சுபுஹான மவ்லிதும் சலவாத்தும்

                      சலவாத்தும் 
     சுபுஹான மவ்லிதும் ஒப்பீடு
             **********************
               கட்டுரை எண் 1529
                    ************

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்காக அவர்களின் உம்மத்துகள் பிரார்த்தனை செய்ய வேண்டும் 
என்ற ஆழமான பாடத்தை கற்பிப்பது சலவாதின் 
மூல கருத்தாகும் 

நபி (ஸல்) அவர்களிடமே தேவைகளை கேட்பதும் பாவங்களை முறையிட்டு   மன்னிப்பு கோருவதும் மனிதன் எழுதிய சுபுஹான மவ்லித் என்ற அரபுபாடலின் மூல கருத்துக்களாகும்


இறைவனின் வல்லமையை தெளிவாக பறைசாற்றுவது 
சலவாதாகும்
இறைவனின் வல்லமை போன்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் வல்லமை இருக்கிறது என்ற இணை வைக்கும் மாபாதகத்தை மறைமுகமாக புகுத்துவது  சுபுஹான மவ்லிதாகும் 


ஒரு முறை சலவாத் படித்தாலும் 
பத்து மடங்கு இறைவன் அருள்புரிகிறான் என்ற நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உத்திரவாதத்தை சுமக்கும் வழிபாடுகளில் ஒன்றே சலவாதாகும்


பல்லாயிரம் முறை பக்தியுடன் படித்தாலும் 
இரண்டு நன்மைகளை கூட பெற இயலாது என்ற நிலையில் இறைவனின் கோபத்திற்கும் சாபத்திற்கும் உள்ளாக்கும் அபாயகரமான  வழிகேடுகளில் ஒன்று 
சுபுஹான மவ்லிதாகும் 



நபிகள் நாயகம் (ஸல் ) அவர்கள் கற்றுத்தந்த சலவாத்தை 
சலவாத் ஷரீப் ( சிறப்பான சலவாத் ) 
என்று சொல்லாத நாவுகள் 
மனிதன் எழுதிய சுபுஹான மவ்லித் என்ற வரம்பு மீறி துதிக்கும் அரபு பாடல்களை  மவ்லீது ஷரீப் சிறப்பான மவ்லிது என்று சொல்வதில் சமூகம் 
 இனிமை கொள்கிறது 


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத்தந்த சலவாத்தை படிப்பதற்கு விலை நிர்ணயிக்கப்படுவது இல்லை 
ஆனால் சுபுஹான மவ்லிதை பக்தியுடன்  படிப்பதற்கும் பல தரத்தில் 
 விலை நிர்ணயிக்கப்படுகிறது 

சலவாத் படிக்கும் போது  பதார்த்தங்கள் எதுவும் புனிதமாகும் என்ற நம்பிக்கை முஸ்லிம் சமூகத்திற்கு  இல்லை 
ஆனால் சுபுஹான மவ்லித் படிக்கும் சபையில் வைக்கப்படும் பதார்த்தங்கள் யாவும் புனிதமான ( சீரணியாக) முஸ்லிம் சமூகத்தால் பார்க்கப்படுகிறது

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத்தந்த சலவாத்தை  புனிதமாக சிறப்பு வணக்கமாக பார்க்கப்படுவது இல்லை 
ஆனால் மனிதன் எழுதிய அரபுப்பாடல் சுபுஹான மவ்லிதை புனிதமாக கருதி இறையில்லங்களிலும்  விஷேசமாக ஓத ஏற்பாடும் செய்யப்படுகிறது 


வழிகேடுகள் முஃமீன்களை 
திசை திருப்பும் என்பதற்கும் 
பித்அத்துகள் சுன்னத்துகளை முடக்கும் என்பதற்கும் 
இணை வைப்பு முஸ்லிம்களை மூடர்களாக்கும் என்பதற்கும்
மனிதன் எழுதிய சுபுஹான மவ்லித் 
முக்கிய சான்றுகளில் ஒன்றாக உள்ளது 


சுன்னத் என்றால் என்ன
பித்அத்துகளின் விபரீதங்கள் என்ன
என்பதை குர்ஆன் சுன்னா பார்வையில் புரிந்து கொள்ள சுயமுயற்சி செய்யாதவர்களுக்கு 
ஆயிரம் அறிவுரைகளை எத்தி வைத்தாலும் 
கடுகளவு உபயோகமும் இல்லை 

என்பதை நினைவூட்டி இப்பதிவை நிறைவு செய்கிறேன் 


قُلْنَا اهْبِطُوْا مِنْهَا جَمِيْعًا ‌‌ فَاِمَّا يَاْتِيَنَّكُمْ مِّنِّىْ هُدًى فَمَنْ تَبِعَ هُدَاىَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُوْنَ‏

நாம் ( ஆதம் நபிக்கு ) சொன்னோம்
நீங்கள் அனைவரும் ( சுவனம் என்ற) இவ்விடத்தை விட்டும்  இறங்கிவிடுங்கள் என்னிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக நல்வழி(யைக் காட்டும் அறிவுரைகள்) வரும்போது யார் என்னுடைய (அவ்) வழியைப் பின்பற்றுகிறார்களோ அவர்களுக்கு எத்தகைய பயமும் இல்லை
அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்

(அல்குர்ஆன் : 2:38)


                           நட்புடன் 
         ஜே.  யாஸீன் இம்தாதி
                          11-9-2024

Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்