்வில் நடைமுறை படுத்தி இருக்க மாட்டார்கள்
அல்லது ஏதாவது ஒரு இயக்கத்தின் மீது மோகம் கொண்டு சில காலம் அந்த இயக்கத்திற்காக வேலை செய்து அதன் பின் அந்த இயக்கத்தின் மூலம் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்டு வெளியேறியோ அல்லது அந்த இயக்கத்தால் வெளியேற்றப்பட்டு விரக்தியில் புலம்பி கொண்டிருப்பார்கள்
இவர்களின் அறிக்கைகளை இவர்களே தனது தனிப்பட்ட விசயங்களில் செயல்படுத்துவது இல்லை என்பதை அவர்களை சுற்றியுள்ள மக்களிடம் நேரடியாக சென்று விசாரிப்போர் தெளிவாக அறிய முடியும்
وَلَوْلَا دَ فْعُ اللّٰهِ النَّاسَ بَعْضَهُمْ بِبَـعْضٍ لَّهُدِّمَتْ صَوَامِعُ وَبِيَعٌ وَّصَلَوٰتٌ وَّمَسٰجِدُ يُذْكَرُ فِيْهَا اسْمُ اللّٰهِ كَثِيْرًا وَلَيَنْصُرَنَّ اللّٰهُ مَنْ يَّنْصُرُهٗ اِنَّ اللّٰهَ لَقَوِىٌّ عَزِيْزٌ
மனிதர்களில் சிலரைச் சிலரைக் கொண்டு அல்லாஹ் தடுக்காதிருப்பின் ஆசிரமங்களும் கிறிஸ்தவக் கோயில்களும் யூதர்களின் ஆலயங்களும் அல்லாஹ்வின் திரு நாமம் தியானிக்கப்படும் மஸ்ஜிதுகளும் அழிக்கப்பட்டு போயிருக்கும் அல்லாஹ்வுக்கு எவன் உதவி செய்கிறானோ அவனுக்கு திடனாக அல்லாஹ்வும் உதவி செய்வான்
நிச்சயமாக அல்லாஹ் வலிமை மிக்கோனும் (யாவரையும்) மிகைத்தோனுமாக இருக்கின்றான்
(அல்குர்ஆன் : 22:40)
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment