நேர்ப்பார்வை

           நேர்ப்பார்வை
                   ----------
      கட்டுரை எண் 1386
        J . Yaseen imthadhi
Bismillahir Rahmanir Raheem
                     *****
எதிலும் நேர்கோடு ( ஸ்டைட் பார்வை) ஒரு மனிதனின் தெளிவுக்கும் துணிவுக்கும்  சான்றாக இருந்தாலும் அந்த தன்மை பலரது எதிர்ப்புக்கும்  வெறுப்புக்கும் அம்மனிதனை தள்ளும் என்பதே நிதர்சனமான உண்மை

தனிமையில் நட்புடன் இருப்பவர்கள் கூட இந்த தன்மையின் காரணத்தால் பல விசயங்களில் தனக்கும் இந்த தன்மை உள்ள மனிதனுக்கும் நேரடி தொடர்பு இல்லாதவரை  போல் சமூகத்தில் தன்னை  காட்டி கொள்ளவே விரும்புவர்

அதிலும் குறிப்பாக சமூகத்தில் அமைப்பில் இயக்கத்தில் தன்னை ஒரு அடையாளமாக காட்டி கொள்ளும் நபர்கள் ( அவர்கள் அறிஞர்களாக இருந்தாலும்)  இவர்களை விட்டு ஒதுங்கியவர்களாக காட்டி கொள்வார்கள்

இது போன்ற சில அம்சம் ஸ்டைட் பார்வை உடைய மனிதனுக்கு வாழ்வில் மைனசாக இருந்தாலும் தீமையான பல காரியங்கள் தீய குணம் உடைய மனிதர்களிடம் இருந்து இந்த அம்சம் முற்றிலும் அந்த மனிதனை காப்பாற்றும்

மறுமையில் மகத்தான நன்மைகளையும் பெற்று தரும்

فَاصْبِرْ لِحُكْمِ رَبِّكَ وَلَا تُطِعْ مِنْهُمْ اٰثِمًا اَوْ كَفُوْرًا‌‏

ஆகவே, உம்முடைய இறைவனின் கட்டளைக்காகப் பொறுமையுடன் (எதிர் பார்த்து) இருப்பீராக அன்றியும் அவர்களில் நின்று எந்தப் பாவிக்கோ அல்லது நன்றியற்றவனுக்கோ நீர் வழிபடாதீர்

    (அல்குர்ஆன் : 76:24)

    நட்புடன்  J . இம்தாதி

Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்