வெள்ளி மேடைகள்

                வெள்ளி மேடைகள் 
                    **************
               கட்டுரை எண் 1531
                   *************

வெள்ளி மேடைகள் யாவும்  
இறைவனுக்கு சொந்தமானதாகும் 

இறைவனின் வார்த்தைகளும் இறைத்தூதரின் போதனைகளும்  எச்சரிக்கைகளுமே அம்மேடையில் தயக்கம் இல்லாது  முழங்கப்பட வேண்டும்

முஸ்லிம் சமூகம் விழிப்புணர்வு பெறுவதற்கும் இறையச்சம் அடைவதற்கும் ஆக்கப்பூர்வமான கருத்துக்கள் நாகரீகமான கண்டனங்கள் பதிவாக்கப்பட வேண்டிய மேடையாகும்

நளினம் என்ற பெயரில் சமூகத்தின் தவறுகளை 
முட்டு கொடுப்பதற்கும் சத்தியம் என்ற பெயரில் மார்க்க வரைமுறைகளை மீறி கடினத்தை மேற்கொள்வதற்கும் வெள்ளி மேடைகள் பயன்படுத்தப்படக்கூடாது 

பள்ளிவாசல் நிர்வாகிகளுக்கு ஏற்று மார்க்கத்தை வலைத்து மூடி மறைத்து திரித்து கூறுவதற்கு 
வெள்ளி மேடைகள் பள்ளிவாசல் நிர்வாகத்தின் தனிப்பட்ட சொத்துக்கள் அல்ல 

கதைகளையும் கப்சாக்களையும் ஆதாரமற்ற தகவல்களையும் தனிமனித துதிபாடல்களையும் இயக்த்தின் பெருமைகளையும் சுன்னத்திற்கு எதிரான பித்அத்துகளையும்  கொட்டி தீர்க்க வெள்ளி மேடைகள் குப்பை தொட்டி அல்ல 

நினைத்த நேரத்தில் சென்று நினைத்த நேரத்தில் வெளியேற வெள்ளி மேடைகள் தங்கும் 
விடுதிகள் அல்ல

இந்த சாரத்தை உள்வாங்காது நெடுங்காலமாக வெள்ளி மேடையை சடங்கு மேடையாகவே 
மாற்றி விட்டனர்

பித்அத்துகளும் அனாச்சாரங்களும் இணை வைத்தல் என்ற கொடும்பாவமும் முஸ்லிம் சமூகத்தை சீரழித்திருப்பதற்கு நபிவழியின் மீது அக்கரை தவறியதற்கும்
வெள்ளி மேடைகள் முறையாக பயன்படுத்தப்படாதது 
மூல காரணமாகும் 

فَاصْدَعْ بِمَا تُؤْمَرُ وَ اَعْرِضْ عَنِ الْمُشْرِكِيْنَ‏

ஆதலால் உமக்குக் கட்டளையிடப் பட்டிருப்பதை வெளிப்படையாக அவர்களுக்கு அறிவிப்பீராக; இணைவைத்து வணங்குபவர்களை புறக்கணித்துவிடுவீராக

(அல்குர்ஆன் : 15:94)

       நட்புடன் J . யாஸீன் இம்தாதி
                           20-9-2024


Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்