தர்ஹா இணைவைப்பு
ஏகத்துவ கொள்கை **************** கட்டுரை எண் 1532 ************** மனித உடலுக்கு உயிர் எந்தளவு முக்கியமோ அது போல் ஒரு முஸ்லிமின் முக்கியமான ஆணிவேர் நம்பிக்கை ஏகத்துவமாகும் இஸ்லாத்தை நம்புவதற்கு மூல காரணம் அதன் ஏகத்துவ கொள்கையே இறைவன் இருக்கிறான் என்று நம்புவதற்கு பெயரும் ஏகத்துவம் அல்ல இறைவனை வணங்குவதற்கு பெயரும் ஏகத்துவம் அல்ல ஏகத்துவத்திற்கு இதுவே அடிப்படை என்றால் உலகில் நாத்தீகர்களை தவிர அனைத்து மதத்தவர்களும் ஏகத்துவவாதிகளே காரணம் ஆன்மீகவாதிகள் இறைவனை மறுப்பதும் இல்லை வணங்காது இருப்பதும் இல்லை அப்படியெனில் ஏகத்துவம் என்றால் என்ன ? இறைவனால் வழங்கப்பட்ட தூதுத்துவம் ஏகத்துவத்திற்கு கற்பிக்கும் இலக்கணங்களை அச்சு பிசகாது மனஉறுதியுடன் எவ்வித முரண்பாடும் இன்றி மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்வதற்கு பெயரே ஏகத்துவ கொள்கை இணை வைப்பு எனும் மாபாவத்திற்கு இஸ்லாம் கற்பிக்கும் காரணங்களை நஞ்சு போல் வெறுத்து ஒதுக்குவதே ஏகத்துவ கொள்கை ஒரு மனிதன் அறியாமையில் தீண்டினாலும் நெருப்பு சுடும் அறிந்தே தீண்டினாலும் நெருப்பு சுடும் அதே போல