நோயாளியின் மனோநிலை
நோயாளியின் மனோநிலை
..............................
J . YASEEN IMDHATHI
26 :12:2020
***********
மனதின் வலிமையை பொருத்தே நோயின் தாக்கமும் உளைச்சலும் மனித வாழ்வில் நிம்மதியை கூட்டியும் குறைத்தும் காட்டுகிறது
நோய்களின் வகைகள் சிறிதாக அல்லது பெரிதாக இருந்தாலும் அதை அனுபவிக்கும் மனிதனின் மனவலிமையை பொருத்தே அது சாதாரணமாக அபாயமானதாக கருதப்படுகிறது
சாதாரண வயிற்று வலியை பெரிதாக எடுத்து கொண்டு அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்கு பரப்போரும் உண்டு
பெரிதாக கருதப்படும் இதய நோயை சந்தித்தும் அதை எளிமையாக கடப்போரும் உண்டு
நோய் தழுவுகிற போது உடல் பரிசோதனை செய்து பார்க்க முன்னெச்சரிக்கையாக செல்லும் நபர்களும் உண்டு
எவ்வித பாதிப்பும் இல்லாது மாத மாதம் இரத்தப்பரிசோதனை செய்து பார்க்கும் மனநோயாளிகளும் உண்டு
மனித வாழ்வில் நோய் என்பதும் ஒரு அங்கமே
அந்த நோய்களை சந்திக்கும் மனிதன் அவைகளை நினைத்தே நேரத்தை கடத்துவது வாழ்வின் ரசனையை வெறுக்க செய்யும்
விதியின் ஏட்டில் எழுதப்படாத எதுவும் மனிதனை அணுகவும் செய்யாது
விதியின் ஏட்டில் எழுதப்பட்ட எதுவும் மனிதனை அணுகாது கடக்கவும் செய்யாது
இதை மனதில் பதித்து முறையான அணுகுமுறையை பேணுவோம்
وَلَقَدْ اَرْسَلْنَاۤ اِلٰٓى اُمَمٍ مِّنْ قَبْلِكَ فَاَخَذْنٰهُمْ بِالْبَاْسَآءِ وَالضَّرَّآءِ لَعَلَّهُمْ يَتَضَرَّعُوْنَ
(நபியே!) உமக்கு முன்னர் இருந்த சமூகத்தாருக்கும் நாம் (நம்) தூதர்களை அனுப்பினோம் அச்சமூகத்தாரை நோயைக் கொண்டும் வறுமையைக் கொண்டும் பிடித்தோம் அவர்கள் பணிந்து வரும் பொருட்டு
(அல்குர்ஆன் : 6:42)
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment