வாழ்த்தும் மறுப்பும்

     
           வாழ்த்தும் மறுப்பும்
               வீண் விவாதம்

                      ***********
            கட்டுரை எண் 1394
             J . Yaseen imthadhi
     Bismillahir Rahmanir Raheem
                           *****

மற்றவர்கள்  அவர்களின் பண்டிகைகளை  கொண்டாடும் பொழுதெல்லாம் இஸ்லாத்தில் இது கூடாது என்று  சட்டம் பேசுவதும்

மற்றவர்களின் சடங்கு சம்பிரதாயங்களுக்கு அவர்களே இவர்களின்  வாழ்த்துக்களை கண்டு கொள்ளாத நிலையிலும் தவறாது வாழ்த்து பதிவுகளை போட்டு தங்களை மதநல்லிணக்க புனிதர்களாக காட்டி கொள்வதும் முகநூலில் சில முஸ்லிம்களிடம் வாடிக்கையாக காண முடிகிறது

அழைப்பு பணியை யாருக்கு செய்ய வேண்டும்  ?
எந்த சூழலில் செய்ய வேண்டும்  ?
எந்த தோரணையில் செய்ய வேண்டும்  ?
என்ற அடிப்படை ஞானம் இல்லாததே இதற்கு காரணம்

சுருக்கமாக சொன்னால் தங்களது பண்டிகை நாட்களில் முஸ்லிம்களுக்கு விமர்சனம் செய்வதே வேலை என்று  மாற்றார்கள் முகம் சுளிக்கும் விதத்தில் தான் இவர்களின் அறியாமை பதிவுகள் உள்ளது

இதனால் ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்தையும் மாற்றார்கள் விமர்சிக்கும் சூழல் தான் எற்பட்டு வருகிறது

ஒரு சாராரின் பெருநாளுக்கு மறு சாரார் வாழ்த்து சொல்வது அவசியமில்லை என்றாலும்
நம் நாட்டை பொருத்தவரை அது சடங்காகவும் உள்ளம் சாராத வெற்று  வார்த்தையாகவும் தான் உள்ளது

பக்ரீதுக்கு மாற்றார்கள் வாழ்த்து சொல்வதால் நபி  இப்ராஹீம் (அலை) அவர்களின் கொள்கை தான் சரி என்று அவர்கள் ஒப்புக்கொண்டதாகவும் முஸ்லிம்களும் புரிந்து கொள்வதில்லை

மாற்றார்களின் விழாக்களுக்கு முஸ்லிம்களில் சிலர் வாழ்த்து சொல்வதால் அவர்களின் கொள்கையை முஸ்லிம்களும்  ஒப்பு கொண்டார்கள் என்று மாற்றார்களும் புரிந்து கொள்வதில்

சுருங்க சொன்னால் இரு சாராரின் வாழ்த்து பதிவுகளும் வெறுமனே வார்த்தை ஏமாற்று மட்டும் தான்

இதில் இஸ்லாத்தை நுழைத்து ஈமானை பற்றி விவாதிப்பது அவசியமில்லாத ஒன்று

ஈமானுக்கு எதிராக ஒரு முஸ்லிம் தனது வாழ்த்தை வெளிப்படுத்தினால் அந்த முஸ்லிம் தான் இஸ்லாத்தை படிக்க வேண்டுமே தவிர
மாற்றார்களின் கொள்கையை முஸ்லிமின் அறிவீனத்தை வைத்து விமர்சிப்பது மாற்றார்களின்  சிந்தனையை நிச்சயம்  தூண்டாது

பிறர்கள் பண்டிகைகளை கொண்டாடும் சந்தர்ப்பத்தில் அவர்களுக்கு நபியவர்கள் வாழ்த்து சொல்லியதும் இல்லை

பிறர்கள் அவர்களின் பண்டிகைகளை கொண்டாடும் நேரத்தில் அவர்கள் சார்ந்த  கொள்கையை அந்த சந்தர்பத்தில் நபியவர்கள் சரியா தவறா என்று விமர்சித்து விவாதித்து  கொண்டிருக்கவில்லை


لَـكُمْ دِيْنُكُمْ وَلِىَ دِيْنِ‏

உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம்

       (அல்குர்ஆன் : 109:6)

       நட்புடன்  J . இம்தாதி

Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்