பிரதமருக்கு சவால்
இந்திய பிரதமருக்கு
குடிமகனின் சவால்
♦♦♦♦♦♦♦
05:04:2020
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
★★★★★★★★★★★
கையை தட்டுங்கள் சிமினி விளக்கை எரிய விடுங்கள் என்று கோமாளித்தனமான அறிவிப்புகளை சொல்லி நாட்டு மக்களை ஏமாளிகளாக கருதும் இந்தியபிரதமர்
கொரானோ தொற்று நோய் நடவடிக்கையால் நாட்டு மக்கள் படும் துயரை கண்டு கண்ணீர் வடித்து படைத்தவனிடம் முறையிடுங்கள் நாட்டு மக்களே என்று வேண்டுகோள் வைத்திருந்தால்
1700 கோடி இந்திய மக்களில் ஒரு மனிதனின் மனம் உருகிய பிராத்தணையை இறைவன் ஏற்று கொண்டால் கூட
ஒட்டு மொத்த இந்திய மக்களுக்கும் அந்த ஒருவனின் பிராத்தணை இறையருளால் பலன் தந்திருக்கும்
நாளுக்கு நாள் கொரானா தொற்று நோயின் பாதிப்புகள் பெருகி கொண்டே உள்ளது என்று ஒரு புறம் சொல்லி கொண்டே
அந்த பாதிப்புகளை எவ்வாறு சீர் செய்வது ? தடுத்து நிறுத்துவது ? என்று அறிவியல் ஆய்வாளர்கள் திறமை மிகுந்த மருத்துவர்களை அழைத்து ஆலோசனை கூட்டம் நடத்த யோசிக்காமல்
எனது தலைமையின் கீழ் உள்ள இந்தியா கொரானா தடுப்பு நடவடிக்கையில் உலக நாடுகளுக்கு முன்னோடியாக விளங்குகிறது என்று வெட்கமே இல்லாமல் இந்திய குடி மக்கள் காதில் நூறு முளம் பூவை சுற்றுகிறார்
எந்த வகையில் கொரானா தடுப்பு நடவடிக்கையில் மற்ற நாடுகளை விட இந்தியா முன்னோடி என்பதற்கு ஒரே ஒரு நடைமுறை சான்றையாவது பிரதமர் நாட்டு மக்களுக்கு விளக்கி கூற முடியுமா ?
மற்ற நாடுகளை காப்பி அடித்து ஊரடங்கு சட்டம் போட்டதை தவிர்த்து தெரு ஓரங்களில் கொரானா வைரசுக்கு நேரடிய சம்மந்தம் இல்லாத கிருமிநாசினிகளை தெளிப்பதை தவிர்த்து
தடுப்பூசி தற்போது கண்டறியப்படவில்லை என்று ஏனைய நாட்டு அதிபர்கள் அந்நாட்டு மக்களிடம் கைவிரித்தது போல் தனது இயலாமையை ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்ததை தவிர்த்து நாட்டின் எல்லையை தாமதமாக மூடியதை தவிர்த்து
விமானங்களை தாமதமாக நிறுத்தி வைத்ததை தவிர்த்து
வேறு எந்த வகையில் இந்தியா உலக நாடுகளுக்கு மாற்றமாகவும் முன்னுதாரணமாகவும் உள்ளது என்பதை பிரதமர் விளக்க இயலுமா ?
இதை இந்திய குடிமகன் என்ற அடிப்படையில் பிரதமருக்கு சவாலாகவே வைக்கிறேன்
குறைந்த பட்சம் கேரளமாநில முதல்வர் அம்மாநில மக்களுக்கு அறிவித்துள்ள நல்ல பல திட்டங்கள் மற்றும் ஆறுதல் தரும் அறிவிப்புகளில் பத்து சதவிகத்தை கூட இந்தியாவின் பிரதமரால் அறிவிக்க இயலவில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை
கருமாரி ( சாவு ) விழுந்தவன் குடும்பத்தில் ஆறுதல் கூற சென்றவர் அந்த குடும்பத்தார்களுக்கு ஆறுதல் சொல்கிறேன் எனும் பெயரில் கையை தட்டி மகிழ்சியை வெளிப்படுத்துங்கள் லைட்டை ஆப் செய்து விட்டு சந்தோசப்படுங்கள் என்று உளருவதை போல் தான் பிரதமரின் இரு தொலைகாட்சி அறிக்கைகளும் அமைந்து விட்டது
இந்தளவுக்கு பொது ஞானம் இல்லாத ஒருவரை பிரதமராக பெற்றிருப்பது இந்திய குடிமகன் என்ற பார்வையில் அவமானமாக உள்ளது என்பதை விரக்தியோடு தெரிவித்து கொள்கிறேன்
நட்புடன். இந்திய குடிமகன்
J . இம்தாதி
Comments
Post a Comment