டிசம்பர் 6
டிசம்பர் 6 பாதுகாப்பு
நாடகம்
*****************
6:12:2020
J . Yaseen imthadhi
Bismillahir Rahmanir Raheem
*****
டிசம்பர் 6 என்றால் பலத்த பாதுகாப்பு என்ற வாய்பாடை எல்லா ஊடகங்களும் 1992 முதல் (2020) இன்றுவரை ஒரே கோட்டில் நின்று பைத்தியகாரர்களை போல் அறிக்கை போட்டு கொண்டுள்ளனர்
சுதந்திர தினவிழா வந்து விட்டாலே உச்சகட்ட பாதுகாப்பு என்று அறிக்கை போடுவதும்
குடியரசு என்று சொன்னாலே பலத்த பாதுகாப்பு என்று அறிக்கை போடுவதும் எப்படி சடங்காக ஊடகம் மாற்றி வைத்துள்ளதோ
அது போலவே டிசம்பர் 6 என்றவுடன் பலத்த பாதுகாப்பு என்று அறிக்கை போட்டு நாட்டு மக்களை அச்சத்தில் ஆழ்த்துவது ஊடகங்களின் கைவந்த கலை
டிசம்பர் 6 அன்று பலத்த பாதுகாப்பு அறிக்கை எதற்கு ? யாருக்கு எதிராக அந்த அறிக்கை ?
யாரை அச்சுறுத்த அந்த அறிக்கை?
மதவெறி எனும் நஞ்சூட்டப்பட்ட பெரும் கூட்டத்தை திரட்டி கொண்டு இறையில்லம் பாபர் மஸ்ஜிதை இடிப்பதற்கு வன்முறையோடு சென்ற காவி கூட்டத்தின் அக்கிரமத்தை தடுப்பதற்கு பலத்த பாதுகாப்பு அறிக்கை ஊடக வெறியர்கள்
பாபர் மஸ்ஜித் இடிப்பை ஒட்டி 3000 முஸ்லிம்களை படுகொலை செய்த காவி மிருகங்களுக்கு எதிராக பாதுகாப்பு கோஷம் போடாத ஊடக வெறியர்கள்
ஏதோ பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டதில் இருந்து ஒவ்வொரு வருடமும் முஸ்லிம்கள் பலவருடம் வன்முறையில் ஈடுபட்டு வருவதை போலவும்
காவிகளை போல் பித்து பிடித்து இந்து மக்களின் கோயில்களை இடித்து முஸ்லிம்கள் சுற்றுவதை போலவும் சித்திரத்தை உண்டாக்க பலத்த பாதுகாப்பு என்று அறிக்கை போடுவது நாட்டு மக்களின் காதுகளில் ஊடகதுறை பூவை சுற்றும் அயோக்கியதனமாகும்
அடுத்தவர்களின் வழிபாட்டு கட்டிடத்தை அபகரித்து இடித்து அதில் கடவுளுக்கு கோயில் கட்டுவதை விட கடவுளை இழிவு படுத்தும் கேவலம் ஏதும் இல்லை
இந்த கேவலத்திற்கு நீதிபதிகளை கைவசப்படுத்தி அரசியல் சாசனத்திற்கு எதிராக தீர்ப்பை வழங்க வைத்து அடிக்கல் நாட்டு விழாவில் ஒரு நாட்டின் பிரதமரே கலந்து கொண்டு பூஜை போட்டு துவக்கி வைத்த அநீதம்
உலக வரலாற்றில் இதுவரை நடக்காத ஒரு அக்கிரமம்
அரசன் அன்று கொல்வான்
கடவுள் நின்று கொல்வான்
என்ற உண்மையை
கடவுள் மெய்பிக்கும் காலம் தூரம் இல்லை
وَلَا يَحْسَبَنَّ الَّذِيْنَ كَفَرُوْۤا اَنَّمَا نُمْلِىْ لَهُمْ خَيْرٌ لِّاَنْفُسِهِمْ اِنَّمَا نُمْلِىْ لَهُمْ لِيَزْدَادُوْۤا اِثْمًا وَلَهُمْ عَذَابٌ مُّهِيْنٌ
இன்னும் அவர்களை (உடனுக்குடன் தண்டிக்காமல்) நாம் தாமதிப்பது (அந்த) இறை நிராகரிப்பவர்களுக்கு நல்லது என்று அவர்கள் கருத வேண்டாம் (தண்டனையை) நாம் அவர்களுக்குத் தாமதப் படுத்துவதெல்லாம் அவர்கள் பாவத்தை அதிகமாக்குவதற்கே தான் ( என்பதை உணருங்கள் ) அவர்களுக்கு இழிவு தரும் வேதனையும் உண்டு
(அல்குர்ஆன் : 3:178)
இப்படிக்கு J . இம்தாதி
Comments
Post a Comment