தேவையற்ற கோரிக்கை
தேவையற்ற கோரிக்கையும்
ஆதாரமற்ற முடிவுகளும்
[][][][][][][][][][]
கட்டுரை எண் 1330- 14-04-2020
J . Yaseen iMthadhi
************
எந்த ஒன்றை நம் கைவசத்தில் கட்டுக்குள் வைக்க இயலாது என்று தெளிவாக தெரிகிறதோ
எந்த ஒன்றுக்கு நம்மால் முழுமையாக பொறுப்பேற்க இயலாதோ
எந்த ஒன்றை நடைமுறை படுத்தாவிட்டால் மார்க்கத்திலும் அதற்கு கேள்வி இல்லையோ
எந்த ஒன்றை நடைமுறை படுத்தா விட்டால் மறுமையில் நன்மைகளும் இழக்காதோ
எந்த ஒன்றுக்கு பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் நமக்கு அதற்கு ஆதரவாக அரசாங்கத்திடம் தற்போதைய சூழலில் எதிர்ப்பை எத்தி வைக்க இயலாதோ
எந்த ஒரு செயல் மற்ற சமூகமூம் அவர்களின் அவசியமற்ற கோரிக்கைக்கு வழி வகுக்குமோ
அது போன்ற விசயத்திற்கு அரசாங்கத்திடம் அவசியமற்ற கோரிக்கைகளை வைத்து கொண்டிருப்பது தேவையற்ற காரியம் ஆகும்
கட்டுப்பாடுகளை மீறி ஆர்வக்கோளாரால் தென்காசியில் சமீபத்தில் பள்ளிவாசலில் நடைபெற்ற தடியடி சம்பவத்தை நினைவில் வைத்து செயல்படுங்கள்
தடியடி நடந்த நேரம் முதல் இந்நாள் வரை யாரும் எந்த இயக்கமும் எந்த தலைவர்களும் அந்த மக்களுக்காக குரல் கொடுக்கவும் இல்லை குரல் கொடுக்கவும் மாட்டார்கள்
அவமானங்களை சந்தித்த பின் ஒன்றில் இருந்து விலகுவதை விட அறிவுப்பூர்வமாக சிந்தித்து செயல்படுவது தான் மார்க்கம்
மார்க்கம் வலியுருத்தும் கூட்டு வழிபாடு விசயங்களிலேயே முன்னெச்சரிக்கையை பேணும் நாம் நோன்பு கஞ்சியை பள்ளியில் சமைப்பதை பற்றி விவாதித்து கொண்டிருப்பதும் இவ்வகையை சார்ந்ததே
ரமலான் இரவு தொழுகையை பள்ளிகளில் குறைந்த நபர்கள் தொழுகுங்கள் மற்றவர்கள் வீடுகளில் தொழுது கொள்ளுங்கள் என்று அறிவுரை கூறுவதும் அவசியமற்ற வாதம்
பள்ளிக்கு இரவு தொழுகைக்கு வர வேண்டிய குறைந்த நபர்களை முடிவு செய்வது யார் ?
குறைந்த நபர்களை தாண்டி அதிகமான நபர்கள் வருகை தந்தால் அவர்களில் சிலர்களை வந்த வழியில் திருப்பி அனுப்புவதை யார் பொருப்பேற்று கொள்வது ?
கூட்டு தொழுகையில் சமூக விலகலை கடைபிடித்து ஜமாத் தொழுகையை நிறைவேற்ற உங்களுக்கு எந்த ஹதீஸ் ஆதாரமாக உள்ளது
ஜமாத் தொழுகை அல்லது தனிப்பட்ட தொழுகை இதை தவிர வேறு எந்த ஒரு முறைக்கும் மார்க்கத்தில் வழி காட்டல் இல்லாதது
மார்க்கம் எளிதை நமக்கு வழங்கி இருக்கும் போது அதை சிரமப்படுத்தி கொள்ள வேண்டும் என்று என்ன அவசியம் ஏற்பட்டது ?
முற்கூட்டியே தெளிவாக சிந்தித்து செயல்படுவோம்
يُرِيْدُ اللّٰهُ اَنْ يُّخَفِّفَ عَنْكُمْ وَخُلِقَ الْاِنْسَانُ ضَعِيْفًا
அன்றியும் அல்லாஹ் (தன்னுடைய சட்டங்களை) உங்களுக்கு இலேசாக்கவே விரும்புகிறான் ஏனெனில் மனிதன் பலஹீனமானவனாகவே படைக்கப்பட்டுள்ளான்
(அல்குர்ஆன் : 4:28)
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment