டொனால்ட் டிரம்ப்

         அமெரிக்கா ஆணவமும்
      இந்தியாவின் நிலைபாடும்

                   [][][][][][][][][][][][][]
                      08-04-2020
              J . Yaseen iMthadhi
                       ************
ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை அமெரிக்காவுக்கு வழங்கவில்லை என்றால் அதற்கான பின்விளைவுகளை இந்தியா சந்திக்க நேரிடும் என்று அந்நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்தாா்

முடக்குவாதத்திற்கு பயன்படுத்த கூடய ஹைட்ராக்ஸி குளோரோகுயின் என்ற மருந்து கொரோனா வைரஸ் எதிர்ப்புக்கு நேரடி தொடர்பு இல்லாத நிலையிலும் அந்த மருந்தை கொரோனா வைரஸ் தொற்று நோய்கு பயன்படுத்தும் போது வேறு பல பக்க விளைவுகளையும் ஏற்படுத்தலாம்  என்று மருத்துவர்களிடம் மாற்று கருத்து நிலவி வரும் சூழலிலும் அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவிடம் அந்த மருந்தை எதிர் பார்ப்பதில் இருந்து வல்லரசாக தம்பட்டம் அடிக்கும் அமெரிக்கா தற்போது கொரோனா வைரஸ் தாக்கத்தை எதிர் கொள்ள இயலாமல் தனது ஆணவத்தை இழந்து விட்டது என்பதை தெளிவாக உணர்த்துகிறது

நட்பில் நெருங்கிய நிலையில் இருக்கும் இந்தியாவோடு தேவையான மருத்துகளை  கேட்பதற்கு அதிகார ஆணவத்தோடு மிரட்டல் விடுத்திருப்பது இந்திய மக்களுக்கு அமெரிக்கா டிரம்பின் மீது ஏற்பட்டுள்ள கோபத்தை  விட  மத்திய அரசின் மீது வெறுப்பையும்  பல சந்தேகங்களையும் எழுப்பியுள்ளது

1 தொற்று நோய் உலகளவில் பரவி வந்த நிலையில் அதற்கு எதிராக நடவடிக்கை எடுத்திருக்க வேண்டிய இந்திய பிரதமர்  மோடி  டொனால்ட் டிரம்பை அழைத்து விருந்து வைத்து டொனால்ட் டிரம்பை தனது உற்ற நண்பன் போலவும் அமெரிக்காவோடு பாசத்தோடு கட்டி புரள்வதை போலவும்  சித்தரிப்பை ஏற்படுத்தியும் டொனால்ட் டிரம்ப் இந்தியாவிடம் தனது தேவையை கேட்கும் நேரத்திலும் அச்சுறுத்தல் தரும்  விதம் மருந்தை கேட்பது எதற்கு  ?

2. வரம்பு மீறி டொனால்ட் டிரெம்ப் கேட்ட விதத்தை கண்டிக்காமலும் டொனால்ட் டிரெம்பின் அச்சுறுத்தலுக்கு பயந்ததை போலவும் அமெரிக்காவுக்கு  மருந்தை அனுப்பி தருவோம் என்று பேடித்தனமாக இந்திய அரசு ஒப்பு கொண்டு அறிக்கை தந்தது ஏன்

டிரெம்பின் ஆணவ எச்சரிக்கை இந்திய குடிமக்கள் அனைவரையும் கோழைகளாக சித்தரித்து  அவமானப்படுத்தும் செயலாகும்

குடிமக்களின் கவுரவத்தை காக்க வேண்டிய மத்திய அரசு இது போன்ற விசயத்தில் அமெரிக்காவிடம்  சுயமரியாதை இழந்து கோழைகளாக மாறி வருவது அவமானத்திற்கு உரிய செயலாகும்

         நட்புடன்  J . இம்தாதி

Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்