சூழலுக்கு ஏற்று நடப்போம்

        சமுதாயமே சூழல்களுக்கு
              ஏற்று செயல்படுவீர்

                 [][][][][][][][][][][][][]
                    04-04-2020
              J . Yaseen iMthadhi
                       ************
சமுதாய தலைவர்களும் ஜமாத்து நிர்வாகிகளும் உலமாக்களும் தற்போதைய தொற்று நோய் சூழலை கருத்தில் கொண்டு பள்ளிவாசல்  ஜமாத் தொழுகைக்கு செல்வதையும் வெள்ளி குத்பா நிகழ்வுகளையும்  தற்காலிகமாக ஒத்தி வையுங்கள் என்று தெளிவாக அறிவிப்பு செய்ததற்கு பிறகு

எதார்த்த சூழ்நிலைகளை உள்வாங்காது அரிதாக சில நபர்கள்  தேவையற்ற பிரச்சனைகள் உருவாகுவதற்கு வழி வகுப்பது சமுதாயத்திற்கு  அவப்பெயரையும் பதில் சொல்ல முடியாத தர்மசங்கடத்தையும்  ஏற்படுத்தி வருகிறது

ஒரு சிலரின் தவறான அணுகுமுறை ஒட்டு மொத்த இஸ்லாமிய சமூகத்தையும் ஏளனப் பார்வையில் பார்ப்பதற்கும் மதவெறி சங்கிகள் முஸ்லிம் சமூகத்தை  தப்பு பிரச்சாரம் செய்வதற்கும்  அரசாங்கத்தின் கடுமை போக்கு அதிகரிப்பதற்கும் மூலமாக அமைந்து விடுகிறது

இது போன்றோரின் நடவடிக்கையால் ஐந்து நேரம் சொல்லப்பட்டு வரும் பாங்கும் கூட தடுக்கப்படும் சூழலை வகுத்து விடும் என்பதை இனியாவது உணருங்கள்

சட்டப்படி நடவடிக்கை எடுங்கள் என்று காவல்துறையை கண்டிப்பதை  போல் தற்போதைய நம் நாட்டின் நிலைக்கு ஏற்று பக்குவமாக நடந்து கொள்ளுங்கள் என்ற காவல்துறையின் அறிவுரைகளையும் ஏற்று செயல்படுங்கள்

நிர்பந்தம் என்ற நிலையை தாண்டி மார்க்கமே இப்படி தான் சொல்கிறது என்ற சில அறிஞர்களின் அறியாமை பத்வாவின் மீதுள்ள கோபமே சமூகத்தில் சிலரை இவ்வாறு தள்ளியுள்ளது

நிர்பந்தமான சூழலில் கடைபிடிக்கும் காரியங்களுக்கு மார்க்கத்தை கொண்டு முலாம் பூசுவதையும் நிறுத்துங்கள்

நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்ட  நிலையில் உள்ளோரை ஈமானுக்கு எதிரானவர்களாக விமர்சிப்பதையும் தவிர்த்து நடந்து கொள்ளுங்கள்

சங்கிகள் கோயில்களில் பூஜை நடத்தவில்லையா சங்கிகள் மத ஊர்வலம் நடத்தவில்லையா என்ற கேள்விகளை தனக்கு தானே எழுப்பி கொண்டு நாட்டின் சட்டத்தை அவமதித்து நடக்கும்  சங்கிகளுக்கும் முஸ்லிம்களுக்கும் வேறுபாடு இல்லை என்று இழிவை ஏற்படுத்தி கொள்ளாதீர்கள்

          நட்புடன்  J . இம்தாதி

Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்