வைத்தால் குடுமி
வைத்தால் குடுமி
அடித்தால் மொட்டை
******
கட்டுரை எண் 1388
J . Yaseen imthadhi
Bismillahir Rahmanir Raheem
*****
வைத்தால் குடுமி
அடிச்சா மொட்டை
இதற்கு சரியான எடுத்து காட்டு சமூக வலைதளத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம்களே
தீபாவளிக்கு நல்வாழ்த்து சொல்ல வேண்டும் என்று தீபாவளியை கொண்டாடும் இந்து மக்களும் முஸ்லிம்களின் அறிக்கைகளை எதிர்பார்ப்பது இல்லை
தீபாவளி நல்வாழ்த்து சொல்லி அறிக்கை போடும் முஸ்லிம்களின் பதிவுகளில் கூட இந்து மக்களின் அங்கீகாரமோ லைக் கமாண்டுகளோ அதிக அளவு இடம் பெறுவதும் இல்லை
தீபாவளி நல்வாழ்த்து போடும் பல முஸ்லிம்களின் பதிவுகளில் முஸ்லிம்கள் தான் மாறி மாறி அறிவீனமாக மார்க்க நெறிகளை மீறி சர்ச்சை செய்து கொண்டுள்ளனரே தவிர முஸ்லிம் அல்லாதவர்கள் அது போன்ற பதிவுகளை கண்டு கொள்வதும் இல்லை என்பதே நிதர்சனம்
இவர்களே வைத்தால் குடுமி கோஷ்டிகள்
முஸ்லிம் அல்லாதோர் கொண்டாடும் பண்டிகைகளில் முஸ்லிம்களுக்கு மட்டுமே உரித்தான ஹலால் ஹராம் விதிமுறைகளை பேசி பிற சமூகத்தின் வெறுப்புகளை ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயத்தின் மீதும் திசை திருப்பி விடும் சில அறிவீனர்களும் உள்ளனர் இவர்களே அடித்தால் மொட்டை கோஷ்டிகள்
இஸ்லாத்தை பொறுத்தவரை முஸ்லிம் அல்லாதவர்கள் கொண்டாடும் சடங்குகளை அறிவுப்பூர்வமாக மாத்திரம் அணுகுமே தவிர வெறுப்புணர்வுடன் அணுகாது
நபிகளார் காலத்திலும் நபிகளார் வாழ்ந்த பகுதியில் முஸ்லிம் அல்லாத மக்கள் அவர்கள் கொண்டாடும் மத சடங்குகளை பின்பற்றியே வந்தார்கள்
இவ்விசயத்தில் நபிகளாரும் அவர்களின் மத உரிமைகளில் இருந்து ஒதுங்கி இருந்தார்களே தவிர அவர்களின் மதவழிபாட்டு முறைகளில் தலையீடு செய்து சர்ச்சை கொண்டிருக்கவில்லை
சுருக்கமாக சொன்னால் மார்க்கத்தை இரண்டாம் நிலையில் தள்ளி வைத்து விட்டு தனது பகுத்தறிவை முன்னிலை படுத்தி சர்ச்சை செய்து கொண்டுள்ள சில மக்களால் தான் ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயத்திற்கும் தொடர்ந்து அவப் பெயர் ஏற்பட்டு கொண்டுள்ளது
وَلَوْلَا دَ فْعُ اللّٰهِ النَّاسَ بَعْضَهُمْ بِبَـعْضٍ لَّهُدِّمَتْ صَوَامِعُ وَبِيَعٌ وَّصَلَوٰتٌ وَّمَسٰجِدُ يُذْكَرُ فِيْهَا اسْمُ اللّٰهِ كَثِيْرًا وَلَيَنْصُرَنَّ اللّٰهُ مَنْ يَّنْصُرُهٗ اِنَّ اللّٰهَ لَقَوِىٌّ عَزِيْزٌ
மனிதர்களில் சிலரைச் சிலரைக் கொண்டு அல்லாஹ் தடுக்காதிருப்பின் ஆசிரமங்களும் கிறிஸ்தவக் கோயில்களும் யூதர்களின் ஆலயங்களும் அல்லாஹ்வின் திரு நாமம் தியானிக்கப்படும் மஸ்ஜிதுகளும் அழிக்கப்பட்டு போயிருக்கும் அல்லாஹ்வுக்கு எவன் உதவி செய்கிறானோ அவனுக்கு திடனாக அல்லாஹ்வும் உதவி செய்வான்
நிச்சயமாக அல்லாஹ் வலிமை மிக்கோனும் (யாவரையும்) மிகைத்தோனுமாக இருக்கின்றான்
(அல்குர்ஆன் : 22:40)
قُلْ يٰۤاَيُّهَا النَّاسُ اِنْ كُنْتُمْ فِىْ شَكٍّ مِّنْ دِيْنِىْ فَلَاۤ اَعْبُدُ الَّذِيْنَ تَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ وَلٰـكِنْ اَعْبُدُ اللّٰهَ الَّذِىْ يَتَوَفّٰٮكُمْ وَاُمِرْتُ اَنْ اَكُوْنَ مِنَ الْمُؤْمِنِيْنَۙ
மனிதர்களே! நீங்கள் என் மார்க்கத்தில் சந்தேகம் கொண்டிருந்தால் அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குபவர்களை நான் வணங்கமாட்டேன்
ஆனால் உங்களை மரணிக்கச் செய்யும் அல்லாஹ்வையே நான் வணங்குகிறேன்
நான் முஃமின்களில் ஒருவனாக இருக்குமாறு ஏவப்பட்டுள்ளேன் என்று (நபியே!) நீர் கூறுவீராக
(அல்குர்ஆன் : 10:104)
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment