பீஜேபி வெற்றி

      பீஜேபியின் தந்திரம்
                     *******
                 9:11:2020
          Yaseen imthadhi
Bismillahir Rahmanir Raheem
                     *****
வாக்குகளை எவ்வாறு தன் கட்சியின்  பக்கம் இணைப்பது என்று சிந்திப்பதை விட

எதிர் அணியினர்கள் சேகரித்து வைத்துள்ள  ஓட்டுக்களை எவ்வாறு பிளப்பது பயனற்றதாக மாற்றுவது என்பதில் தான் பீஜேபியின் முழு  கவனமும் நெடுங் காலமாக  இருந்து வந்துள்ளது அதில் பல வெற்றிகளையும் பெற்றே உள்ளனர்

இந்திய சுதந்திரத்திற்கு எவ்வகையிலும் போராடாத சங்கிகள்
மகாத்மா காந்தியை படுகொலை செய்த சங்கிகள்
வெள்ளையனுக்கு சங்கூதி வளம் பெற்ற சங்கிகள் இந்து சமுதாயத்தின் பல எதிர்ப்புகளுக்கும் அதிருப்திகளுக்கும் உள்ளான  சங்கிகள் ஆட்சியில் எவ்வித சாதனையும் செய்து காட்டாத சங்கிகள்
தேர்தல் களத்தில் வெற்றி பெற்று வருவதற்குரிய காரணத்தில் இதுவும் மிக முக்கிய காரணம்

அதன் விளைவு தான் தேர்தல் நேரங்களில் புதுமையான பல கட்சிகள் தோன்றுவதும்
பாரம்பரிய கட்சிகளில் பிளவு ஏற்படுவதும்
எவ்வித போராட்ட களங்களிலும் தங்களை ஈடுபடுத்தாத தியாகம்  செய்யாத சினிமா கூத்தாடிகள் திடீரென அரசியலில்  களமிறங்குவதும்
முஸ்லிம் பெயரில் சில முனாஃபிக்குகள் பீஜேபி கட்சியில் நுழைவதும் சங்கிலி தொடராக உள்ளது

நல்ல நோக்கத்திற்காக துவங்கப்படும் சில கட்சிகள் கூட பீஜேபியின் பினாமி கட்சி என்ற பொய்யான குற்ற சாட்டுக்குக்கு உள்ளாக்கப்படுவதும்  இதனால் தான்

மனிதனிடம் பதவி மோகமும்  புகழ் மோகமும் நுழைந்து விட்டால் அது  போதை பொருள் ஏற்படுத்தும் ஆபத்தை  விட கூடுதலான ஆபத்தை ஏற்படுத்தி விடும்

இந்நேரத்தில் இம்முறையும் வழமை போல் வெற்று தத்துவங்களையே பேசி நல்ல பல கருத்துக்களை மக்கள் முன் வைக்கும் அரசியல் தலைவர்களையும் சமூக தலைவர்களையும்  விமர்சனம் செய்து  கொண்டிருந்தால் நமது தலையெழுத்தை நிச்சயம் யாராலும் மாற்ற இயலாது

   நட்புடன்  J . இம்தாதி

Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்