சலவாத்தும் மவ்லிதும்
நன்மை தரும் சலவாத்தும்
நரகை தரும் மவ்லிதும்
**********
கட்டுரை எண் 1385
J . Yaseen imthadhi
Bismillahir Rahmanir Raheem
*****
இறைதூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்று தந்த சலவாத்தை வாழ்நாளில் ஒரே முறை படிப்பதின் மூலம் இறைவனிடம் பெற இருக்கும் நன்மையில்
கால் பகுதி நன்மையை கூட எழுதியது யார் என்றே தெரியாத மவ்லீத் புக்கை பத்தாயிரம் முறை பக்திபரவத்தோடு படித்தாலும் பெறவே இயலாது
பித்அத் எப்போதும் வழிகேடே
எந்த வடிவத்தில் இருப்பினும் வழிகேடே
யார் உருவாக்கியதாக இருப்பினும் வழிகேடே
எத்தனை காலமாக இருப்பினும் வழிகேடே
நல்ல நோக்கத்தில் உருவாக்கப்பட்டு இருப்பினும் வழிகேடே
சவாத் என்பது நபிகள் நாயகம்( ஸல்) அவர்களுக்காக இறைவனிடம் நாம் செய்யும் பிராத்தணை
மவ்லீத் என்பது நபிகளாரை முன்னோக்கி நாம் செய்ய கூடிய பிராத்தணை
இந்த உண்மையை அறிந்து கொள்ள பெரிய ஆராய்சியும் தேவை இல்லை
இமாம்களிடம் கேட்டு தான் தெரிய வேண்டும் என்றும் இல்லை
சுபுஹான மவ்லித் தமிழ் மொழி பெயர்ப்பையும் சலவாத்தின் தமிழ் மொழி பெயர்ப்பையும் ஒரு முறை நிதானமாக படித்தாலே புரியும்
சலவாத்தை படித்து நன்மையை பெறுவோம்
மவ்லிதை படித்து நரகை அடையும் மடமையை தவிர்ப்போம்
رُوِيَ عَنِ النبَّيِّ ﷺ أَنَّهُ قَالَ: مَنْ صَلَّي عَلَيَّ صَلاَةً صَلَّي اللهُ عَلَيْهِ بِهَا عَشْرًا وَكَتَبَ لَهُ بِهَا عَشْرَ حَسَنَاتٍ
ஒருவர் என் மீது ஒரு முறை ஸலவாத் கூறினால் அவர் மீது அல்லாஹுதஆலா பத்து ரஹ்மத்துகளைப் பொழிகிறான்
பத்து நன்மைகளை எழுதுகிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
நூல் திர்மிதி
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment