உலமாக்களின் சந்ததிகளே விழித்து கொள்ளுங்கள்
உலமாக்களின்
சந்ததிகளே விழித்து
கொள்ளுங்கள்
***********
கட்டுரை எண் 1391
J . Yaseen imthadhi
Bismillahir Rahmanir Raheem
*****
உழைத்து பொருளை ஈட்ட வேண்டிய வாலிப பருவத்தை சிந்திக்காது வீணாக கழித்து பொருளாதாரம் தேவை படும் வயதை அடைந்த பின்பு வருந்தும் தந்தையே உலகில் அதிகம்
சிறு வயதில் சரியான ஆலோசகரை இழந்த மனிதனும் பெற்றோரின் அரவணைப்பில் வாலிப காலத்தை கழித்த மனிதனும் சிறு வயதில் பெற்றோரை இழந்த மனிதனும் தான் பிற்காலத்தில் இந்நிலையை அதிகம் சந்தித்து கொண்டுள்ளனர்
குறிப்பாக உலமாக்களின் குடும்பத்தில் இந்நிலை பல காலமாக நிலைத்து வருகிறது
அதனால் தான் தகப்பனை போலவே எவ்வித தொழில் ஞானமும் இல்லாது ஆன்மீக பாதையில் தனது காலத்தை கழித்து மக்கள் தரும் பொருளியலை நம்பியே காலத்தை கடக்கும் தர்ம சங்கடத்தை ஆலீம் குடும்பத்தார் அதிகம் சந்தித்து வருகின்றனர்
உலமாக்களின் குடும்பத்தில் அரசாங்க வேலை பார்க்கும் ஒருவரை
அல்லது மருத்துவம் படித்து பட்டம் பெற்ற ஒருவரை
சொத்துக்களுக்கு உடமை பட்ட ஒருவரை
கம்பனிகளுக்கு முதலாளி எனும் தரத்தில் ஒருவரை காண்பது என்பது இந்தியாவில் உலகின் எட்டாவது அதிசயம் என்று சொல்லும் நிலையே உள்ளது
இனி வருங்கால சந்ததிகள் இது போன்ற ஒரு அவலத்தை தொடர கூடாது என்பதில் ஆலீம்கள் அதிகம் கவனம் செலுத்துங்கள்
வாலிப பருவத்தை பிள்ளைகள் எட்டும் போதே வாழ்கையின் முன்னேற்ற வழிகளுக்கான தொழில் பக்கம் அவர்களை உத்வேக படுத்துங்கள் அதற்கான அவசியத்தை பிள்ளைகளுக்கு உணர வையுங்கள்
ஆன்மீக பணி அனைவர் மீதும் இஸ்லாம் ஏற்படுத்திய கடமை என்பதையும் பள்ளிவாசல் வேலைகளை கவனிப்பது முஸ்லிம் சமுதாயமுத்தின் மீதும் கடமை என்பதை உணர வைக்க வேண்டும்
ஆன்மீகம் தான் நம் பரம்பரையின் கதி என்ற இயல்பை ஆலீம்களும் புறம் தள்ள வேண்டும்
மார்க்கத்தை அறிவதும் அழைப்பு பணி செய்வதும் மறுமை பயனுக்கே தவிர நம் உலக வாழ்வின் முன்னேற்றத்திற்கு அல்ல
அதை வைத்து முன்னேறவும் முடியாது என்பதை கடந்த கால வரலாறுகள் பறை சாற்றுகிறது
وَلْيَخْشَ الَّذِيْنَ لَوْ تَرَكُوْا مِنْ خَلْفِهِمْ ذُرِّيَّةً ضِعٰفًا خَافُوْا عَلَيْهِمْ فَلْيَتَّقُوا اللّٰهَ وَلْيَقُوْلُوا قَوْلًا سَدِيْدًا
தங்களுக்கு பின்னால் பலஹீனமான சந்ததிகளை விட்டுச் சென்றால் (அவர்களுடைய நிலை என்னவாகும் என்று) அஞ்சுகிறார்களோ அவர்கள் பயந்து
(முன் ஜாக்கிரதை நடவடிக்கைகளை எடுத்துக்) கொள்ளட்டும் மேலும் அல்லாஹ்வை அஞ்சி இதமான வார்த்தைகளையே அவர்கள் சொல்லட்டும்
(அல்குர்ஆன் : 4:9)
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment