கொரோனா ரமலான்
இவ்வருட ரமலானில்
இதுவும் பாக்கியமே
[][][][][][][][][][]
14 -04-2020
J . Yaseen iMthadhi
************
ரமலான் மாதத்தில் பள்ளியில் செய்யும் எல்லா அமல்களையும் ஒரு முஸ்லிம் தனிமையிலும் கூடுதலாகவே செய்ய இயலும்
இஃதிகாப் என்ற அமலை தவிர
முஸ்லிம் சமூகத்தில் இஃதிகாப் என்ற அமல் தான் அநேகமானவர்களிடம் வழமையாகவே பலவீனம் அடைந்துள்ளது
அதை நினைத்து இவ்வருடமாவது கைசேதப்பட்டு இத்தனை வருடம் அமைந்த வாய்ப்பை பாழாக்கியதை நினைத்து வருத்தம் கொள்ளுங்கள்
ஆனால் தற்போது அநேகமானவர்களின் வருத்தம் இந்த ரமலானில் இஃதிகாப் என்ற வணக்கத்தை செய்ய முடியாத நிலை ஏற்பட்டு விட்டதே என்பதை விட
நோன்பு நேரத்தில் பள்ளியில் கஞ்சியை (😒 ) காய்ச்ச முடியலையே கூட்டு சேர்ந்து நோன்பு திறக்க இயலாமை ஆகி விட்டதே என்று தான் அதிகமாகவே இருக்கிறது
இது வருத்தப்பட கூடிய அளவுக்கு மார்க்கத்தின் இபாதத்துகளில் ஒன்று அல்ல மாறாக அது வழமையான உலக பழக்கம் தான்
வீட்டில் கஞ்சியை ஆக்கினாலும் பள்ளியில் கஞ்சியை ஆக்கினாலும் ஒரு முஸ்லிம் நோற்ற நோன்பை வழக்கம் போல் திருப்தியாக திறக்க இயலும்
அதிலும் சிறப்பாக கூடுதலாக குடும்பத்தோடு நோன்பு திறக்கும் பாக்கியம் தான் இவ்வருடம் ஊரடங்கு நீடிக்கும் வரை கிடைக்க போகிறது
எனவே இதை பெரிதாக அலட்டி கொள்ள தேவையில்லை 😄
இவ்வருடமாவது பிந்திய இரவில் தனியாகவோ அல்லது குடும்பத்துடனோ இணைந்து நீண்ட நேரம் இரவு தொழுகையை இல்லத்தில் நிறைவேற்றிட மனம் வையுங்கள்
வழக்கமாக ரமலான் இரவுகளில் பள்ளிவாசல்களில் இபாதத்துகளை கொண்டு அலங்கரிப்பதை விட பெருநகரங்களில் இஸ்லாமிய வாலிபர்கள் சஹ்ரு நேரம் வரை ஊர் சுற்றி விட்டு அதன் பின் இல்லம் திரும்பும் நிலையை தான் பார்த்து வருகிறோம்
இவ்வருடம் அந்த வீணான நிலையை மாற்றிட ஊரடங்கு சட்டமும் கொரோனாவும் வழி வகுத்துள்ளது
அவ்வகையில் இதுவும் இறைவன் நமக்கு செய்துள்ள மறைமுக பாக்கியமே
சுருக்கமாக சொன்னால் இதுவும் பாக்கியமே என்ற சிந்தனையே நமக்கு உற்சாகத்தை தரும்
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment