இந்திய முஸ்லிம்களின் சமூகபணி
இந்திய முஸ்லிம்களின்
பொதுசேவை
***********
கட்டுரை எண் 1390
J . Yaseen imthadhi
Bismillahir Rahmanir Raheem
*****
நாட்டில் எந்த இழப்பு நடைபெற்றாலும் அல்லது சீற்றமும் இழப்பும் ஏற்பட போவதாக அரசு சார்பாக அதிகாரப்பூர்வமாக முன்னறிவிப்பு செய்யப்பட்டாலும் அந்த இழப்பை சீர் செய்யவும் பாதிக்கப்படுபவர்களுக்கு நிவாரணம் வழங்கவும் முற்கூட்டியே சமுதாயத்தை அறவழிக்கு தயார் செய்து பள்ளிவாசல்களில் அறிவிப்பு செய்து உடனடியாக களத்தில் இறங்குவது முஸ்லிம் சமுதாயம் தான்
சுனாமி பூகம்பம் மழை புயல் கலவரம் போன்ற நாட்டை எதிர் நோக்கிய அனைத்து விதமான பாதிப்புகளுக்கும் இரத்த தானத்திற்கும் முஸ்லிம் சமுதாயத்தின் தியாகமும் பொருளாதாரமும் தான் அதிகம் உதவப்பட்டுள்ளது இன்றும் உதவும் நிலையில் உள்ளது
சுனாமியால் கொத்து கொத்தாக மனித உடல்கள் கடலில் அழுகி ஒதுங்கிய சூழலில் அந்த உடல்களில் அணியப்பட்ட தங்க நகைகளை ஈவு இரக்கம் இல்லாது மனிதாபிமானம் இல்லாது கழட்டி சென்றது ஒரு ஈனக் கூட்டம்
அதே அழுகிய உடல்களை தோள் மீது சுமந்து அதன் குடும்பத்தார்களிடம் ஒப்படைத்து ஒப்பற்ற சேவை செய்த சமூகம் முஸ்லிம் சமுதாயம்
கொரோனா பாதிப்பால் மரணமடைந்த உடல்களை அந்த உடலுக்கு நெருங்கிய உறவுகளாக இருந்த குடும்பத்தார்களே தொடுவதற்கும் கூட அச்சப்பட்டு ஓடி ஒளிந்த சூழலில் அந்த உடல்களை உயிருக்கு அஞ்சாது சுமந்து அவர்களின் ஜதீக முறையில் அடக்கம் செய்யவும் உறுதுணையாக இருந்து சமீபத்தில் மீண்டும் தனது பொதுசேவையை நிலை நாட்டிய சமுதாயம் முஸ்லிம் சமுதாயம்
சுருங்க சொன்னால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசின் நிவாரணம் சென்றடையும் முன்பே முஸ்லிம் சமூகத்தின் உதவிகள் தான் முழுமையாக சென்றடைந்திருக்கும்
இப்படி ஒரு சமுதாயம் எந்த நாட்டில் இருந்தாலும் அந்த சமுதாயத்தை மகிழ்வோடு பாராட்டுவதுடன் பல வித சலுகைகளை அரசே வழங்கி பெருமைபடுத்தி இருப்பார்கள்
ஆனால் இந்தியாவில் மட்டும் தான் முஸ்லிம் சமுதாயம் பல இன்னல்களுக்கு உட்படுத்தப்படுவதோடு சகல உரிமைகளையும் இழந்து குடியுரிமை திருத்த சட்டம் எனும் துரோக சட்டத்தின் மூலம் நாட்டை விட்டே துரத்தி அடிக்க தீவிரமாக அரசே செயல்பட்டு வரும் அவலத்தை சந்தித்து வருகின்றனர்
இவையெல்லாம் தெரிந்தும் முஸ்லிம் சமுதாயம் பொதுசேவை பணிகளில் அதிகம் ஈடுபட ஒரே காரணம் இஸ்லாம் கற்று தரும் மனித நேயமே தவிர இழிச்சவாயதனம் அல்ல
இதை மாற்றுமத அன்பர்கள் புரிந்தால் போதுமானது
اَمْ حَسِبْتُمْ اَنْ تَدْخُلُوا الْجَـنَّةَ وَ لَمَّا يَاْتِكُمْ مَّثَلُ الَّذِيْنَ خَلَوْا مِنْ قَبْلِكُمْ مَسَّتْهُمُ الْبَاْسَآءُ وَالضَّرَّآءُ وَزُلْزِلُوْا حَتّٰى يَقُوْلَ الرَّسُوْلُ وَالَّذِيْنَ اٰمَنُوْا مَعَهٗ مَتٰى نَصْرُ اللّٰهِ اَلَاۤ اِنَّ نَصْرَ اللّٰهِ قَرِيْبٌ
உங்களுக்கு முன்னே சென்று போனவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகள் உங்களுக்கு வராமலேயே சுவர்க்கத்தை அடைந்து விடலாம் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? அவர்களை (வறுமை பிணி போன்ற) கஷ்டங்களும் துன்பங்களும் பீடித்தன அல்லாஹ்வின் உதவி எப்பொழுது வரும் என்று தூதரும் அவரோடு ஈமான் கொண்டவர்களும் கூறும் அளவுக்கு அவர்கள் அலைகழிக்கப்பட்டார்கள்; நிச்சயமாக அல்லாஹ்வின் உதவி சமீபத்திலேயே இருக்கிறது (என்று நாம் ஆறுதல் கூறினோம்)
(அல்குர்ஆன் : 2:214)
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment