நபி நேசம்


   நபிகளாரை நேசித்தல்
                    ******
     கட்டுரை எண் 1387
        J . Yaseen imthadhi
Bismillahir Rahmanir Raheem
                     *****
உலகில் எந்த மனிதனை நேசிப்பதாக இருந்தாலும் அந்த மனிதனை அவனது தகுதியை விட புகழ்வதை தான் புகழ்பாடுவோரும்  விரும்புகின்றனர்

புகழப்படுபவர்களும் விரும்புகின்றனர்

வரம்பு மீறி புகழ்வதை சுயமரியாதைக்கு இழக்கு என்று புகழ்பவர்களும் உணரவில்லை

புகழப்படுபவரும் அதை அவமானமாக கருதுவது இல்லை

இதற்க்கு எதிர்மறையான குணாதிசயம் கொண்டவர் உலகில்  நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மட்டுமே

வாழ்நாளில் தன்னை கடுமையாக தூற்றுவோரை கண்டு கொள்ளாத நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவர்களை பாசத்துடன் வரம்பு மீறி போற்றியவரை கண்டித்து சொன்ன செய்திகளே இஸ்லாமிய வரலாற்றில் ஏராளம் உண்டு

இறைவனால் சிறப்பிக்கப்பட்ட இறைதூதர் எனும் உயரிய அந்தஸ்த்தை அடைந்தும் தன்னை இறைவனின் அடிமை என்று பிறர்கள் கூறுவதையே அதிகம் விரும்பிய மாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மட்டுமே

மதகுருவின் கால்களை கழுவி குடிப்பதை புனிதமாக கருதும் உலகில் தனக்கு மரியாதை செலுத்தும் விதமாக எழுந்து  நிற்பதை கூட  கடுமையாக கண்டித்த தலைவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மட்டுமே

இந்த எதார்தமான அற்புத வாழ்கையை  உலகிற்கு சொல்ல கடமைபட்ட முஸ்லிம் சமுதாயத்தில் சிலர்

நபிகளாரை வரம்பு மீறி புகழ்வதை பாடுவதை நபியை நேசிப்பதின் அடையாளமாகவும்

நபியை புகழ்வதால் இறைவன் என்னை நரகில் போட்டால் அந்த நரகிலும் நான் நபியை புகழ்வேன் என்று அறீவீனமாக சமூகவலைதளத்தில்  அறிக்கை போடும் அளவு மார்க்கம் அறியாத மூடர்களாகவும் உள்ளனர்

இஸ்லாத்தை புறக்கணித்து மறுமை தண்டனையை பெற இருக்கும் இறை நிராகரிப்பாளனுக்கும்  இஸ்லாத்தை ஏற்று இஸ்லாம் கண்டிக்கும் காரியத்தை செய்து மறுமை தண்டனையை அனுபவிக்கவிருக்கும் இவர்களுக்கும் ஒரு வேறுபாடும் இல்லை

      !! நஊதுபில்லாஹ் !!

مَا كَانَ مُحَمَّدٌ اَبَآ اَحَدٍ مِّنْ رِّجَالِكُمْ وَلٰـكِنْ رَّسُوْلَ اللّٰهِ وَخَاتَمَ النَّبِيّٖنَ  وَكَانَ اللّٰهُ بِكُلِّ شَىْءٍ عَلِيْمًا‏

முஹம்மது(ஸல்) உங்கள் ஆடவர்களில் எவர் ஒருவருக்கும் தந்தையாக இருக்கவில்லை
ஆனால் அவரோ அல்லாஹ்வின் தூதராகவும் நபிமார்களுக்கெல்லாம் இறுதி (முத்திரை)யாகவும் இருக்கின்றார்

மேலும் அல்லாஹ் எல்லாப் பொருள்கள் பற்றியும் நன்கறிந்தவன்

   (அல்குர்ஆன் : 33:40)

قُلْ لَّاۤ اَقُوْلُ لَـكُمْ عِنْدِىْ خَزَآٮِٕنُ اللّٰهِ وَلَاۤ اَعْلَمُ الْغَيْبَ وَلَاۤ اَقُوْلُ لَـكُمْ اِنِّىْ مَلَكٌ‌  اِنْ اَتَّبِعُ اِلَّا مَا يُوْحٰٓى اِلَىَّ‌  قُلْ هَلْ يَسْتَوِى الْاَعْمٰى وَالْبَصِيْرُ‌  اَفَلَا تَتَفَكَّرُوْنَ‏

(நபியே!) நீர் கூறும் என்னிடத்தில் அல்லாஹ்வின் பொக்கிஷங்கள் இருக்கின்றன என்று நான் உங்களிடம் கூறவில்லை

மறைவானவற்றை நான் அறியமாட்டேன்
நிச்சயமாக நான் ஒரு மலக்காக இருக்கின்றேன் என்றும் நான் உங்களிடம் சொல்லவில்லை
எனக்கு (வஹீயாக) அறிவிக்கப்பட்டதைத் தவிர (வேறு எதையும்) நான் பின்பற்றவில்லை

இன்னும் நீர் கூறும் குருடனும் பார்வையுடையவனும் சமமாவாரா? நீங்கள் சிந்திக்க வேண்டாமா?

     (அல்குர்ஆன் : 6:50)

   நட்புடன்  J . இம்தாதி

Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்