Posts

Showing posts from April, 2020

சஹ்ரு நேரத்தை முறையாக்குவோம்

      சஹ்ரு நேரத்தை முறையாக             பயன் படுத்துவோம்                 [][][][][][][][][][][][][][][]                      24- 04 -2020           J . Yaseen iMthadhi     Bismillahir Rahmanir Raheem                        ********** பயிலும்  நேரம் கற்க வேண்டும் தேர்வின் நேரம் கற்றதை எழுத வேண்டும் தேர்வு நேரத்திலும் ஒருவன் படித்து கொண்டிருந்தால் அவன் தேர்ச்சி பெறுவது தோல்வியில் தான் முடியும் சங்கைமிகுந்த ரமலான் மாதத்தில் அமைந்துள்ள சஹ்ரு நேரமும் அவ்வகையை சார்ந்ததே அந்நேரத்தில் நோன்பு நோற்பதற்கு உண்ணும் உணவை பற்றி மட்டுமே அதிகபட்சமாக ஹதீஸ்களில் வழி காட்டல் உள்ளது அதை தாண்டி  இறைவனிடம் மன்றாடி பிராத்திக்கும் பாக்கியம் மிகுந்த நேரமே சஹ்ரு எனும் புனிதமான  நேரம் அந்நேரத்தில் தொலைகாட்சிக்கு முன் அமர்ந்து கொண்டு மார்க்க கேள்வி பதில் போட்டிகளில் கலந்து கொள்வது ஒளிபரப்பு செய்யப்படும் மார்க்க பயான்களை செவியுற்று கொண்டிருப்பது அவசியமற்ற முயற்சியாகும் குறிப்பாக இது போன்ற மனநிலையை மார்க்க அறிஞர்களே பல காலமாக  உருவாக்கி வருவது  ரமலானில் கூடுதலான நன்மையை ஈட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் இரு

கொரோனா ரமலான்

           இவ்வருட ரமலானில்             இதுவும் பாக்கியமே                      [][][][][][][][][][]                       14 -04-2020               J . Yaseen iMthadhi                        ************ ரமலான் மாதத்தில் பள்ளியில்   செய்யும் எல்லா அமல்களையும் ஒரு முஸ்லிம் தனிமையிலும் கூடுதலாகவே செய்ய இயலும் இஃதிகாப் என்ற அமலை தவிர முஸ்லிம் சமூகத்தில் இஃதிகாப் என்ற அமல் தான் அநேகமானவர்களிடம் வழமையாகவே பலவீனம் அடைந்துள்ளது அதை நினைத்து இவ்வருடமாவது கைசேதப்பட்டு இத்தனை வருடம் அமைந்த வாய்ப்பை  பாழாக்கியதை நினைத்து வருத்தம் கொள்ளுங்கள் ஆனால் தற்போது அநேகமானவர்களின் வருத்தம் இந்த ரமலானில்  இஃதிகாப் என்ற வணக்கத்தை செய்ய முடியாத நிலை ஏற்பட்டு விட்டதே என்பதை விட நோன்பு நேரத்தில் பள்ளியில் கஞ்சியை (😒 ) காய்ச்ச முடியலையே  கூட்டு சேர்ந்து நோன்பு திறக்க இயலாமை ஆகி விட்டதே  என்று தான் அதிகமாகவே இருக்கிறது இது வருத்தப்பட கூடிய அளவுக்கு மார்க்கத்தின் இபாதத்துகளில் ஒன்று அல்ல மாறாக அது வழமையான உலக  பழக்கம் தான் வீட்டில் கஞ்சியை ஆக்கினாலும் பள்ளியில் கஞ்சியை ஆக்கினாலும் ஒரு முஸ்லிம் நோற்ற 

தேவையற்ற கோரிக்கை

       தேவையற்ற கோரிக்கையும்           ஆதாரமற்ற முடிவுகளும்                      [][][][][][][][][][]      கட்டுரை எண் 1330- 14-04-2020               J . Yaseen iMthadhi                        ************ எந்த ஒன்றை நம் கைவசத்தில் கட்டுக்குள் வைக்க இயலாது என்று தெளிவாக தெரிகிறதோ எந்த ஒன்றுக்கு நம்மால் முழுமையாக பொறுப்பேற்க இயலாதோ எந்த ஒன்றை நடைமுறை படுத்தாவிட்டால் மார்க்கத்திலும் அதற்கு கேள்வி இல்லையோ எந்த ஒன்றை நடைமுறை படுத்தா விட்டால் மறுமையில் நன்மைகளும் இழக்காதோ எந்த ஒன்றுக்கு பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் நமக்கு அதற்கு ஆதரவாக அரசாங்கத்திடம் தற்போதைய சூழலில் எதிர்ப்பை எத்தி வைக்க இயலாதோ எந்த ஒரு செயல்  மற்ற சமூகமூம் அவர்களின் அவசியமற்ற கோரிக்கைக்கு வழி வகுக்குமோ அது போன்ற விசயத்திற்கு அரசாங்கத்திடம்  அவசியமற்ற கோரிக்கைகளை வைத்து கொண்டிருப்பது தேவையற்ற காரியம் ஆகும் கட்டுப்பாடுகளை மீறி ஆர்வக்கோளாரால் தென்காசியில் சமீபத்தில் பள்ளிவாசலில் நடைபெற்ற தடியடி சம்பவத்தை நினைவில் வைத்து செயல்படுங்கள் தடியடி நடந்த நேரம் முதல் இந்நாள் வரை யாரும் எந்த இயக்கமும் எந்த தலைவர்களும் அந

ஊரடங்கும் ரமலானும்

            ஊரடங்கும் ரமலானில்        முஸ்லிம்களின் நிலைபாடும்                  ♦♦♦♦♦♦♦                                                            கட்டுரை எண் 1329                        بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ                             ★★★★★★★★★★★ ஊரடங்கு ( உலகடங்கு ) சட்டம் நடைமுறையில் இருக்கும் வரை தற்போது எது நடைமுறையோ அதை அப்படியே பின்பற்றி செல்வது தான் அறிவுப்பூர்வமானது ஊரடங்கு நீட்டிக்கப்படும் போது எதிர் வரும் ரமலானில் பள்ளியில் நோன்பு காய்ச்சுவது தடையாகி விடுமோ ரமலானில் பள்ளியில் கூட்டாக இருந்து  நோன்பு  திறப்பது தடையாகிவிடுமோ ரமலானில் இரவு தொழுகையை பள்ளியில்  ஜமாத்தாக தொழ முடியாத நிலை ஏற்படுமோ என்பதெல்லாம் தற்போதைய சூழலில் தேவையற்ற சிந்தனை மேற்கூறிய அனைத்தும் பள்ளியில் தான் நடைமுறைபடுத்த வேண்டும் என்று எந்த கட்டாயத்தையும் இஸ்லாம் நமக்கு போதிக்கவில்லை நல்ல எண்ண அடிப்படையில் சமூக பாதுகாப்பு அடிப்படையில் பள்ளியில் இதுநாள் வரை நடைமுறை படுத்தி வந்த கடமையான தொழுகைகளை ஜும்மா வணக்கத்தையும் கூட கொரோனா தடுப்பு நடவடிக்கையை கருத்தில் கொண்டு தற்காலிகமாக நிறுத்தி வ

டொனால்ட் டிரம்ப்

         அமெரிக்கா ஆணவமும்       இந்தியாவின் நிலைபாடும்                    [][][][][][][][][][][][][]                       08-04-2020               J . Yaseen iMthadhi                        ************ ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை அமெரிக்காவுக்கு வழங்கவில்லை என்றால் அதற்கான பின்விளைவுகளை இந்தியா சந்திக்க நேரிடும் என்று அந்நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்தாா் முடக்குவாதத்திற்கு பயன்படுத்த கூடய ஹைட்ராக்ஸி குளோரோகுயின் என்ற மருந்து கொரோனா வைரஸ் எதிர்ப்புக்கு நேரடி தொடர்பு இல்லாத நிலையிலும் அந்த மருந்தை கொரோனா வைரஸ் தொற்று நோய்கு பயன்படுத்தும் போது வேறு பல பக்க விளைவுகளையும் ஏற்படுத்தலாம்  என்று மருத்துவர்களிடம் மாற்று கருத்து நிலவி வரும் சூழலிலும் அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவிடம் அந்த மருந்தை எதிர் பார்ப்பதில் இருந்து வல்லரசாக தம்பட்டம் அடிக்கும் அமெரிக்கா தற்போது கொரோனா வைரஸ் தாக்கத்தை எதிர் கொள்ள இயலாமல் தனது ஆணவத்தை இழந்து விட்டது என்பதை தெளிவாக உணர்த்துகிறது நட்பில் நெருங்கிய நிலையில் இருக்கும் இந்தியாவோடு தேவையான மருத்துகளை  கேட்பதற்கு அதிகார ஆணவத்தோ

பிரதமருக்கு சவால்

           இந்திய  பிரதமருக்கு             குடிமகனின் சவால்                ♦♦♦♦♦♦♦                                                                      05:04:2020                        بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ                             ★★★★★★★★★★★ கையை தட்டுங்கள் சிமினி  விளக்கை எரிய விடுங்கள்  என்று கோமாளித்தனமான  அறிவிப்புகளை  சொல்லி நாட்டு மக்களை ஏமாளிகளாக கருதும் இந்தியபிரதமர் கொரானோ தொற்று நோய் நடவடிக்கையால் நாட்டு மக்கள் படும் துயரை கண்டு கண்ணீர் வடித்து  படைத்தவனிடம் முறையிடுங்கள் நாட்டு மக்களே  என்று வேண்டுகோள் வைத்திருந்தால் 1700 கோடி இந்திய மக்களில் ஒரு மனிதனின் மனம் உருகிய  பிராத்தணையை இறைவன் ஏற்று கொண்டால் கூட ஒட்டு மொத்த இந்திய மக்களுக்கும் அந்த ஒருவனின் பிராத்தணை இறையருளால் பலன் தந்திருக்கும் நாளுக்கு நாள் கொரானா தொற்று நோயின் பாதிப்புகள் பெருகி கொண்டே  உள்ளது என்று ஒரு புறம்  சொல்லி கொண்டே                               அந்த பாதிப்புகளை  எவ்வாறு சீர் செய்வது ? தடுத்து நிறுத்துவது ? என்று அறிவியல் ஆய்வாளர்கள் திறமை மிகுந்த  மருத்துவர்களை  அழைத்து

சூழலுக்கு ஏற்று நடப்போம்

        சமுதாயமே சூழல்களுக்கு               ஏற்று செயல்படுவீர்                  [][][][][][][][][][][][][]                     04-04-2020               J . Yaseen iMthadhi                        ************ சமுதாய தலைவர்களும் ஜமாத்து நிர்வாகிகளும் உலமாக்களும் தற்போதைய தொற்று நோய் சூழலை கருத்தில் கொண்டு பள்ளிவாசல்  ஜமாத் தொழுகைக்கு செல்வதையும் வெள்ளி குத்பா நிகழ்வுகளையும்  தற்காலிகமாக ஒத்தி வையுங்கள் என்று தெளிவாக அறிவிப்பு செய்ததற்கு பிறகு எதார்த்த சூழ்நிலைகளை உள்வாங்காது அரிதாக சில நபர்கள்  தேவையற்ற பிரச்சனைகள் உருவாகுவதற்கு வழி வகுப்பது சமுதாயத்திற்கு  அவப்பெயரையும் பதில் சொல்ல முடியாத தர்மசங்கடத்தையும்  ஏற்படுத்தி வருகிறது ஒரு சிலரின் தவறான அணுகுமுறை ஒட்டு மொத்த இஸ்லாமிய சமூகத்தையும் ஏளனப் பார்வையில் பார்ப்பதற்கும் மதவெறி சங்கிகள் முஸ்லிம் சமூகத்தை  தப்பு பிரச்சாரம் செய்வதற்கும்  அரசாங்கத்தின் கடுமை போக்கு அதிகரிப்பதற்கும் மூலமாக அமைந்து விடுகிறது இது போன்றோரின் நடவடிக்கையால் ஐந்து நேரம் சொல்லப்பட்டு வரும் பாங்கும் கூட தடுக்கப்படும் சூழலை வகுத்து விடும் என்பதை இனியாவது உணர

பிரதமரின் அறிவிப்பு

              பிரதமரின் வெற்று   அறிவிப்புகளால் நாட்டு மக்கள்                      வேதனை                  [][][][][][][][][][][][][]                       03-04-2020               J . Yaseen iMthadhi                        ************           இந்தியா என்ற அகன்ற பரப்பளவு கொண்ட ஒரு நாட்டின் பிரதமர் நாட்டு மக்களுக்கு முன் பேச போகிறார் என்று சொன்னால் அந்த பேச்சில் நாட்டு மக்களுக்கு நலன் சார்ந்த அறிவிப்புகள் ஆறுதல் கூறும் வார்த்தைகள் குடிமக்களின் வாழ்வுக்கான முன்னேற்றத்தின் அறிவிப்புகள் அமைந்திருக்க வேண்டும் இதில் எதுவுமே இல்லாமல் ஒரு பிரதமரின் அறிவிப்புகள் வெற்று வார்த்தை  போல்  அமைந்தால் அது பிரதமருக்கு மட்டும் அல்ல அந்த நாட்டு குடிமக்களுக்கும் உலகரங்கில் அவமானத்தை தான் ஏற்படுத்தும் கொரானா தொற்று நோய் ஏற்பட்டு நாட்டு மக்கள் வாழ்வாதாரத்திற்கு வழி இல்லாமல் ஊரடங்கு சட்டத்தின் மூலம் உழைப்பதற்கு வழி இல்லாமல் எதிர் காலம் என்னவாகுமோ என்று அச்சத்தோடும் கண்ணீரோடும்  இருக்கும் சூழலில் இரண்டு முறை ஊடகத்தின் மூலம்  பிரதமர் தோன்றி  அறிவித்த அறிவிப்பில் எந்த ஒரு ஆறுதலையும் நாட்டு மக்கள்