இலவசங்களை கொச்சைபடுத்தாதீர்

அரசின் இலவசங்களை கொச்சை
                     படுத்தாதீர்

                 *****************
                      19:12:2020
             J . Yaseen iMthadhi
                    •••••••••••••••••
அரசு தரும் இலவசங்களை இழிவாக கருதுவதும்
அரசு மக்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை சரியாக செய்யவில்லை என்பதற்காகவும் நாட்டு மக்களுக்கு அரசு தரும்  இலவசங்களை குறை கூறுவது தேவையற்ற விமர்சனமாகும்

காரணம் அரசின் சார்பாக  இலவசமாக தரப்படும் எந்த ஒன்றும் அரசியல்வாதிகளின் சொந்த பணத்திலோ  தனிப்பட்ட  கட்சியின் பணத்திலோ  அல்ல
மாறாக குடிமக்களின் மூலமாக வசூலிக்கப்படும் வரிப்பணமே அவைகள்

குடிமக்களை பொருத்தவரை வறுமையில் வாடும் மக்களும்  நடுத்தர மக்களும் தான் நம் நாட்டில் சதவிகிதத்தில் அதிகம்

ரேசன் அரிசியை வைத்து குடும்பம் நடத்தும் ஏழ்மை மக்கள் கோடிக்கணக்கில் உள்ளனர்

திருவிழாக்கள் பண்டிகையின் பொழுது அரசு தரும் இலவசங்களை பெற்று அந்நாளை மகிழ்வுடன் கொண்டாடும் மக்களும் நாட்டில்  ஏராளம் உள்ளனர்

இவைகளை கருத்தில் கொள்ளாது அரசின் இலவசங்களை கொச்சை படுத்தும்  எவரும் தேவையுடைய மக்களை தேடி சென்று உதவி  செய்ய முன் வரப்போவதும் இல்லை

இதில் வேடிக்கை என்னவெனில் அரசின் இலவசங்களை கொச்சை படுத்தும் அனைவரும்  அரசின் இலவசங்களை வரிசையில் நின்று வாங்காது இருப்பதும் இல்லை

எதை அவர்களே தனது வாழ்வில்  தவிர்க்க முன் வரவில்லையோ அதன் மூலம்  ஏழ்மை மக்கள் பயன் பெறுவதை சிந்திக்க மறுப்பதும்
ஓட்டுக்காக ஏமாறும் கூட்டம் என்று விமர்சிப்பதும் நம்மை பொருத்தவரை அவசியமற்ற விமர்சனம்

எதையும் விமர்சிப்பது
அறிவு அல்ல
மாறாக விமர்சிக்க வேண்டியவைகளை விமர்சிக்க வேண்டிய சூழலில் நாகரீகமாக விமர்சிப்பதே அறிவார்த்தம்

             நட்புடன் இந்தியன்
                   J . இம்தாதி

Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்