உலமாக்களின் சந்ததிகளே விழித்து கொள்ளுங்கள்
உலமாக்களின் சந்ததிகளே விழித்து கொள்ளுங்கள் *********** கட்டுரை எண் 1391 J . Yaseen imthadhi Bismillahir Rahmanir Raheem ***** உழைத்து பொருளை ஈட்ட வேண்டிய வாலிப பருவத்தை சிந்திக்காது வீணாக கழித்து பொருளாதாரம் தேவை படும் வயதை அடைந்த பின்பு வருந்தும் தந்தையே உலகில் அதிகம் சிறு வயதில் சரியான ஆலோசகரை இழந்த மனிதனும் பெற்றோரின் அரவணைப்பில் வாலிப காலத்தை கழித்த மனிதனும் சிறு வயதில் பெற்றோரை இழந்த மனிதனும் தான் பிற்காலத்தில் இந்நிலையை அதிகம் சந்தித்து கொண்டுள்ளனர் குறிப்பாக உலமாக்களின் குடும்பத்தில் இந்நிலை பல காலமாக நிலைத்து வருகிறது அதனால் தான் தகப்பனை போலவே எவ்வித தொழில் ஞானமும் இல்லாது ஆன்மீக பாதையில் தனது காலத்தை கழித்து மக்கள் தரும் பொருளியலை நம்பியே காலத்தை கடக்கும் தர்ம சங்கடத்தை ஆலீம் குடும்பத்தார் அதிகம் சந்தித்து வருகின்றனர் உலமாக்களின் குடும்பத்தில் அரசாங்க வேலை பார்க்கும் ஒருவரை அல்லது மருத்துவம் படித்து பட்டம் பெற்ற ஒருவரை சொத்துக்களுக்கு உடமை பட்ட ஒருவரை கம்பனிகளுக்கு முதலாளி