சஹ்ரு நேரத்தை முறையாக்குவோம்

      சஹ்ரு நேரத்தை முறையாக
            பயன் படுத்துவோம்

                [][][][][][][][][][][][][][][]
                     24- 04 -2020
          J . Yaseen iMthadhi
    Bismillahir Rahmanir Raheem
                       **********
பயிலும்  நேரம் கற்க வேண்டும் தேர்வின் நேரம் கற்றதை எழுத வேண்டும்

தேர்வு நேரத்திலும் ஒருவன் படித்து கொண்டிருந்தால் அவன் தேர்ச்சி பெறுவது தோல்வியில் தான் முடியும்

சங்கைமிகுந்த ரமலான் மாதத்தில் அமைந்துள்ள சஹ்ரு நேரமும் அவ்வகையை சார்ந்ததே

அந்நேரத்தில் நோன்பு நோற்பதற்கு உண்ணும் உணவை பற்றி மட்டுமே அதிகபட்சமாக ஹதீஸ்களில் வழி காட்டல் உள்ளது

அதை தாண்டி  இறைவனிடம் மன்றாடி பிராத்திக்கும் பாக்கியம் மிகுந்த நேரமே சஹ்ரு எனும் புனிதமான  நேரம்

அந்நேரத்தில் தொலைகாட்சிக்கு முன் அமர்ந்து கொண்டு மார்க்க கேள்வி பதில் போட்டிகளில் கலந்து கொள்வது ஒளிபரப்பு செய்யப்படும் மார்க்க பயான்களை செவியுற்று கொண்டிருப்பது அவசியமற்ற முயற்சியாகும்

குறிப்பாக இது போன்ற மனநிலையை மார்க்க அறிஞர்களே பல காலமாக  உருவாக்கி வருவது  ரமலானில் கூடுதலான நன்மையை ஈட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கும் மக்களை இபாதத்தை விட்டும் தூரமாக்கும் செயலாகும்

எதிர் வரும் ரமலான் பாக்கியத்தை பெறுவதற்கு நாம் உயிருடன் இருப்போமா என்பதை சிந்தித்து தற்போது கிடைத்துள்ள சஹ்ரு எனும்  அரிய வாய்ப்புகளை முறையாக பயன்படுத்துவோம்

எழுத்துக்களையும் பேச்சுக்களையும் பாதுகாக்கும் காலத்தில் வாழும் நாம் மார்க்க உரைகளை சஹ்ரு அல்லாத  நேரங்களில் கூட கேட்கும் வாய்பை ஏற்படுத்தி கொள்ளலாம்

பல வருடமாக இவ்விசயத்தை பல கட்டுரைகளாக ஆடியோ வீடியோவாக விளக்கி வருகிறோம்

ரமலான் சஹ்ரு நேரம்  இல்முடைய  நேரம் அல்ல மாறாக இறைவனிடம் நெருக்கி வைக்கும்  அமல்களை  செய்யும் நேரமாகும்

அவ்வகையில் இதுவும் இவ்வருட நினைவூட்டலே

اَلصّٰــبِرِيْنَ وَالصّٰدِقِــيْنَ وَالْقٰنِتِــيْنَ وَالْمُنْفِقِيْنَ وَالْمُسْتَغْفِرِيْنَ بِالْاَسْحَارِ‏ 

(இன்னும் அவர்கள்) பொறுமையுடையோராகவும் உண்மையாளராகவும் அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்படுவோராகவும், (இறைவன் பாதையில்) தான தர்மங்கள் செய்வோராகவும் (இரவின் கடைசி) ஸஹர் நேரத்தில் (வணங்கி, நாயனிடம்) மன்னிப்புக் கோருவோராகவும் இருப்பர்

     (அல்குர்ஆன் : 3:17)

وَبِالْاَسْحَارِ هُمْ يَسْتَغْفِرُوْنَ‏ 

அவர்கள் விடியற் காலங்களில் (பிரார்த்தனைகளின் போது இறைவனிடம்) மன்னிப்புக் கோரிக் கொண்டிருப்பார்கள்

           (அல்குர்ஆன் : 51:18)

          நட்புடன்  J . இம்தாதி

Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்