ஊரடங்கும் ரமலானும்
ஊரடங்கும் ரமலானில்
முஸ்லிம்களின் நிலைபாடும்
♦♦♦♦♦♦♦
கட்டுரை எண் 1329
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
★★★★★★★★★★★
ஊரடங்கு ( உலகடங்கு ) சட்டம் நடைமுறையில் இருக்கும் வரை தற்போது எது நடைமுறையோ அதை அப்படியே பின்பற்றி செல்வது தான் அறிவுப்பூர்வமானது
ஊரடங்கு நீட்டிக்கப்படும் போது எதிர் வரும் ரமலானில் பள்ளியில் நோன்பு காய்ச்சுவது தடையாகி விடுமோ
ரமலானில் பள்ளியில் கூட்டாக இருந்து நோன்பு திறப்பது தடையாகிவிடுமோ
ரமலானில் இரவு தொழுகையை பள்ளியில் ஜமாத்தாக தொழ முடியாத நிலை ஏற்படுமோ என்பதெல்லாம் தற்போதைய சூழலில் தேவையற்ற சிந்தனை
மேற்கூறிய அனைத்தும் பள்ளியில் தான் நடைமுறைபடுத்த வேண்டும் என்று எந்த கட்டாயத்தையும் இஸ்லாம் நமக்கு போதிக்கவில்லை
நல்ல எண்ண அடிப்படையில் சமூக பாதுகாப்பு அடிப்படையில் பள்ளியில் இதுநாள் வரை நடைமுறை படுத்தி வந்த கடமையான தொழுகைகளை ஜும்மா வணக்கத்தையும் கூட கொரோனா தடுப்பு நடவடிக்கையை கருத்தில் கொண்டு தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கும் போது மார்க்கமே பள்ளிவாசலில் தான் நடைமுறை படுத்த வேண்டும் என்று வலியுருத்தாத விசயங்களை பற்றி வீண் விவாதம் செய்வதும் ஈமானுக்கே இழுக்கு போல் பாவிப்பதும் அவசியமற்றது
முஸ்லிம் சமுகத்தை குறி வைத்து சங்கிகள் பல அவதூறுகளை பரப்பி கொண்டிருக்கும் இவ்வேளையில் இது போன்ற நமது எதிர்பார்ப்பும் அதை பற்றிய விவாதமும் மேலும் அவர்களின் தப்பு பிரச்சாரத்திற்கு மூலமாக பயன்படுத்த கருவியாக மாற்றப்படுமே தவிர அதனால் எந்த நன்மையும் நம் சமூகத்திற்கு ஏற்படாது
குறிப்பாக பள்ளிவாசலில் நோன்பு கன்ஜியை வைக்கும் போது அதற்கான சமையல்காரரை சுற்றி வேறு நபர்கள் எப்போதும் இருப்பர்
நோன்பு கன்ஜியை வினியோகம் செய்யும் போது அதை வாங்குவதற்கு வருகை தரும் நபர்களும் சமூகவிலகலை நிச்சயம் கடை பிடிக்க மாட்டார்கள்
காவல்துறையின் கவனம் மேலும் பள்ளிவாசலை நோக்கி அமையும் சூழலை தான் ஏற்படுத்தும்
அது காவல்துறைக்கும் சங்கடத்தை தான் ஏற்படுத்தும்
ஊரடங்கு காலத்தில் ஒவ்வொரு குடும்பமும் அவரவர் இல்லத்தில் இருக்கும் போது அவரவர் குடும்பம் அவர்களுக்கான நோன்பு கன்ஜியை வீடுகளில் சமைத்து கொள்வது சிரமமான காரியமும் அல்ல
இவ்விசயத்தில் தமிழக ஜமாஅத்துல் உலமாக்களும் சமுதாய தலைவர்களும் மற்றும் ஜமாத் நிர்வாகிகளும் இப்போதே ஒத்த கருத்தை முடிவு செய்து மக்களுக்கு குழப்பம் இல்லாமல் அறிவிக்க வேண்டும்
அதை ஏற்று கொண்டு ஒட்டு மொத்த முஸ்லிம்களும் செயல்படும் தன்மையை வளர்த்தி கொள்ள வேண்டும்
இன்றைய தினம் (12:04:2020 ) உலகம் முழுவதும் உள்ள கிருஸ்தவ சமூகத்தின் ஈஸ்டர் பண்டிகையை கூட கிருஸ்தவ அன்பர்கள் தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு சமுகவிலகலை கருத்தில் வைத்து கட்டுக்கோப்பாக நடைமுறை படுத்தியும் காட்டியுள்ளனர்
உலகளவில் கடைபிடிக்கப்படும் அரசாங்க அணுகுமுறையை இஸ்லாத்திற்கு எதிரான திட்டம் போன்றும் முஸ்லிம்களுக்கு எதிரான சதிதிட்டம் போன்றும் பாவிக்கும் தவறான எண்ணம் இருந்தால் அதை இப்போதே கலைந்து விட வேண்டும்
எதை நாம் ரமலான் மாதத்தில் பள்ளிவாசல்களில் நடைமுறை படுத்தி கொண்டிருந்தோமோ அவைகளில் எந்த இபாதத்தையும் வீடுகளில் நடை முறை படுத்துவதும் மார்க்கம் அனுமதித்த காரியம் தான்
لَا نُـكَلِّفُ نَفْسًا اِلَّا وُسْعَهَاۤ اُولٰۤٮِٕكَ اَصْحٰبُ الْجَـنَّةِ هُمْ فِيْهَا خٰلِدُوْنَ
எந்த ஓர் ஆத்மாவையும் அதன் சக்திக்குமீறி நாம் சிரமப்படுத்த மாட்டோம்; அவர்கள் சுவனவாசிகளாக இருப்பார்கள் அவர்கள் அதிலேயே என்றென்றும் தங்கியிருப்பார்கள்
(அல்குர்ஆன் : 7:42)
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment