மணாளியே மகத்தான மாணிக்கம்
மணாளியே மகத்தான
❤ மாணிக்கம் ❤
🏆🏆🏆🏆🏆🏆
***********
21:11:2020
J . YASEEN IMDHATHI
*************
ஒரு மனிதனுக்கு தனது தாயின் மரணம் எந்தளவுக்கு வருத்தத்தை ஏற்படுத்துமோ அதற்கு நிகரான வருத்தத்தை ஏற்படுத்தும் ஒரே மரணம் மனைவியின் மரணம்
உடலியல் பிணைப்பை தாண்டி உள்ளத்தின் இணைப்பே அந்த வலியின் ரணத்தை இன்னும் வலுப்படுத்தும்
வாழும் போது மனைவியின் பல வேலைகளை தனக்கு செய்யும் கடமையாக கருதிய கணவன் அவளது மரணத்தின் பிறகே அவள் செய்த சிறு வேலையை கூட தியாகமாக நினைத்து தனிமையில் வருந்துவான்
மரண நேரம் வரை மனைவியுடன் இணைந்திருந்த ஒரு கணவனுக்கு அவளது மரணத்திற்கு பிறகு வேறு எவளை மணம் செய்தாலும் முதல் மனைவியின் இடத்தில் ஒரு கால் பகுதியை கூட இரண்டாம் நிலையில் மணம் புரிந்த மனைவியால் கூட பிடிக்க முடியாது
வெளியூர் செல்லும் போது மனைவியின் தொடர் அழைப்பை சலிப்பாக கருதிய கணவன் அவளது மரணத்திற்கு பிறகு உரிமையுடன் தன்னை அழைத்து கண்டிக்க ஆள் இல்லையே என்பதை நினைத்து அனாதையாக கருதுவான்
கணவன் மனைவி என்ற பந்தமே மனித வாழ்வின் மகத்தான மாணிக்கம்
عَنْ اَبِيْ هُرَيْرَةَ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: اَكْمَلُ الْمُؤْمِنِيْنَ اِيْمَانًا اَحْسَنُهُمْ خُلُقَا، وَخِيَارُكُمْ خِيَارُكُمْ لِنِسَائِكُمْ
ஈமான் உடையவர்களில் அழகிய குணம் படைத்தவரே பூரணமான விசுவாசம் (ஈமான்) உடையவர் உங்களில் மிகச் சிறந்தவர் தன் மனைவிமார்களுடன் நன்முறையில் நடந்து கொள்பவரே என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்
நூல் முஸ்னத் அஹ்மத்
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment