பிரதமரின் அறிவிப்பு

              பிரதமரின் வெற்று  
அறிவிப்புகளால் நாட்டு மக்கள்
                     வேதனை

                 [][][][][][][][][][][][][]
                      03-04-2020
              J . Yaseen iMthadhi
                       ************
         
இந்தியா என்ற அகன்ற பரப்பளவு கொண்ட ஒரு நாட்டின் பிரதமர் நாட்டு மக்களுக்கு முன் பேச போகிறார் என்று சொன்னால்
அந்த பேச்சில் நாட்டு மக்களுக்கு நலன் சார்ந்த அறிவிப்புகள் ஆறுதல் கூறும் வார்த்தைகள் குடிமக்களின் வாழ்வுக்கான முன்னேற்றத்தின் அறிவிப்புகள் அமைந்திருக்க வேண்டும்

இதில் எதுவுமே இல்லாமல் ஒரு பிரதமரின் அறிவிப்புகள் வெற்று வார்த்தை  போல்  அமைந்தால் அது பிரதமருக்கு மட்டும் அல்ல அந்த நாட்டு குடிமக்களுக்கும் உலகரங்கில் அவமானத்தை தான் ஏற்படுத்தும்

கொரானா தொற்று நோய் ஏற்பட்டு நாட்டு மக்கள் வாழ்வாதாரத்திற்கு வழி இல்லாமல் ஊரடங்கு சட்டத்தின் மூலம் உழைப்பதற்கு வழி இல்லாமல் எதிர் காலம் என்னவாகுமோ என்று அச்சத்தோடும் கண்ணீரோடும்  இருக்கும் சூழலில் இரண்டு முறை ஊடகத்தின் மூலம்  பிரதமர் தோன்றி  அறிவித்த அறிவிப்பில் எந்த ஒரு ஆறுதலையும் நாட்டு மக்கள் பெறவில்லை

1 கையை தட்டுங்கள்
2 மின் விளக்கை எரிய விடுங்கள்
3 தொற்று நோயை தடுப்பதற்கான  மருந்து கண்டு பிடிக்கபடவில்லை
4 வீட்டிலேயே அடங்கி இருங்கள்
5 குடிமக்களே உதவி செய்யுங்கள்
என்பதை தவிர வேறு எந்த ஒரு அறிவுப்பூர்வமான ஆக்கப்பூர்வமான அறிவிப்பும் இல்லை

தொற்று நோய் தடுப்பதற்கான மருத்துவ உபகரணங்கள் பற்றாகுறையாக உள்ளது  என்று ஒவ்வொரு மாநிலமும் மத்திய அரசிடம் முறையீடு வைத்திருக்கும் சூழலில் அது தொடர்பான எந்த ஆக்கப்பூர்வமான அறிவிப்பும் இல்லை

தொற்று நோயை தடுக்கும் நடவடிக்கைகளில் உலக நாடுகளுக்கு இந்தியா தான் முன்னோடியாக விளங்குகிறது என்று பெருமை அடித்த பிரதமர் எந்த நடவடிக்கைகள் மூலம் உலகநாடுகளை விட இந்தியா இவ்விசயத்தில்  தனித்து விளங்குகிறது என்பதை விளக்கி சொல்வதற்கு ஒரு நடைமுறை  உதாரணத்தை கூட அவரால் காட்ட முடியவில்லை

கொரானா தொற்று நோய் இந்தியாவில் முஸ்லிம்களால் தான் பரவி வருகிறது என்று மனித மிருகங்கள் இதன் மூலமும் இந்திய மக்களின் இதயத்தை துண்டாக்கவும் முஸ்லிம் சமூகத்தை விரோதி போல் சித்தரிக்கவும் கங்கனம் கட்டி வேலை செய்யும் சூழலில் இந்திய நாட்டில் வாழும் முஸ்லிம் சமூகத்திற்கும் பிரதமராக இருக்கும் மோடி அதை கண்டிக்க கூட மனம் இல்லாத மதவாதியாகத்தான் காட்சி அளித்துள்ளார்

மீண்டும் ஒரு அறிக்கையை பிரதமர் தர இருப்பதாக ஊடகங்களில் செய்தி வந்தால் வீடுகளில் பயன்படுத்தும் தொலைகாட்சி பெட்டியை கூட சுக்கு நூறாக  உடைத்து நாட்டு மக்கள் தங்கள் அதிருப்தியை தான் வெளிப்படுத்துவார்கள்

இது போன்ற அர்த்தமற்ற அறிவிப்புகளை தருவதற்கு பிரதமர் தொலைகாட்சியில் தோன்றுவதை விட சினிமாக்களில் இடம் பெறும் நகைச்சுவை காட்சிகளை பார்த்தாவது நேரத்தை வீணாக கழிக்கட்டும்

              இந்திய குடிமகன்
                  J . இம்தாதி



Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்