மறுமை வெற்றிக்கு மூலதனம்

         மறுமை வெற்றிக்கான
                       மூலதனம்

                       ***********
            கட்டுரை எண் 1393
             J . Yaseen imthadhi
     Bismillahir Rahmanir Raheem
                           *****

ஈமான் எனும் நம்பிக்கை கொண்டிருப்பதால்

மார்க்க ஞானம் கூடுதலாக இருப்பதால்

பரம்பரை முஸ்லிமுக்கு பிறந்தவராக இருப்பதால்

எவரும் மறுமையில் வெற்றியை பெற இயலாது

மக்கா நகர் இறை நிராகரிப்பபாளர்களும் இறைவனை நம்பியவர்கள் தான்

சாத்தானும் கூட மனிதனை விட ஞானத்தில் சிறந்தவன் தான்

அதனால் இவர்கள் மறுமை வெற்றியை பெற முடியுமா   ?

மறுமை வெற்றியை தீர்மானிக்கும் மூலத்தில் அமல்கள் தான் முதலிடம் வகிக்கிறது

ஈமானை பற்றி பேசும் அனைத்து குர்ஆன் வசனங்களும் அமல்களை இணைத்தே அறிவுரை கூறுகிறது

அந்த அமல்களில் நம்மை நாம் சுயபரிசோதனை செய்தால் நிச்சயம் நம் மனசாட்சியே நம்மை காரி உமிழும்

وَعَدَ اللّٰهُ الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ‌ ۙ لَهُمْ مَّغْفِرَةٌ وَّاَجْرٌ عَظِيْمٌ‏
ஈமான் கொண்டு. நல்ல அமல்கள் செய்வோருக்கு, மன்னிப்பையும், மகத்தான (நற்)கூலியையும் அல்லாஹ் வாக்களித்துள்ளான்

            (அல்குர்ஆன் : 5:9)

فَمَنْ يَّعْمَلْ مِنَ الصّٰلِحٰتِ وَهُوَ مُؤْمِنٌ فَلَا كُفْرَانَ لِسَعْيِهٖ‌ وَاِنَّا لَهٗ كٰتِبُوْنَ‏
எனவே, எவர் முஃமினாக, நல்ல அமல்களை செய்கிறாரோ அவருடைய முயற்சி வீணாகி விடாது. நிச்சயமாக நாமே அதை (அவருக்காக)ப் பதிவு செய்து வைக்கிறோம்.
(அல்குர்ஆன் : 21:94)

فَاَمَّا الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ فَهُمْ فِىْ رَوْضَةٍ يُّحْبَرُوْنَ‏


ஆகவே, எவர்கள் ஈமான்கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்களைச் செய்தார்களோ அவர்கள், (சுவர்க்கப்) பூங்காவில் மகிழ்விக்கப்படுவார்கள்

       (அல்குர்ஆன் : 30:15)

اِنَّ الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِۙ اُولٰٓٮِٕكَ هُمْ خَيْرُ الْبَرِيَّةِ ‏
நிச்சயமாக, எவர்கள் ஈமான் கொண்டு, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ, அவர்கள் தாம் படைப்புகளில் மிக மேலானவர்கள்

         (அல்குர்ஆன் : 98:7)

          நட்புடன்  J . இம்தாதி

Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்