மரம்
!! ஒரு மரம் !! -------------- J . யாஸீன் இம்தாதி ========= களைப்பான மனிதர்களுக்கு நிழல் தருகிறது தன்னை சுமக்கும் பூமிக்கு மழை தர காரணமாகவும் அமைகிறது தனது கிளைகளில் பல உயிர்கள் வாழவும் அதன் கூடுகளை அமைக்கவும் மனமார இடம் தருகிறது காணும் கண்களுக்கு எழில் தருகிறது அதன் இருப்பிட வட்டத்தையே அழகு படுத்துகிறது மனிதனின் சுவை உணர்வுக்கு கனி தருகிறது இல்லங்களை அழகாக்கவும் அதன் இறுக்கங்களை மெருகூட்டவும் வலிமை தருகிறது படுகொலை என்பது மனித உயிர்களில் மட்டும் அல்ல காரணம் இன்றி மரங்களை முறிப்பதிலும் அதை சிதைக்கும் செயல் மூலமும் பல நேரம் நிகழ்கிறது மரம் வளர்க்க நீ பாடு பட வேண்டாம் ஆனால் வளர்ந்த மரங்களை நீ ஊனம் ஆக்காது இருந்தாலே போதுமானது அதுவும் ஒரு வகையில் நன்மையே عَنْ جَابِرٍ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: مَا مِنْ مُسْلِمٍ يَغْرِسُ غَرْسًا اِلاَّ كَانَ مَا اُكِلَ مِنْهُ لَهُ صَدَقَةٌ، وَمَا سُرِقَ مِنْهُ لَهُ صَدَقَةٌ، وَمَا اَكَلَ السَّبُعُ مِنْهُ فَهُوَ لَهُ صَدَقَةٌ، وَمَا اَكَلَتِ الطَّيْرُ فَهُوَ لَهُ صَدَقَ